வாட்ஸப்பில் இனி உங்க நம்பரை மறைக்கலாம்!


வாட்ஸ்அப் பயனர்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைப்பதற்கான புதிய வசதியை WhatsApp நிறுவனம் சமீபத்தில் செய்தது. அது போன்று, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸப் சேவையானது, புதிய தனியுரிமையை மையமாகக் கொண்ட புது பாதுகாப்பு அம்சத்தில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இது போன்ற ஒரு வசதியை வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரிடமிருந்து உங்களுடைய மொபைல் எண்கள் மறைக்கப்படும்?

வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய வசதியானது, WhatsApp பீட்டா 2.22.17.23 வெர்ஷன் பயன்பாட்டில் உள்ள பயனர்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களை குரூப் இல் உள்ள சில துணைக் குழுக்களிடமிருந்து மொபைல் எண்களை மறைக்க அனுமதிக்கிறது. ஆம், இனி உங்கள் மொபைல் நம்பரை குரூப்பில் உள்ள மற்றவர்களால் பார்க்க முடியாது.

வாட்ஸ்அப் இன் போட்டியாளரான டெலெக்ராம் தளத்தில் இது போன்ற ஒரு அம்சம் செயல்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெலெக்ராம் தளத்தில், பயனர்கள் அவர்களுடைய மொபைல் எண்களை மறைத்துவிட்டு, அவர்கள் விரும்பும் ஒரு யூஸர் பெயரின் மூலம் பாதுகாப்பாக மெசேஜ்ஜிங் தளத்தை பயன்படுத்த டெலெக்ராம் அனுமதிக்கிறது. இது போன்ற ஒரு சேவையைத்தான் வாட்ஸ்அப் தற்போது சோதனை செய்து வருகிறது. ஆனால், இது குரூப்பில் மட்டும் மொபைல் எண்களை மறைக்க அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப்பில் phone number sharing என்ற பெயரில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இது கூகுள் ப்ளே ஸ்டோர் பீட்டா திட்டத்தின் மூலம் இப்போது கிடைக்கிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருப்பதால், சோதனையாளர்களுக்கு தற்போது கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

WABetaInfo இன் அறிக்கையின்படி, Android இல் குறிப்பிட்ட WhatsApp குரூப்களில் இருந்து மொபைல் எண்களை மறைக்க இந்த அம்சம் விரைவில் உங்களை அனுமதிக்கும். இந்த விருப்பம் default ஆக டி-ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு குரூப்பில் சேரும்போது, உங்கள் போன் எண், குரூப்பில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் தானாகவே மறைக்கப்படும். அதேபோல், உங்களின் விருப்பத்தின்படி குறிப்பிட்ட துணைக் குரூப் உடனும் இதை நீங்கள் பகிரலாம்.

குரூப்களுக்கான போன் எண் ஷேரிங் அம்சத்தைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டுடன் WABetaInfo அறிக்கை வெளிவந்துள்ளது. இது வெளிவரத் தொடங்கும் போது, இது எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய யோசனையை பயனர்களுக்கு இந்த ஸ்கிரீன்ஷாட் விபரங்கள் வழங்கியுள்ளது. இது சோதனை கட்டத்தில் இருப்பதனால், இறுதி வெளியீட்டிற்கு முன் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த புதிய அம்சத்துடன் கூடுதலாக, வாட்ஸ்அப் புதிய லாகின் ஒப்புதல் அம்சத்துடன் செயல்பட்டு வருகிறது. இது தவறான பயனர் அணுகுமுறையைத் தடுக்க உதவுகிறது. அசல் பயனர்களைப் பாதுகாக்கும் முறையில் இந்த சேவை செயல்படுவதாக WABetaInfo தெரிவிக்கிறது. வாட்ஸ்அப்பில் கிடைக்கும் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் உடன் இந்த அம்சம் செயல்படும். ஒரு பயனர் வேறு ஸ்மார்ட்போனிலிருந்து WhatsApp கணக்கில் லாகின் செய்யும் போது, பயனர்கள் வாட்ஸ்அப்பில் நோட்டிபிகேஷனை பெறுவார்கள்.

வாட்ஸ்அப் அதன் மெசேஜ்ஜிங் தளத்தில் இன்னும் பல அப்டேட்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வாட்ஸ்அப் பயனர்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸ் விபரங்களை மறைக்க உதவும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் வளர்ச்சியில் இருப்பதாகவும், பீட்டா சோதனையாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மொபைல் நம்பர் மறைக்கப்படும் இந்த அம்சத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?