தள்ளுபடி விலையில் ரெட்மி 11 ப்ரைம்!

சீன நிறுவனமான ஷாவ்மி, இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ரெட்மி 11 ப்ரைம் (Redmi 11 Prime) மீது திடீர் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொங்கல் பண்டிகை காலத்தில் வருவதால், சிலர் இதை ஒரு பொங்கல் சலுகை என்று நினைக்லாம். ஆனால் உண்மை என்னவென்றால்.. இதுவொரு வியாபார தந்திரம் ஆகும். ஏனென்றால், சமீபத்தில் தான் ரெட்மி நோட் 12 சீரிஸ் (Redmi Note 12 Series) ஸ்மார்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான வேகத்தில் பழைய ரெட்மி 11 ப்ரைம் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய விலை VS புதிய விலை

ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போன் மீது ரூ.1000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.   அந்த இரண்டின் மீதுமே ரூ.1,000 விலைக்குறைப்பு கிடைக்கிறது! இந்த விலைக்குறைப்பிற்கு முன்னர், ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போனின் 4GB + 64GB மற்றும் 6GB + 128GB வேரியண்ட்கள் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,999 க்கு விற்பனையாகி வந்தன. இனிமேல் ரூ.11,999 மற்றும் ரூ.13,999 என்ற விலைக்குக் கிடைக்கும்.

வாங்கலாமா?

கண்டிப்பாக! அறிமுகம் செய்யப்பட்டு 1 ஆண்டு ஆகிவிட்டது என்றாலும் கூட ரெட்மி 11 ப்ரைம் ஆனது ரூ.15,000 க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் (Best Phone Under Rs.15,000) ஒன்றாகவே உள்ளது. இது Thunder Black, Chrome Silver மற்றும் Meadow Green ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

டிஸ்ப்ளே

அம்சங்களை பொறுத்தவரை, இது 6.58 அங்குல ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட், மேலும் 1,080×2,400 பிக்சல்ஸ், 20:7:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் வருகிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

சிப்செட்/strong>

இதுவொரு 4ஜி ஸ்மார்ட்போன் (4G Phone) ஆகும். இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இயங்குகிறது. மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது

கேமராக்கள் & பேட்டரி

டூயல் சிம் ஆதரவுடன் வரும் ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50MP மெயின் சென்சார் + 2MP டெப்த் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட இதில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

ஷாவ்மி ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு சேர்ந்து அதன் சில ஸ்மார்ட்போன்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி (Jio True 5G) நெட்வொர்க் அனுபவத்தை வழங்குகிறது. இந்த கூட்டணியின் கீழ், 5ஜி சேவைகள் அறிமுகமான நகரங்களில் உள்ள.. 5ஜி ஆதரவுடன் அறிமுகமான பெரும்பாலான ஷாவ்மி, ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கும் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகள் அணுக கிடைக்கிறது.