ஷாவ்மி 12T ப்ரோ டேனியல் ஆர்ஷம் எடிஷன் விற்பனை தேதி அறிவிப்பு!

ஷாவ்மி 12T ப்ரோ டேனியல் ஆர்ஷம் எடிஷன் (Xiaomi 12T Pro Daniel Arsham Edition) என்ற பெயரில் ஒரு சிக்னேச்சர் சிற்ப வடிவமைப்புடன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. Xiaomi இன்று அந்த ஸ்பெஷல் எடிஷன் மொபைலை புகைப்படங்களுடன் வெளியிட்டு, உலக ஸ்மார்ட்போன் ரசிகர்களை டீஸ் செய்துள்ளது.

Special Edition

இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் (Xiaomi Special Edition Smartphone) ஆனது, இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஷாவ்மி இன் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை போலவே, இதுவும் ஸ்பெஷலி மேட் ஸ்மார்ட்போன் பாகங்களுடன், பேக்கேஜிங் முதல் சார்ஜ்ர் ஹெட் வரை எல்லாமே தனித்தனியாகச் சிறப்புக் கவனத்துடன், கலை நுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே இதன் தோற்றம் கண்களைக் கவர்கிறது.

2000 மட்டுமே!

இந்த புதிய Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனின் யூசர் இன்டெர்பெஸ் கூட பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் (Xiaomi 12T Pro Daniel Arsham Edition) மாடல் உலகளவில் வெறும் 2,000 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் ஷாவ்மி ரசிகர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ப்ரீ புக்கிங் செய்துகொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதான் பாஸ், விற்பனைக்கு முன்பாகவே நீங்கள் முன்பதிவு செய்து, உங்களுக்கான Xiaomi 12T Pro Daniel Arsham Edition யூனிட்டை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

உருவாக்கியவர் யார்

Xiaomi 12T Pro Daniel Arsham Edition என்ற பெயர் குறிப்பிடுவது போல, புதிய Xiaomi 12T ப்ரோ மாடல் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த சமகால கலைஞரான டேனியல் அர்ஷாம் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்ஷம் அவரது படிகப்படுத்தப்பட்ட போகிமொன் (Pokémon) சிற்பங்களிலிருந்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் ஷாவ்மி நிறுவனம் கூட்டு சேர்த்து தான் இந்த புதிய Xiaomi 12T Pro Daniel Arsham Edition மாடலை உருவாக்கியுள்ளது. இது “செயல்பாட்டு பொருளாக வெளியில் ஒரு நோக்கத்துடன் கூடிய சிற்பமாக” வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனம் வெண்கலப் படிகங்களுடன், பச்சை நிறப் படிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு

Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனில் உள்ள படிகங்கள் துருத்திக் கொள்ளாவிட்டாலும், இதன் பூச்சு மற்றும் பாட்டினாவின் பாகங்களில் அச்சிடப்பட்ட ரத்தினங்கள் அவற்றை மிகவும் உறுதியானதாகக் காட்டுகின்றது. 20 ஆண்டுகளில், இந்த ஃபோனை வைத்திருப்பவர்கள் இதை ஒரு ஸ்மார்ட்போனாக பயன்படுத்துகிறாரோ இல்லையோ.! கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு பிறகு, அதன் செயல்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு சிற்பப் பொருளாகவோ அல்லது இதை ஒரு கலை பொக்கிஷமாகவோ பயன்படுத்துவார்கள் என்று கலைஞர் டேனியல் கூறுகிறார். சிற்ப கலைஞரால் உருவாக்கப்பட்டதனால் இதை சிற்பமாக வைத்து அழகு பார்க்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் டேனியல்.

இந்த Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனின் UI ஐயும் நிறுவனம் தனிப்பயனாக்கியுள்ளது. இது ஒரு கண்டெம்ப்ரரி தோற்றத்தை அளிக்கிறது. இந்த Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்ஃபோனில் தனிப்பயனாக்கப்பட்ட கைரோஸ்கோபிக் வால்பேப்பர் கூட வழங்கப்பட்டுள்ளது. இது அர்ஷமின் தீம் ஆப் ஏரோஷன் (Arsham’s theme of erosion) என்று கூறப்படுகிறது. 3D விளைவுகளுடன் இந்த வால்பேப்பர் மெதுவாக மாறுகிறது.

விலை என்ன

Xiaomi 12T Pro Daniel Arsham பதிப்பின் விலை சுமார் $ 932 டாலர்களாகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 76107 என்ற விலையை நெருங்குகிறது. டிசம்பர் 5 முதல் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும். இது டிசம்பர் 16 முதல் விற்பனைக்கு வரும்.

எங்கு கிடைக்கும்?

இந்த ஸ்பெஷல் எடிஷன் போன் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் மட்டுமே விற்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால், ஆர்வமுள்ள வாசகர்கள் Mi.com இலிருந்து சாதனத்தை வாங்க முடியும். உங்களுக்கு தெரிந்த நபர் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் ட்ரிக்ஸ்களை வைத்து முயற்சி செய்யலாம்.