உங்கள் தனிப்பட்ட Chatகளை யாரும் படிக்க முடியாது; வாட்ஸ்அப்பின் புதிய பாதுகாப்பு அம்சம்

Highlights

  • வாட்ஸ்அப் புதிய சாட் லாக் (Chat Lock) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தனிப்பட்ட அரட்டைகளை (Private Chat) பூட்ட முடியும்.
  • புதிய அம்சம் பயனர்கள் தனிப்பட்ட அரட்டைகளை தனி போல்டரில் (Folder) சேமிக்க அனுமதிக்கிறது.

 

இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் அதன் பயனர்களின் தனியுரிமைக்காக (Privacy)புதிய அரட்டை பூட்டு (Chat Lock) அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தனிப்பட்ட அரட்டைகளை கடவுச்சொல் (Password) மூலம் பூட்ட முடியும். மேலும் பயனர்கள் தனிப்பட்ட அரட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க தனி கோப்புறையில் (Folder) வைக்கலாம். அரட்டை பூட்டு அம்சம் பயனரின் அரட்டையைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் மற்றும் பூட்டப்பட்ட அரட்டைகளை வேறு யாரும் படிக்க முடியாது.

 

WhatsApp அரட்டை பூட்டு (Chat Lock) அம்சம்

Meta நிறுவனத்தின் CEO Mark Zuckerberg, Chat Lock அம்சத்தின் மூலம், பயனர்கள் தனிப்பட்ட அரட்டைகளை லாக் செய்ய கடவுச்சொற்களைப் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார் . அரட்டையை மறைக்க தனி கோப்புறையில் சேமிக்கலாம். லாக் செய்யப்பட்ட அரட்டையில் செய்தி வரும்போது இந்த அம்சம் பயனர் பெயரையும் மறைக்கிறது. WhatsApp படி, இந்த அம்சம் தனியுரிமை (privacy) அம்சத்தின் ஒரு பகுதியாகும். முன்னதாக, பயனர் தனியுரிமையைப் பராமரிக்க மறைந்து போகும் செய்திகள் மற்றும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் ( end-to-end encryption) போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 

இந்த அம்சம் எப்போது கிடைக்கும்?

வாட்ஸப்நிறுவனம் இந்த அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. அரட்டை பூட்டு அம்சம் வரும் நாட்களில் அனைத்து நிலையான ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் வெளிவரத் தொடங்கும்.

அரட்டை பூட்டு (Chat Lock) அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

 

  1. புதிய அம்சத்தைப் பயன்படுத்த WhatsApp இன் சமீபத்திய புதுப்பிப்பைப் பதிவிறக்கவும்.
  2. வாட்ஸப்பைத் திறக்கவும்.
  3. இப்போது நீங்கள் பூட்ட விரும்பும் அரட்டைக்குச் செல்லவும்.
  4. அந்த அரட்டையின் சுயவிவரப் படத்தைத் (profile picture) தட்டவும்.
  5. மறைந்திருக்கும் செய்திகளின் கீழ் புதிய அரட்டை பூட்டு (சாட் லாக்) அம்சத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.
  6. இங்கே நீங்கள் தனிப்பட்ட அரட்டையை (லாக் செய்யலாம்) பூட்டலாம்.

 

லாக் செய்த அரட்டையைத் திறப்பது எப்படி?

 

  1. வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
  2. முகப்பு (Home) பக்கத்திற்கு செல்லவும்.
  3. பூட்டு அரட்டையைத் திறக்க கீழே ஸ்க்ரோல் செய்யவும்.
  4. நீங்கள் திறக்க விரும்பும் அரட்டையைக் கிளிக் செய்யவும்.
  5. பின்னர் உங்கள் தொலைபேசி கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  6. இப்போது அரட்டை திறக்கப்படும்.