புதிதாய் வரும் 5 வசதிகள்! வாட்ஸப் இனி ’வேற மாதிரி’ மாறப்போகுது!

Highlights

  • வாட்ஸ்அப் இன் மொத்த அனுபவத்தை மாற்றும் வகையில் 5 புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • டெக்ஸ் எடிட்டர், புதிய எழுத்து முறைகள் (New Fonts) மேம்படுத்தப்பட்ட கேமரா ஸ்விட்ச், ஹை குவாலிட்டி புகைப்படம் அனுப்புதல், குரூப் இல் அனுப்பப்படும் மெசேஜ் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற பல அம்சங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

வாட்அப் பீட்டா பதிப்பில் சோதனை

வாட்ஸ்அப் எந்தவொரு அம்சத்தையும் அறிமுகம் செய்வதற்கு அதை பீட்டா பதிப்பில் சோதனை செய்வது வழக்கம், அதன்படி தற்போது நிறுவனம் பல்வேறு புது அம்சங்களை பீட்டா பதிப்பில் சோதனை செய்வது வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் WAbetainfo அறிக்கையின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணைய பயனர்களுக்காக புதிய அம்சங்களை உருவாக்கி சோதனை செய்து வருகிறது.

டெக்ஸ்ட் மெசேஜ் எண்ணிக்கை வரம்பு அதிகரிப்பு

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சமீபத்திய பீட்டா அப்டேட்டில், வாட்ஸ்அப் குரூப் இல் அனுப்பப்படும் விளக்கங்களுக்கான (Descriptions) எழுத்து வரம்பை நிறுவனம் அதிகரித்து இருக்கிறது. முன்னதாக இந்த எழுத்து வரம்பு 25 ஆக இருந்த நிலையில் இதன் வரம்பு 100 ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது. அதேபோல் குரூப் இல் அனுப்பப்படும் மெசேஜ் எழுத்துக்களின் எண்ணிக்கை 512 ஆக இருந்த நிலையில் தற்போது இது 2048 ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் டெக்ஸ்ட் எடிட்டர் என்ற அம்சத்தையும் அதனுடன் வரைதல் கருவி (Drawing tool) என்ற அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய வகையில் டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பலாம்

கீபோர்ட் இன் மேலே உள்ள ஃபான்ட் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பும் விருப்பங்கள் கொண்டு வரப்பட இருக்கிறது. அதே போல் டைப் செய்த எழுத்துக்களை இடது, மையம், வலது என்ற பகுதியில் சீரமைத்து (Alignment) செய்து கொள்ளலாம். மேலும் டெக்ஸ்ட் பேக் கிரவுண்ட் கலர்களையும் மாற்றிக் கொள்ளலாம்.

 

New Fonts

கூடுதலாக புதிய எழுத்து முறைகள் (New Fonts) அம்சத்தையும் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. அதன்படி நீங்கள் உங்கள் மெசேஜ்களை புதிய வடிவமைப்பில் வரும் காலங்களில் அனுப்பலாம். மேலும் பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF களில் உங்களுக்கு விருப்பமான டெக்ஸ்ட்களை இணைத்து கொள்ளலாம்.

அசல் தரத்தில் புகைப்படங்கள்

அசல் தரத்தில் புகைப்படங்களை பகிர வாட்ஸ்அப் விரைவில் அனுமதிக்க இருக்கிறது. அதாவது, நீங்கள் இனி புகைப்படத்தை அனுப்புவதற்கு முன் அதன் தரத்தை தேர்ந்தெடுக்க முடியும். இதுகுறித்த WABetaInfo தகவலின்படி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய பீட்டா அப்டேட் 2.23.2.11 இல் ஒரு புகைப்படத்தை அனுப்பும் முன் அதன் தரத்தை தேர்ந்தெடுக்க பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் உயர் தெளிவுத்திறன் அல்லது அசல் தரத்தில் புகைப்படங்களை அனுப்ப முடியும்.

 

3 தரத்தில் புகைப்படங்கள் அனுப்பலாம்

வாட்ஸ்அப் நிறுவனம் முன்னதாக இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டது. சில தினத்திற்கு முன்பு வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.21.15.7 இல் 3 புகைப்பட தர விருப்பங்களை சோதனை செய்தது. அது ஆட்டோமேட்டிக், சிறந்த தரம் மற்றும் டேட்டா சேவர் பயன்முறை ஆகும். இதில் சிறந்த தரம் என்ற விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படம் ஏறத்தாழ அசல் தரத்தில் அனுப்பப்படும், டேட்டா சேவர் விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படம் குறைந்த தரத்தில் அனுப்பப்படும்.