ஒன்ப்ளஸ்க்கு போட்டியாக வருகிறது ஷாவ்மி 13 ப்ரோ!

Highlights

  • சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி தனது அடுத்த போனாக, ஷாவ்மி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) மொபைலை வெளியிட இருக்கிறது.
  • இந்த மொபைல் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா மற்றும் உலகளவில் வெளியாக இருக்கிறது.

ஒருநாள் முன்னதாக..

ஷாவ்மி என்று சொன்னாலே, குறைந்த விலையில் டாப் கிளாஸ் அம்சங்கள்இருக்கும் என்று நம்பலாம். இந்த Xiaomi 13 மொபைல் சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2023) இன் போது, உலகளவில் ஷாவ்மி 13 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிடக்கூடும் என்று முந்தைய அறிக்கை சுட்டிக்காட்டியது. இருப்பினும், இது ஒரு நாள் முன்னதாக ஷாவ்மி தனது புதிய போனை அறிமுகம் செய்யவிருப்பதாக இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. Xiaomi 13 Pro வெளியீடு இந்தியாவிலும் உலகெங்கிலும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தலங்களான Facebook, YouTube மற்றும் Twitter கணக்குகளில் நேரடியாக லைவ் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

 

மாஸ்டர் பீஸ்

ஷாவ்மி இந்த புதிய ஸ்மார்ட்போனை அதன் “லேட்டஸ்ட் மாஸ்டர்பீஸ் (Latest Masterpiece)” என்று குறிப்பிட்டுள்ளது. இது லைகாவுடன் (Leica) இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. Xiaomi 13 Pro மாடல் சமீபத்தில் இந்திய BIS சான்றிதழில் காணப்பட்டது. இது இந்தியாவில் உடனடி அறிமுகத்தைப் பரிந்துரைக்கிறது. அது மட்டுமின்றி, தாய்லாந்து NBTC சான்றிதழ் இணையதளத்திலும் இந்த ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அறிவிப்புப் படி இது ஒரே நாள் உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

அம்சங்கள்

ஷாவ்மி 13 ப்ரோவின் பின்பக்கத்தில் மூன்று லைகா கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மூன்றுமே 50 மெகா பிக்சல் கேமராக்கள். கூடவே முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் செஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மொபைல் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

 

சிப்செட் & இயங்குதளம்

அதுபோல் சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் 11 சீரிஸில் இருந்த குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 Gen 2 சிப்செட் இந்த மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை வந்த ப்ராஸசர்களில் இதுவே அதிக திறன் வாய்ந்தது ஆகும்.

 

பாஸ்ட் சார்ஜிங்

அதுபோல் இந்த மொபைலின் இன்னொரு முக்கிய அம்சமாக இதன் பாஸ்ட் சார்ஜிங் வசதியைச் சொல்லலாம். 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி இந்த மொபைலில் இருக்கிறது. இதனால் மொபைலை நிமிடங்களில் சார்ஜ் செய்து விடலாம்.

Xiaomi 13 Pro சிறப்பம்சங்கள்

  • 6.73 அங்குல 2K OLED டிஸ்ப்ளே
  • 120Hz ரெப்ரெஷ் ரேட் 1900 nits பீக் பிரைட்னஸ் (HDR10+)
  • 50MP பிரைமரி கேமரா
  • 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
  • 50MP டெலிஃபோட்டோ சென்சார்
  • லைக்கா-பொருத்தப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
  • 32எம்பி செல்ஃபி கேமரா
  • Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 கஸ்டம் ஸ்கின்
  • 120W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 50W வயர்லெஸ் சார்ஜிங்
  • 4,820mAh பேட்டரி
  • 5G
  • 4G LTE
  • Wi-Fi 6
  • USB டைப்-சி போர்ட்
  • ப்ளூடூத் 5.3
  • NFC, GPS

 

விலை

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனின் 8ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை CNY 4,999 ஆகும். இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 59,200 ஆகும். இதன் 8GB+256GB, 12GB+256GB, மற்றும் 12GB+512GB மாடல்கள் முறையே, இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 64,000, ரூ. 68,700 மற்றும் ரூ. 74,600 விலையில் அறிமுகமாகலாம்.