200MP கேமரா மொபைலை வெளியிடுகிறதா ஷாவ்மி!


ஷாவ்மி நிறுவனத்திடம் இருந்து அடுத்து Xiaomi 12T Pro என்ற ஸ்மார்ட்போன் வர இருக்கிறது. ஷாவ்மி ரசிகர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனத்தை இந்த ஸ்மார்ட்போன் அதிகம் ஈர்த்துள்ளது. காரணம், இது பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, இதில் 200MP கேமரா எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi 12T Pro-வில் என்ன ஸ்பெஷல்

இப்போது இந்த புதிய Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனில் என்னென்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம். சமீபத்தில் Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனானது Google Play Console வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதில், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஷாவ்மி 12T ப்ரோ போன் இதற்கு முன்பு FCC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது.

இது ரீபிராண்டட் மாடலா?

அதேபோல், Xioami 12T Pro போனின் புகைப்படம் டிசைன் விபரங்கள் மற்றும் கேமரா விபரங்கள் கூட இணையத்தில் லீக் ஆனது. மற்றொரு லீக் தகவலில் Xiaomi 12T Pro இன் ஹார்டுவேர் விபரங்கள் கூட வெளியானது. ஷாவ்மி 12T ப்ரோவின் இந்த கசிந்த விபரங்களை வைத்து பார்த்தால், இது இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K50 Ultra இன் ரீபிராண்டட் பதிப்பாக தெரிகிறது.

கூகிள் பட்டியலில் டிட்டிங் (diting) கோட்நேம்

ஷாவ்மி 12டி ப்ரோவின் கூகுள் பிளே கன்சோல் பட்டியல் விபரங்கள் அதன் வெளியீட்டு நிகழ்வு மிக விரைவில் நடக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சரி, இந்த அட்டகாசமான Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்? Xiaomi 12T Pro இந்த கூகிள் பட்டியலில் டிட்டிங் (diting) என்ற கோட்நேம் பெயருடன் பதிவிடப்பட்டுள்ளதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

சிப்செட்

இதே கோட்நேம் பெயரை ஷாவ்மி இதற்கு முன்பு ரெட்மி கே50 அல்ட்ராவில் பயன்படுத்தியிருந்தது கவனிக்கத்தக்கது. Xiaomi 12T Pro டிவைஸ் 12ஜிபி ரேம் உடன் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இது லேட்டஸ்ட் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் Adreno 730 GPU உடன் வருமென்று பட்டியல் குறிப்பிடுகிறது. Xiaomi 12T Pro சாதனம் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆப் தி பாக்ஸில் வரும். இது 1220×2712 பிக்சல் மற்றும் 480 டென்சிட்டி கொண்ட டிஸ்பிளேவுடன் காணப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

ஷாவ்மி 12டி ப்ரோ உண்மையில் ரெட்மி கே50 அல்ட்ராவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக இருந்தால், அது ஒரே மாதிரியான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 120Hz ஆதரிக்கும் 6.67 அங்குல AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கூடிய 5,000mAh பேட்டரியையும் கொண்டு இருக்கிறது.

கேமரா

கேமராவைப் பற்றி பார்க்கையில், இந்த போன் 200MP அல்லது 108MP பிரைமரி கேமரா சென்சார், 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் உடைய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. முன்பக்கத்தில் 20MP அல்லது 30MP செல்ஃபி கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,000 என்ற விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.