Home News ஷாவ்மி 12 ப்ரோ மொபைலுக்கு ரூ.10,000 தள்ளுபடி!

ஷாவ்மி 12 ப்ரோ மொபைலுக்கு ரூ.10,000 தள்ளுபடி!

Highlights
  • ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 Pro) ஸ்மார்ட்போனின் மீது  ரூ.10,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
  • சமீபத்தில் ஷாவ்மி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) இந்தியாவில் அறிமுகமானதால் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாவ்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான ஷாவ்மி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) இந்தியாவில் அறிமுகமான வேகத்தில், ஓராண்டுக்கு முன் இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 Pro) ஸ்மார்ட்போனின் மீது முழுதாக ரூ.10,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஷாவ்மி 13 ப்ரோவின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்த்துவிடலாம். பின்னர் ஷாவ்மி 12 ப்ரோவின் புதிய விலை விவரங்களை தொடர்ந்து ஷாவ்மி 12 ப்ரோவில் உள்ள நிறை மற்றும் குறைகளை பற்றி பார்க்கலாம். அப்போது தான் உங்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.

 

விலைக்குறைப்பு

ஷாவ்மி 13 ப்ரோவின் எர்லி அக்செஸ் சேல் (Early Access Sale) வருகிற மார்ச் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். பிறகு ஓப்பன் சேல் (Open Sale) வருகிற மார்ச் 10 மார்ச் ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த ஸ்மார்ட்போன் எம்ஐ.காம், எம்ஐ ஹோம், எம்ஐ ஸ்டுடியோ, ஆஃப்லைன் கடைகள் மற்றும் ரீடெயில் விற்பனையாளர்கள் வழியாக வாங்க முடியும்.

Xiaomi 13 Pro விலை & சலுகைகள்

ஷாவ்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.79,999 ஆகும். ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியாக வாங்கினால் ரூ.10,000 உடனடி தள்ளுபடி (Instant discount) கிடைக்கும். எச்டிஎப்சி கார்டு வழியாக வாங்கினால் ரூ.8000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக ரூ.12,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆபரும் (Exchange Offer) அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Xiaomi 12 Pro – பழைய விலை VS புதிய விலை

நேற்று வரையிலாக ஷாவ்மி 12 ப்ரோவின் 8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.62,999 க்கும், 12 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.66,999 க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலைக் குறைப்புக்குப் பிறகு 8ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.52,999 க்கும், 12ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.56,999 க்கும் விற்பனையாகிறது. மேலும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளுக்கு கிடைக்கும் ரூ.3,000 தள்ளுபடி அல்லது ரூ.3000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகளையும் பயன்படுத்தினால் ஷாவ்மி 12 ப்ரோவை ரூ.49,999 க்கு சொந்தமாக்கி கொள்ளலாம். அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் போனஸை (ரூ.5,000) பயன்படுத்தினால் ஷாவ்மி 12 ப்ரோவின் விலையை ரூ.47,999 ஆக கூட குறைக்கலாம்.

ஷாவ்மி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைக்குறைப்பு மற்றும் சலுகைகள், 2023 மார்ச் 1 ஆம் தேதி முதல் முதல் எம்ஐ.காம் (Mi.com), அமேசான்.இன் (Amazon.in), எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் (Mi Home Stores) மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Xiaomi 12 Pro முக்கிய அம்சங்கள்

இது 6.73 அங்குல 2கே பிளஸ் சாம்சங் E5 ஓஎல்இடி 120Hz எல்டிபிஓ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், 50எம்பி கஸ்டம் சோனி IMX707 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 50MP 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 4,600mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

 

Xiaomi 12 Pro – நிறைகள்

  1. நேர்த்தியான வடிவமைப்பு
  2. அட்டகாசமான பெர்ஃபார்மென்ஸ்
  3. சிறப்பான மெயின் கேமரா
  4. வேகமான வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட்

 

Xiaomi 12 Pro – குறைகள்

  1. ஷாவ்மி 12 ப்ரோவில் ப்ளோட்வேர் (Bloatware) உள்ளது.
  2. பிளாக்ஷிப் போனாக இருந்தாலும் கூட இதில் ஐபி ரேட்டிங் (IP Rating) இல்லை.
  3. இதன் டெலிஃபோட்டோ கேமராவனது சுமாராகவே உள்ளது; இது இன்னும் சிறிது மேம்படுத்தப்பட்டு இருக்கலாம்.

இப்போது குறைந்த விலையில் முந்தைய மாடலை வாங்குவதா? புதிய மாடலை வாங்குவதா என நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.