இனி Whatsappல் அனுப்பிய மெசேஜை கூடத் திருத்தலாம். ‘எடிட் மெசேஜ்’ அம்சம் தொடங்கப்பட்டது.

 

Highlights

  • வாட்ஸ்அப் எடிட் மெசேஜ் அம்சம் பயன்பாட்டுக்கு வந்தது
  • செய்தியைத் திருத்த பயனர்களுக்கு 15 நிமிடங்கள் கிடைக்கும்.
  • வாட்ஸப்பை அப்டேட் செய்வதன் மூலம் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

 

வாட்ஸ்அப் அதன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்திற்கு WhatsApp Edit Message என்று பெயரிட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த புதிய அம்சம் பீட்டா பதிப்பிற்குப் பிறகு அனைவருக்கும் கிடைக்கும். செயலியைப் புதுப்பிப்பதன் மூலம் பயனர்கள் எடிட் வாட்ஸ்அப் அரட்டை அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் செய்தியை எவ்வாறு திருத்துவது

  • நிறுவனத்தின் கூற்றுப்படி, நீங்கள் ஒருவருக்கு ஒரு செய்தியை அனுப்பினால், உங்களுக்கு 15 நிமிடங்கள் நேரம் வழங்கப்படுகிறது.
  • இந்த 15 நிமிடத்திற்குள் நீங்கள் விரும்பினால் அந்த செய்தியை திருத்தலாம்.
  • இதற்கு முதலில், அனுப்பிய செய்தியை நீண்ட நேரம் அழுத்த வேண்டும்.
  • இதன் மூலம் அந்த செய்தியை திருத்துவத்ற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • நீங்கள் விருப்பத்தை கிளிக் செய்தவுடன், WhatsApp செய்திகளை புதுப்பிக்க ஒரு புதிய விண்டோ திறக்கும்.
  • இதற்குப் பிறகு, நீங்கள் அனுப்பிய செய்தியைத் திருத்த முடியும்.

 

 

இந்த ‘எடிட் சாட்’ அம்சத்தை 15 நிமிடங்களுக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் செய்தியைத் திருத்த முடியாது. அதேபோல் வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர்கள் ஒருவருக்கு தவறான செய்தி அனுப்பிவிட்டால், அனைத்தையும் டெலிட் செய்யும் வசதியும் உள்ளது.

இந்த அம்சம் முதலில் WhatsApp பீட்டா பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது இந்த புதிய அம்சம் அனைத்து பயனர்களுக்கும் (Android-iOS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வெளியீடு படிப்படியாக செய்யப்படுவதால், உங்களைச் சென்றடைய நேரம் ஆகலாம். ஆனால், ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோருக்குச் சென்று வாட்ஸ்அப்பைப் புதுப்பிப்பதன் மூலம் இந்த அம்சத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.