விரைவில் இந்தியா வரும் ஷாவ்மி 13 ப்ரோ

Highlights

  • Xiaomi 13 Pro இந்திய BIS சான்றிதழ் தளத்தில் தோன்றி இருக்கிறது.
  • இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக ஷாவ்மி அறிமுகம் செய்யும் எந்த போனும் அந்தளவிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை நிவர்த்தி செய்யவே ஷாவ்மி இந்த ஸ்மார்ட்போனை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் மொத்த கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ஷாவ்மி 13 என்ற புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. MWC 2023 நிகழ்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷாவ்மி தனது ஷாவ்மி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்தது. ஷாவ்மி 13 சீரிஸ் இல் ஷாவ்மி 13 மற்றும் ஷாவ்மி 13 ப்ரோ ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளது. உலக சந்தையிலும் இதே மாடல்களில் ஷாவ்மி 13 சீரிஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் MWC 2023 நிகழ்வில் ஷாவ்மி இந்த ஸ்மார்ட்போனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சான்றிதழ் தளங்களில்

ஷாவ்மி 13 சீரிஸ் ப்ரோ மாடல் இந்திய BIS சான்றிதழ் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்து NBTC சான்றிதழ் இணையதளத்திலும் தோன்றி இருப்பதாக கூறப்படுகிறது.

டிப்ஸ்டர் முகுல் சர்மா மூலம் Xiaomi 13 Pro ஆனது மாடல் எண் Xiaomi 2210132G உடன் இந்திய BIS சான்றிதழ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் NBTC சான்றிதழ் இணையதளத்திலும் தோன்றி இருக்கிறது. ஆனால் அங்கு Xiaomi 13 ஆனது மாடல் எண் 2211133G உடன் டேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆதரவு போனாக இருக்கும் என்பது NBTC சான்றிதழ் தளத்தின் மூலம் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷாவ்மி 13 சீரிஸ் இல் உள்ள இரண்டு போன்களும் இந்தியாவில் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த வேறு எந்த தகவலும் சான்றிதழ் தளங்களில் கண்டறியப்பட முடியவில்லை என கூறப்படுகிறது.

 

Xiaomi Xiaomi 13 Pro சிறப்பம்சங்கள்

Xiaomi 13 Pro முன்னதாகவே சீனாவில் அறிமுகமாகி உள்ளது. அதன்படி இதன் அம்சங்களை பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.73 அங்குல QHD+ அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், ஷாவ்மி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று கேமராக்களைக் கொண்டிருக்கிறது. மூன்றும் 50 எம்பி சென்சார் தான். அதாவது இதில் 50MP + 50MP + 50MP என டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி ஆதரவுக்கு என 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

 

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. அதேபோல் இதில் 4820 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது.