
இந்த பதிவில் நாம் பார்க்கப் போகும் சலுகையை அப்படியே சரியாகப் பயன்படுத்தினால், ரூ. 4949 என்ற விலையில் புதிய Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
5ஜி நெட்வொர்க் உடன் செயல்படும் புத்தம் புது Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 4,949 என்ற விலையில் வாங்க ஒரு அரிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்பதனால், இதை எப்படிப் பெறுவது என்பதைப் பார்க்கலாம். அதேபோல், இந்த Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போனை பொதுவான சலுகையுடன் எப்படி வாங்குவது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
அமேசான் நிறுவனம் பண்டிகை கால சிறப்பு விற்பனைக்கு பிறகும், OnePlus, Oppo, Vivo, Samsung, Tecno, Realme, Redmi, Xiaomi, iQoo, Lava போன்ற இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன் பிராண்ட்களின் மீது சலுகை மற்றும் தள்ளுபடியை வழங்கி வருகிறது.
Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் வேரியண்டின் மீது தான் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 24,999 என்றாலும் கூட, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 24% சலுகைக்குப் பிறகு, இந்த போனை வெறும் ரூ. 18,999 என்ற விலையில் வாங்க முடியும். இது பொதுவாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் சலுகை விலையாகும்.
அமேசான் நிறுவனம் இப்போது Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போன் மீது ரூ. 14,050 என்ற விலையை எக்சேஞ் சலுகையாகத் தள்ளுபடி செய்கிறது. உங்களிடம் வொர்கிங் கண்டிஷனில் ஒரு பழைய 4ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். இந்த தள்ளுபடியின் மூலம் மிக குறைந்த விலையில் உங்களால் புது 5ஜி போனை குறைந்த விலைக்கு வாங்க முடியும். பழைய ஸ்மார்ட்போன்களுக்கான எக்ஸ்சேஞ் விலை, மாடலுக்கு மாடல் மாறும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 14,050 என்பது அதிகப்படியான எக்சேஞ் வேல்யூ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையைப் பயன்படுத்தும் போது, இப்போது கிடைக்கும் ரூ. 18,999 என்ற பொது சலுகை விலையில் இருந்து ரூ. 14,050 தள்ளுபடி செய்யப்பட்டு Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 4,949 என்ற விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கிறது. இத்துடன், இன்னும் கூடுதலாக சில வங்கி சலுகைகளும் கிடைப்பதனால், உடனடி கேஷ்பேக் பெறும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கிறது.
உண்மையிலேயே, உங்களுடைய 4ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தில் இருந்து அடுத்த தலைமுறை 5ஜி நெட்வொர்க் ஸ்மார்ட்போன்களுடன் உங்கள் பயணத்தை நீங்கள் மாற்றி தொடர விரும்பினால், இந்த Samsung Galaxy M33 5G மீது கிடைக்கும் சலுகையை நழுவவிடாதீர்கள். இது போன்ற சலுகை மீண்டும் கிடைப்பது அரிது என்பதனால், உடனே முந்துங்கள்.
