
ஏப்ரல் 17 அன்று நடக்க இருக்கும் ஒரு வெளியீட்டு நிகழ்வில் Xiaomi 13 Ultra வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்த மொபைல் சில காலமாக செய்திகளில் அடிபடுகிறது. மேலும் இது Xiaomiயின் முத்திரைப் படைப்பாக இருக்கும். கடந்த அல்ட்ரா மாடலைப் போலல்லாமல், 13 அல்ட்ரா உலகளாவிய நுகர்வோருக்குக் கிடைக்கும். அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்காக காத்திருக்கையில், ஸ்மார்ட்போன் IMDA சான்றிதழைப் பெற்றுள்ளது. இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
IMDA சான்றிதழ்
வரவிருக்கும் Xiaomi 13 அல்ட்ரா சிங்கப்பூரின் IMDA சான்றிதழ் இணையதளத்தில் 2304FPN6DG என்ற மாடல் எண்ணுடன் வெளிவந்துள்ளது. 5ஜி, புளூடூத், வைஃபை மற்றும் என்எப்சி ஆதரவு போன்ற சில வெளிப்படையான அம்சங்களை உறுதிப்படுத்துவதைத் தாண்டி எந்த சுவாரஸ்யமான தகவலையும் இந்த பட்டியல் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், Xiaomi இன் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் போனாக இது விரைவில் வெளியாகும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
கேமரா
கடந்த ஆண்டு வெளியான Xiaomi 12S Ultra மொபைலின் விமர்சனத்தை முறியடிக்கக்கூடிய அதிநவீன கேமரா அமைப்புடன் Xiaomi 13 Ultra ஆனது அறிமுகமாகும். அதாவது இந்த மொபைல் 1-இன்ச் கேமரா சென்சாரான 50MP உடைய Sony IMX989 கேமரா சென்சார், அல்ட்ரா-வைட் லென்ஸ், டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் மொபைலின் பின் பேனலில் பெரிஸ்கோப் ஜூம் கேமரா ஆகியவற்றைக் கொண்டு இருக்கும் என கசிவுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ‘லைகா’வால் டியூன் செய்யப்பட்ட 32MP குவாட்-கேமரா அமைப்பு முன்பக்கத்தில் செல்ஃபி கேமராவாக இருக்கும். இந்த மொபைலானது MIUI 14-அடிப்படையிலான Android 13 O இல் இயங்குமெனத் தெரிகிறது.
https://newzonly.com/wp-content/uploads/2023/03/Xiaomi-Mi-13-Ultra.jpg
டிஸ்ப்ளே
இந்த ஃபிளாக்ஷிப் ஃபோன், 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய, QHD+ ரெசல்யூஷன் கொண்ட, 6.73 அங்குல E6 AMOLED வளைந்த-எட்ஜ் டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கும். இது இந்த பிராண்டின் பிரீமியம் ஸ்மார்ட்போனாக இருப்பதால், Xiaomi 13 Ultra ஆனது Snapdragon 8 Gen 2 சிப்செட், LPDDR5x ரேம் மற்றும் UFS 4.0 சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஹை-எண்ட் வேரியண்ட் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது ஏப்ரல் மாதத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்லை விரைவில் எதிர்பாக்கலாம்.







