Home News 10,000mAh பேட்டரியுடன் புது ஷாவ்மி டேப் அறிமுகம்!

10,000mAh பேட்டரியுடன் புது ஷாவ்மி டேப் அறிமுகம்!

ஷாவ்மி நிறுவனத்தின் புதிய ஷாவ்மி பேட் 5 ப்ரோ சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக்ஸ் போல்டு 2, ரெட்மி K50 எக்ஸ்டிரீம் எடிஷன், வாட்ச் S1 ப்ரோ மற்றும் பட்ஸ் 4 ப்ரோ போன்ற சாதனங்களுடன் புதிய பேட் 5 ப்ரோ மாடலும் அறிமுகமாகி இருக்கிறது. இது Samsung Galaxy Tab S8, Apple iPad Air, and Lenovo Tab P12 Pro போன்றவற்றிற்கு சரியான போட்டியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

புதிய பேட் 5 ப்ரோ ஷாவ்மி இதுவரை வெளியிட்டதில் அளவில் பெரிய மாடல் ஆகும். ஷாவ்மி பேட் 5 ப்ரோ மாடலில் TÜV ரெயின்லாந்து சான்று பெற்ற 12.4 அங்குல, 2.5K HD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கிறது. மேலும் இது HDR10, Dolby Vision போன்ற அம்சங்களையும் கொண்டு இருக்கிறது. இத்துடன் வளைந்த ஓரங்கள் மற்றும் நான்கு புறமும் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி வரையிலான ரேம், 512 ஜிபி சேமிப்புத்திறன் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 4 ஸ்பீக்கர்கள் டால்பி அட்மாஸ் அம்சத்துடன் இருக்கிறது. பின்பக்கத்தில் 50 மெகா பிக்சல் கேமராவும், முன்பக்கத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபி எடுக்க 2 மெகா பிக்சல் கேமராவும் வழங்கப்பட்டுள்ளன.

ஷாவ்மி பேட் 5 ப்ரோ அம்சங்கள்

விலை

ஷாவ்மி டேல்லெட் கருப்பு, சில்வர் மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 444 டாலர்கள். இந்திய மதிப்பில் 35 ஆயிரத்து 380 ரூபாயில் இருந்து துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை 49 ஆயிரத்து 535 ரூபாய் வரை செல்கிறது.