Home News வாட்ஸப் மற்றும் யூடியூபில் புதிய வசதிகள் அறிமுகம்

வாட்ஸப் மற்றும் யூடியூபில் புதிய வசதிகள் அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன் 2.22.23.14/15 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த புது அப்டேட்டில் மல்டி டிவைஸ்-க்கான லாக்-அவுட் ஸ்கிரீன், புகைப்படம், வீடியோ, ஜிஃப் மற்றும் டாக்யுமெண்ட் உள்ளிட்டவைகளை கேப்ஷனுடன் ஃபார்வேர்டு செய்யும் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

லாக்-அவுட் ஸ்கிரீனை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. புதிய லாக்-அவுட் பகுதி வாட்ஸ்அப்-இல் இருந்து லாக்-அவுட் செய்ததும் காண்பிக்கும். செயலியின் செட்டிங்ஸ்-இல் இருந்தபடி இரண்டாவது சாதனத்தில் இருந்து லாக்-அவுட் செய்ய முடியும்.

வாட்ஸ்அப் செட்டிங்ஸ் வழியாக லின்க்டு டிவைசஸ் ஆப்ஷன் மூலம் பிரைமரி போனில் இருந்து டேப்லெட் செஷனை விட்டு வெளியேற முடியும். மேலும் வாட்ஸ்அப் செட்டிங்ஸ்ல் அக்கவுண்ட் ஆப்ஷன்களில் இருந்து நம்பரை மாற்றுவதற்கான “சேஞ்ச் நம்பர்” அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

இத்துடன் புகைப்படம், ஜிஃப், வீடியோ உள்ளிட்டவைகளை ஃபார்வேர்டு செய்யும் போது அவற்றுக்கு தலைப்பிடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தரவுகளை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் தலைப்பை பார்க்க முடியும். இதே வசதி டாக்யுமெண்ட்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு அம்சங்களில் லாக்-அவுட் ஸ்கிரீன் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான வெர்ஷனில் வெளியாகும் முன் இந்த அம்சம் தொடர் சோதனை செய்யப்படும். ‘ஃபார்வேர்டு மீடியா வித் கேப்ஷன்’ அம்சம் பீட்டா பயனர்களில் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று யூடியூபிலும் சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. யூடியூப் செயலியில் புது டிசைன், அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இவை பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

யூடியூப் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலியில் புது தோற்றம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பின்ச்-டு-ஜூம், பிரிசைஸ் சீக்கிங், ஆம்பியண்ட் மோட், டார்க் மோட் மற்றும் பல்வேறு புது பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

யூடியூப் பின்ச்-டு-ஜூம் அம்சம் கொண்டு வீடியோவில் ஜூம் செய்து பார்க்க முடியும். முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த அம்சம் பிரீமியம் பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் தற்போது அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

பிரிசைஸ் சீக்கிங் அம்சம் கொண்டு வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை எளிதில் கண்டறிய முடியும். இந்த அம்சம் ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அம்சம் கொண்டு சீக் பார் அல்லது வீடியோ தம்ப்நெயில் மூலம் வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல்ல முடியும்.

ஆம்பியண்ட் மோட் அம்சம் குறிப்பிட்ட வீடியோவில் உள்ள நிறத்தை அப்படியே ஆப் பேக்கிரவுண்டில் செயல்படுத்தி விடும்.

டார்க் மோட்
அம்சம் முன்பை விட அதிக இருளாக மாறி இருக்கிறது. இந்த அம்சம் மொபைல், வெப் மற்றும் ஸ்மார்ட் டிவிக்களில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சாதனங்களில் AMOLED டிஸ்ப்ளே வைத்திருப்போருக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.