
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 அப்டேட்டில் புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பயனர்கள் தங்களுக்கு தாங்காளாகவே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதுதவிர ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் எனும் புது வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த இரு அம்சங்களும் சோதனை முறையில் மிக சிறிய பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself)
இந்த வசதி மூலம் பயனர்கள் அவர்களின் சொந்த மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதற்கான வசதியை வாட்ஸ்அப் தனித்து காண்பிக்கிறது. சில பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வேறு விதமான சின்க் வசதியை வழங்கி இருக்கிறது. அதாவது அவர்களின் சொந்த நம்பருக்கு குறுந்தகவல் அனுப்பும் போது, இவை ஏற்கனவே லின்க் செய்யப்பட்ட சாதனங்களுடன் சின்க் செய்யப்பட்டு விடும்.
ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட்
க்ரூப் சாட்களுக்குள் க்ரூப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ப்ரோபைல் படத்தை வெளியிடுகிறது. இந்த வசதியை செயல்படுத்த முதலில் க்ரூப் ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஒரே பெயரில் க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றவர்களை ப்ரோபைல் போட்டோவை வைத்து எளிதில் கண்டறிந்து விட முடியும். ஒருவேளை யாரேனும் ப்ரோபைல் போட்டோ வைக்காமல் இருந்தாலோ அல்லது பிரைவசி செட்டிங்கில் அதனை மறைத்து வைத்தாலோ, போட்டோ இல்லாமல் காலியாக உள்ள படம் செட் செய்யப்படும். இதில் குறிப்பிட்ட காண்டாக்டின் முதல் எழுத்து ப்ரோபைல் போட்டோவாக வைக்கப்படும்.
தற்போது மெசேஜ் யுவர்செல்ஃப் மற்றும் ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் அம்சங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 வெர்ஷனிலும் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 22.23.0.70 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர் சோதனைக்கு பின் இரு அம்சங்களும் அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.
கட்டண உயர்வு
இந்நிலையில், கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார்.
ட்விட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், ட்விட்டர் புளூ டிக் சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 8 டாலர்கள் என எலாம் மஸ்க் அறிவித்துள்ளார்.