வாட்ஸ் அப் செயலி தனது பயனர்களுக்கு புதியதொரு சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய முறை flash calls ஆக இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த flash calls முறை எளிதாகவும் வேகமாகவும் லாகின் செய்ய உதவும்.
Flash calls என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?
Flash calls என்பது வாட்ஸ் அப்பின் புதிய தானியங்கி சரிபார்ப்பு முறை ஆகும். இதனால், 6 இலக்க OTPஐ SMS அல்லது அழைப்பு மூலம் பெற்று நாமே உள்ளிட வேண்டியது இருக்காது.
இந்த முறையில் வாட்ஸ் அப்பில் இருந்து நமது மொபைலுக்கு சிறு மிஸ்டு கால் போன்ற ஓர் அழைப்பு வரும் அதை நாம் எடுத்து பேச வேண்டிய அவசியம் கூட இருக்காது. இதன் மூலம் நமது மொபைல் எண்ணை உறுதி செய்து கொண்டு நமது அக்கவுண்டை உபயோகிக்க அனுமதிக்கும்.
ஆனால் இதற்கு நாம் நமது மொபைலில் Call logஐ வாட்ஸ் அப் உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே வாட்ஸ் அப் உபயோகிக்க, location, call, SMS மற்றும் storage accessஐ அனுமதித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
Public API அனுமதியை ஆப்பிள் அனுமதிக்காத காரணத்தினால் இந்த வசதி IOS பணியாளர்களுக்கு கிடைக்காது.





