
Xiaomi 13 சீரிஸில் ஏற்கனவே Xiaomi 13 மற்றும் Xiaomi 13 pro மொபைல்கள் வெளியான நிலையில், சற்று முன்பு இந்த சீரிஸின் கடைசி மொபைலான Xiaomi 13 Ultra வெளியாகி இருக்கிறது. பெயருக்கு ஏற்றபடி வசதிகள் மற்றும் அம்சங்களிலும் இது மற்ற இரண்டு மாடல்களை விட முந்தி நிற்கிறது. குறிப்பாக Leicaவின் இணைப்பில் உருவான கேமராக்கள் இந்த மொபைலின் சிறப்பாக இருக்கிறது. மொபைலின் பின்புறத்தில் 50MP கொண்ட நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்ஃபி கேமராவாக 32MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா செண்ட்ரிக் போனாக வெளியாகி இருந்தாலும், மற்ற வசதிகளிலும் இந்த மொபைல் ஒருபடி முன்னோக்கியே இருக்கிறது. இதில் Snapdragon 8 Gen 2 சிப்செட், 16GB வரையிலான ரேம், 512GB வரையிலான இண்டர்னல் ஸ்டோரேஜ், 90W வயர்டு சார்ஜிங். 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் என எல்லா பிரிவிலும் இந்த Xiaomi 13 Ultra முந்தி நிற்கிறது. இனி இதன் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.
டிஸ்ப்ளே
இந்த Xiaomi 13 Ultra மொபைலில் 120Hz ரிப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.73 அங்குல HDR+ LTPO3 AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இது 2600nits பிரகாசமும், 521ppi அடர்த்தியும், 1440 x 3200 pixel அளவும் கொண்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா
இந்த கேமரா செண்ட்ரிக் மொபைலின் பின்பகுதியில் 4 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. f/1.8 அப்பசருடன் கூடிய 50.3MP 23mm wide கேமரா, IOS வசதி மற்றும் f/3.0 அப்பசருடன் கூடிய 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 5 மடங்கு ஜூம் செய்யும் வசதி, மற்றும் IOS வசதியோடு கூடிய 50MP டெலிபோட்டோ கேமரா, 50MP 12mm Ultra wide கேமரா என நான்கு கேமராக்கள் இந்த மொபைலில் உள்ளன. குறைந்த வெளிச்சத்தில் படம் பிடிக்க இரண்டு LED flash வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் 8K வரையிலான வீடியோவை 10-bit தரத்தில் எடுக்க முடியும். மேலும் இது Dolby Vision வசதியையும் கொண்டுள்ளது.
இதேபோல் மொபைலின் முன்பக்கத்தில் ஃப்/2.4 அப்பசருடைய 32MP 25mm wide கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1080p தரத்தில் வீடியோகால்களை மேற்கொள்ளவும், வீடியோக்களை எடுக்கவும் முடியும்.
சிப்செட்
இந்த Xiaomi 13 Ultra மொபைலில் 4 நானோமீட்டர் பேப்ரிகேஷனில் உருவான Snapdragon 8 Gen 2 சிப்செட் இருக்கிறது. இந்த ஆக்டாகோர் ப்ராசஸர் Adreno 740 GPUவைக் கொண்டுள்ளது. தற்போது இருக்கும் சிப்செட்டுகளில் முதன்மையானது இந்த சிப்செட் ஆகும். முன்னணி ஃப்ளாக்ஷிப்போன்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
மெமரி
Xiaomi 13 Ultra மொபைல் 12GB RAM – 256GB ROM, 16GB RAM – 512GB ROM, 16GB RAM – 1TB ROM என மூன்று வேரியண்ட்களில் வருகிறது. இது UFS 4.0 வகையைச் சேர்ந்தது. இந்த மொபைலில் மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வசதி இல்லை. எனவே இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள இயலாது.
இயங்குதளம்
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13 மேல் MIUI 14 ஸ்கின் கொண்டு கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தோடு வருகிறது. இந்த மொபைலில் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் பாதுகாப்பு ‘under display’ முறையில் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை சிம் மொபைலாக வெளியாகி இருக்கும் இந்த Xiaomi 13 Ultra, தூசு மற்றும் தண்ணீர் பாதுகாப்புக்கென IP68 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
பேட்டரி
இந்த Xiaomi 13 Ultra மொபைலில் 90W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் என மூன்று விதமான சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. வேகமான சார்ஜிங் வசதி இருப்பதால் இந்த மொபைலை நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும். இதற்கென இந்த மொபைலில் 4900mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி
கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi, ப்ளூடூத், GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
விலை
பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களில் வெளியாகி இருக்கும் இந்த மொபைலின் விலை பின்வருமாறு இருக்கிறது.
12GB RAM – 256GB ROM = CNY 5999 (சுமார் ரூ.71,606)
16GB RAM – 512GB ROM = CNY 6499 (சுமார் ரூ.77,575)
16GB RAM – 1TB ROM = CNY 7299 (சுமார் ரூ.87,123)