Xiaomi நிறுவனத்தின் துணை பிராண்டான Redmi நம்பமுடியாத குறைந்த விலையில் ரெட்மி 12சிஎன்ற ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது பிராண்டின் நீண்ட கால பட்ஜெட் சூத்திரத்திற்கு ஏற்றார் போல் அமைந்த பெஸ்ட் மலிவு விலை ஸ்மார்ட்போன் (best budget smartphone) மாடலாகும். இந்த போன் மிகவும் குறைந்த விலையில் நல்ல அம்சங்களை பேக் செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய Redmi 12C ஸ்மார்ட்போன் 6.71 அங்குலம் உடைய பெரிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் ஒரு பெரிய 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதைச் சக்தியுள்ள ஸ்மார்ட்போனாக மாற்ற, இதில் MediaTek Helio G85 SoC சிப்செட் சேர்க்கப்பட்டுள்ளது. எல்லாம் கலந்து, இந்த ரெட்மி 12சி ஒரு டீசெண்டான ஆல்ரவுண்டர் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வடிவமைப்பு
ரெட்மி 12சி ஆனது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi A1 தொடர் ஸ்மார்ட்போன்களைப் போலவே தோற்றமளிக்கிறது. இது இரண்டு கேமராக்கள், ஒரு LED ஃபிளாஷ் மற்றும் ஒரு கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த மொபைலானது கடினமான வடிவமைப்புடன் வளைந்த பின்புறத்தைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், மெல்லிய பெசல்கள் மற்றும் V- வடிவ நாட்ச் கொண்ட பிளாட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனின் (smartphone) சிறப்பம்சங்கள் பற்றிப் பார்க்கையில், இது ஒரு 4G ஸ்மார்ட்போன் ஆகும். இது உயர் தெளிவுத்திறனை கொண்ட 6.71 அங்குல டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது எல்சிடி டிஸ்பிளே (display) போல் தெரிகிறது. ரெட்மி 12சி ஸ்மார்ட்போனில் MediaTek Helio G85 சிப்செட் (chipset) வழங்கப்பட்டுள்ளது. Android 12 ன் மேல் MIUI 13 ஸ்கின்னைக் கொண்டுள்ளது.
கேமரா
இந்த மொபைல் அதன் ஸ்டோரேஜ் (storage) மற்றும் செயல்பாட்டிற்காக (performance) 4ஜிபி LPDDR4X ரேம் உடன் சேர்க்கப்பட்டுள்ளது. இது eMMC 5.1 ஃபிளாஷ் ஸ்டோரேஜ் உடன் கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்தை வழங்குகிறது. கேமரா (camera) அம்சத்தைப் பொருத்தவரை, இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50MP பிரைமரி சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்பக்கத்தில் 5MP கேமராவைக் கொண்டு இருக்கிறது.
பேட்டரி
இந்த மொபைல் 5000mAh பேட்டரியை (battery) கொண்டு இருக்கிறது. இது 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் புளூடூத், வைஃபை மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போன்ற வழக்கமான இணைப்பு விருப்பங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை சுமார் 192 கிராம் மற்றும் சுமார் 8.77 மிமீ தடிமன் கொண்டது. Shadow black, Dark blue, Mint Green மேலும் Lavender என 4 நிறங்களில் இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது.
விலை
இந்த மொபைல் 3 வேரியண்ட்களில் வருகிறது. Redmi 12C ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் விலை 699 யுவான் ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 8,357 ($101) ஆகும். இதன் 4GB + 128GB மற்றும் 6GB + 128GB ஸ்டோரேஜ் மாடல்கள் முறையே ரூ. 9,516 ($115) மற்றும் ரூ. 10,757 ($130) என்ற விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவின் மெயின்லேண்டில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இது இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








