ஷாவ்மி 12 ப்ரோ மொபைல் இன்று ரூ.58,499 மட்டுமே!

ஷாவ்மி நிறுவனத்தால் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஹை-லெவல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தான் Xiaomi 12 Pro. இந்த Xiaomi 12 Pro மொபைல் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ 84,999. இப்போது இந்த மொபைலை மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தள்ளுபடியும் இன்று மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தள்ளுபடி விலை என்ன? எங்கிருந்து வாங்கலாம் என்று பார்க்கலாம்.

முன்பே சொன்னது போல, இது ஒரு லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மாடலாகும். இது 50MP டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அனைத்து சமீபத்திய மற்றும் சிறந்த அம்சங்களை வழங்குகிறது.

எங்கு கிடைக்கும்?

இந்தியாவின் அமேசான் தளம் (amazon.in) மற்றும் Mi Store (mi.com) இல் இந்த மொபைலை இப்போது நீங்கள் வெறும் ரூ.58,499 என்ற விலைக்கே வாங்கலாம். இதன் மூலம் அசல் விலையில் இருந்து சுமார் ரூ 26,500 தள்ளுபடி கிடைக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், Xiaomi 12 Pro மொபைல் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயங்குகிறது. விலை குறைப்பிற்குப் பிறகு நாட்டில் கிடைக்கும் மலிவான Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் இயங்கும் சாதனமாக சியோமி 12 ப்ரோ மாறுகிறது. இந்த விலையில், Qualcomm Snapdragon 8 Gen 1 இயங்கும் ஸ்மார்ட்போன்கள் வேறு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இது ஒரு அட்டகாசமான சலுகை.

சிறப்பம்சம்

Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் 2K குவாலிட்டி உடன் கூடிய 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.73′ இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பேனல் டால்பி விஷன் மற்றும் HDR10+ போன்ற அம்சங்களைக் கொண்டு இருக்கிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி மற்றும் 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் கொண்ட 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கேமரா

இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான சமீபத்திய MIUI 13 உடன் செயல்படுகிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் OIS ஆதரவுடன் 50MP Sony IMX707 பிரைமரி சென்சார், 50MP சாம்சங் JN1 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP போர்ட்ரெய்ட் லென்ஸையும் இது கொண்டுள்ளது. Xiaomi 12 Pro முன்பக்கத்தில் 32MP செல்ஃபி ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

அசல் விலை

Xiaomi 12 Pro மொபைல் 4600mAh பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இந்த பேட்டரி 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Xiaomi ஃபிளாக்ஷிப் 50W வயர்லெஸ் சார்ஜிங்குடன் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் இன் விலை ரூ. 79,999 ஆகும். அதை இப்போது ரூ 54,999 என்ற விலைக்கு வாங்கலாம். அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மொபைலின் ஒரிஜினல் விலை ரூ. 84,999. அதை இப்போது மேலே குறிப்பிட்டது போல் ரூ 58,999 என்ற விலைக்கு வாங்கலாம்.

இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் டாப் நாட்சில் உள்ளது. அனைத்து அம்சங்களும் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. குறிப்பாக, தள்ளுபடிக்குப் பிறகு, Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் கிடைக்கும் மலிவு விலை பெஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.