Home News ஷாவ்மியின் ஸ்மார்ட் கண்ணாடி

ஷாவ்மியின் ஸ்மார்ட் கண்ணாடி

ஷாவ்மி நிறுவனம் மிஜியா ஸ்மார்ட் கண்ணாடி மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.

புதிய ஸ்மார்ட் கண்ணாடி இண்டெலிஜண்ட் இமேஜ் மற்றும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி (augmented reality) தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பயனர்களுக்கு கற்பனை திறனை வெளிப்படுத்த செய்கிறது. இது ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ் மற்றும் வழக்கமான கண்ணாடி இரண்டும் கலந்த ஒரு சாதனமாகும். இதில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றத்தை வைத்துப் பார்க்குபோது, இந்த ஸ்மார்ட்கிளாஸ் அன்றாட பயன்பாடுக்கு ஏற்றதாகத் தெரியவில்லை.

கண்ணாடியின் இரண்டு புறங்களிலும் ஏ.ஆர். (augmented reality) ஆப்டிக்கல் டிஸ்ப்ளே (optical display) மற்றும் கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. லென்ஸ் மற்றும் ஃபிரேம்கள் இந்த கண்ணாடியின் முழு பயன்பாடுகளை அனுபவிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸின் மொத்த எடை 100 கிராம்.

ஷாவ்மி மிஜியா ஸ்மார்ட்கிளாஸ் வசதிகள்

புதிய சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸின் சீன விலை CNY 2499. இந்திய மதிப்பில் ரூ. 29,275 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன் கிரவுட்-ஃபண்டிங் விற்பனை இன்று துவங்கியது. இனி இந்த ஸ்மார்ட் கிளாஸ் இந்திய மதிப்பில் ரூ. 31,615 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.