
ஷாவ்மி இந்தியா இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அதன் Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களின் மீது அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையை ஷாவ்மி நிறுவனமே நேரடியாக நடத்துகிறது.
வாடிக்கையாளர்கள் Amazon இல் ஆகஸ்ட் 11, 2022 வரை இந்த தள்ளுபடிகளைத் தாராளமாகப் பெறலாம். அதேபோல், ஷாவ்மி ரசிகர்கள் Mi இந்தியா வலைத்தளம் மூலமாகவும் இந்த சலுகையை பெற முடியும்.
இந்த சிறப்பு விற்பனையில் Xiaomi 12 Pro, Xiaomi 11T Pro, Xiaomi 11 Lite NE, Redmi K50i, Redmi Note 11 Pro+ போன்ற சாதனங்களுடன், ஷாவ்மியின் பிற பட்ஜெட் மாடல்கள் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனை சலுகை நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, SBI வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் SBI வங்கி வாடிக்கையாளராக இருந்தால், SBI கார்டு மூலம் ஷாப்பிங் செய்யும் போது, 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
சரி, இப்போது ஸ்மார்ட்போன்களின் சலுகை விபரங்களைப் பற்றிப் பார்க்கலாம், முதலில் ரூ.62,999 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 12 Pro பற்றிய சலுகையைத் தெரிந்துகொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 Amazon கூப்பன் தள்ளுபடி மற்றும் SBI கிரெடிட் கார்டுடன் ரூ.8,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த புதிய Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் வெறும் ரூ. 49,999 என்ற விலையில் வாங்க முடியும்.
அதேபோல், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K50i ஸ்மார்ட்போனுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு 5G போன் என்பது கவனிக்கத்தக்கது. இத்துடன், Xiaomi மற்றும் Redmi இன் பல ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 62,999 என்ற விலையில் விற்பனையான Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் 8GB/256GB மாடல், இந்த சலுகையை முன்னிட்டு, ரூ. 49,999 விலைக்கு வாங்கலாம். இதன் 12GB/256GB மாடலின் அசல் விலை 66,999 ஆகும். இதை இப்போது நீங்கள் ரூ. 53,999 என்ற சலுகை விலையில் வாங்கலாம்.
ரூ. 25,999 என்ற விலையில் விற்பனையான Redmi K50i ஸ்மார்ட்போனின் 6GB/128GB மாடல், இந்த சலுகையை முன்னிட்டு, ரூ. 21,499 விலைக்கு வாங்கலாம். இதன் 8GB/128GB மாடலின் அசல் விலை 28,999 ஆகும். இதை இப்போது நீங்கள் ரூ. 24,499 என்ற சலுகை விலையில் வாங்கலாம்.
Redmi Note 11 Pro+ ஸ்மார்ட்போனின் 6GB/128GB மாடல் இப்போது ரூ. 17,749 என்ற விலையில் கிடைக்கிறது. Xiaomi 11 Lite NE ஸ்மார்ட்போனின் 6GB/128GB மற்றும் 8GB/128GB மாடல்கள் முறையே ரூ. 18,749 மற்றும் ரூ. 19,749 விலையில் கிடைக்கிறது.
குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலாக Redmi 9A Sport விற்பனை செய்யப்படுகிறது. Redmi 9A Sport ஸ்மார்ட்போனின் 2GB/32GB மாடல் இப்போது ரூ. 6,399 விலையில் சலுகையுடன் வாங்கக் கிடைக்கிறது.
இதேபோல், Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன், Redmi Note 11, Redmi Note 11 Pro, Redmi Note 11S, Redmi Note 11T, Redmi 9A, Redmi 9A Sport, Redmi 9 Activ, Redmi 10A, Redmi 10 Prime, Redmi 10A Sport போன்ற மாடல்கள் மீது இந்த சலுகை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கிடைக்கிறது. ஷாவ்மியின் சலுகைகள் நாளையோடு முடிவதால் உடனே முந்துங்கள்.