Moto X30 Pro ஸ்மார்ட்போன் தான் 200 எம்பி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 6.67 அங்குல OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. சந்தையில் தங்கள் ஸ்மார்ட்போன் தான் சிறந்ததாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என ஒவ்வொரு நிறுவனங்களும் எடுக்கும் முயற்சி வியப்படைய வைக்கிறது. அதன்படியான ஒரு ஸ்மார்ட்போன் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
Moto X30 Pro ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான அறிக்கையில் Moto X30 Pro மொபைலில் 200 MP முதன்மைக் கேமரா வழங்கப்பட்டிருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. மோட்டோ நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக இருக்கிறது. இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் இந்த கேமரா மட்டும் சிறப்பு அல்ல, ஒவ்வொன்றும் சிறப்பு தான்.
125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
மோட்டோ நிறுவனத்தின் Moto X30 Pro ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது சமீபத்திய ப்ரீமியம் சிப்செட் ஆகும். Moto X30 Pro ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் 125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி. Moto X30 Pro ஆனது சமீபத்தில் Geekbench இல் XT2241-1 என்ற எண்ணுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு அம்சங்களும் மேம்பட்ட வகையிலேயே இருக்கிறது.
கேமரா
Weibo பதிவின் மூலம் Moto X30 Pro ஸ்மார்ட்போனானது 200 எம்பி பிரதான கேமராவைக் கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 200 எம்பி கேமரா உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் 64 எம்பி, 108 எம்பி, 200 எம்பி என கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் இது எதுவும் ஐபோன் கேமராவுக்கு இணையாக இருப்பதில்லை. ஆனால் இதேபோல் இந்த ஸ்மார்ட்போனையும் சுட்டிக் காட்டிவிட முடியாது. காரணம் இந்த ஸ்மார்ட்போனில் கேமரா லென்ஸ், சென்சார் என ஒவ்வொன்றும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.
மோட்டோ எக்ஸ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா ஆனது 35 மிமீ, 50 மிமீ மற்றும் 85 மிமீ குவிய நீள சென்சார்களை கொண்டிருக்கிறது. இதன் 85 மிமீ லென்ஸ் ஆனது நெருக்கமான உருவப்பட காட்சிகளை பதிவு செய்கிறது. 50 மிமீ லென்ஸ் ஆனது நிலையான பார்வை கோணத்துடன் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் 35 மிமீ லென்ஸ் ஆனது மிக நெருக்கமான கோணத்தை வழங்குகிறது.
கேமராவில் உள்ள ஒரு மெகாபிக்சல் என்பது 10 லட்சம் பிக்சல்களை உள்ளடக்கியது. புகைப்படத்தை ஆழமாக ஜூம் செய்யும் போது காட்சி மங்கலாகி கட்டம் கட்டமாக தோன்றும். அந்த ஒவ்வொரு கட்டமும் ஒரு பிக்சல் ஆகும். அதன்படி நீங்கள் 10 மெகாபிக்சல் கேமராவில் புகைப்படம் எடுத்தால் அதில் 1 கோடி பிக்சல்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது 200 எம்பி கேமராவில் புகைப்படம் எடுத்தால் காட்சி துல்லியம் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.
இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 144Hz ரெஃப்ரெஷிங் ரேட் (refreshing rate) மற்றும் HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.67-அங்குல OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். மோட்டோரோலாவின் வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனானது இரட்டை வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது.
RAM
Moto X30 Pro ஸ்மார்ட்போனானது இரட்டை வேரியண்ட்களில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறன், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்புத் திறனுடன் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச அளவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.






