வெளியாகிறது Xiaomi Civi 2

Xiaomi Civi 2 ஸ்மார்ட்போனானது அடுத்த மாதம் வெளிவரலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக Xiaomi Civi 2 ஸ்மார்ட்போனானது China Compulsory Certification 3C இணையதளத்தில் பட்டியல் இடப்பட்டுள்ளது. வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கும் என்பதும், 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Xiaomi Civi 2 ஆனது நுழைவு நிலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது 3சி சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. கூடவே Redmi 11A ஸ்மார்ட்போனானது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் தெரிய வருகிறது. Xiaomi Civi 2 ஸ்மார்ட்போனானது 3C தளத்தில் மாடல் எண் 2209129SC உடன் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சியோமி சிவி 2 மற்றும் ரெட்மி 11ஏ சியோமி சிவி 2 மற்றும் ரெட்மி 11ஏ Nashvillechatter அறிக்கையின்படி, 2209129SC மற்றும் 22095RA98C ஆகிய எண்களுடன் இரண்டு சியோமி மாடல்கள் 3சி சான்றிதழ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது சியோமி சிவி 2 மற்றும் ரெட்மி 11ஏ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Xiaomi Civi 2 ஆனது சார்ஜர் மாடல் எண் MDY-12-EF-ஐக் கொண்டுள்ளது, இதன்மூலம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனானது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் Redmi 11A ஸ்மார்ட்போனானது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. 3சி பட்டியலில் இருக்கும் இரண்டு போன்களும் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

சிப்செட்

செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் Xiaomi Civi 2 ஸ்மார்ட்போன், Xiaomi Civi போனின் மேம்பட்ட வெளியீடாக அறிவிக்கப்படலாம். இந்த புதிய மாடலானது Qualcomm Snapdragon 7 Gen 1 SoC மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் டிப்ஸ்டர் தகவலின்படி, Xiaomi Civi 2 ஆனது 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடனான மைக்ரோ-வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்பி விஷன் தொழில்நுட்பம்

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவானது டால்பி விஷன் தொழில்நுட்பம் மற்றும் சிறிய பெசல்களுடன் வரும் என கூறப்படுகிறது. மறுபுறம் பட்டியலில் உள்ள Redmi 11A ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வரும் காலங்களில் ஆன்லைனில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேம் மற்றும் சேமிப்புத்திறன்

முன்னதாக வெளியான Xiaomi Civi ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை சீன சந்தையில் CNY 2,599 ஆக இருந்தது. இதன் இந்திய விலை மதிப்பு சுமார் ரூ. 29,600 ஆகும்.

திரை

Xiaomi Civi ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் 6.55 அங்குல முழு HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது MIUI 12.5 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

Xiaomi Civi ஸ்மார்ட்போனானது 64 MP பிரதான கேமரா, 8 MP இரண்டாம் நிலை கேமரா உடன் 2 MP மூன்றாம் நிலை கேமராவையும் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் வீடியோ அழைப்புக்காகவும், புகைப்படம் எடுக்கவும் 32 MP செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் சார்ஜிங்

இதில் 4,500mAh பேட்டரி உடன் 55W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. கருப்பு, நீலம், இளஞ்சிவப்பு என்ற மூன்று நிறத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பிங்கர் ஃப்ரிண்ட் கைரேகை ஆதரவு இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாக Xiaomi Civi 2 வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.