Xiaomi Mix Fold 3 ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகிறது: நிறுவனத்தின் தலைவர் தகவல்

Highlights

  • மொபைலின் வெளியீடு ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடக்கும்.
  • இந்த மொபைல் லைகா பிராண்டட் கேமராவுடன் வெளியிடப்படும்.
  • Snapdragon 8 Gen 2 சிப்செட்டை இதில் காணலாம்.

 

இந்தியா உட்பட உலகில் மடிக்கக்கூடிய போன்களின் வரவு சற்று அதிகரித்து வருகிறது. இதுவரை சாம்சங், ஒப்போ, டெக்னோ போன்ற நிறுவனங்கள் தங்கள் ஃபோல்டபிள் போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், Xiaomi தனது Xiaomi Mix Fold 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த மொபைலின் வெளியீடு ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடைபெற இருக்கிறது. இப்போது இந்த ஃபோல்டபிள் மொபைலின் விவரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

Xiaomi Mix Fold 3 தொடர்பான விவரங்கள்

  • Xiaomi Mix Fold 3 பற்றி, சீனாவில் உள்ள நிறுவனத்தின் தலைவர் Lu Weibing, இந்த ‘மொபைல் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.
  • மைக்ரோ பிளாக்கிங் தளமான Weibo மூலம் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
  • Xiaomi Mix Fold 3 மொபைலில் சில முக்கியமான அப்டேட்கள் செய்யப்படும் என்றும், முந்தைய மாடலைவிட இந்த போன் மெல்லியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • வலுவான அம்சங்களை இந்த போனில் காணலாம். ஒரு சிறப்பு விஷயம் என்னவென்றால், இந்த மொபைல் லைகா பிராண்டட் கேமராவுடன் வெளியிடப்படும்.

மிக்ஸ் ஃபோல்ட் 2 கடந்த முறை சீனாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியா உட்பட மற்ற உலக சந்தையில் வெளியாகவில்லை. இம்முறையும் அந்த நிறுவனம் அதை சீனாவில் மட்டும் வெளியிடலாம் என்று தெரிகிறது. இப்போது மடிக்கக்கூடிய போனிற்கு இருக்கும் வரவேற்ப்பை கருத்தில் கொண்டு இந்த போன் உலக சந்தையில் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Xiaomi Mix Fold 3  (கசிந்த) விவரக்குறிப்புகள்

 

  • மொபைலின் வடிவமைப்பைப் பற்றி பேசுகையில், இது 11.2 மிமீ மெல்லியதாக இருக்கும். இந்த தடிமன் மடிப்பின் போது காணப்படும் அளவாகும்.
  • அதிக விவரக்குறிப்புகள் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த மொபைல் லைகா கேமரா லென்ஸுடன் வரும் என்று கூறப்படுகிறது. கூடவே இதில் 5x பெரிஸ்கோப் ஜூம் லென்ஸூம் வழங்கப்படும்.
  • மொபைலின் சிப்செட்டைப் பொருத்தவரை இந்த மொபைலில் Snapdragon 8 Gen 2 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மொபைல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் பிற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.
  • பேட்டரி பற்றிய தகவல்கள் தற்போது வரவில்லை என்றாலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை இதில் காணலாம் என்று கசிவில் கூறப்பட்டுள்ளது.
  • இயங்குதளத்தை பொருத்தவரை இந்த மொபைல் சமீபத்திய Android 13 இல் இயங்கும்.