120W சார்ஜிங் & 16 ஜிபி ரேமுடன் இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாகிறது iQOO Neo 7 Pro 5G

Highlights

  • iQOO Neo 7 Pro 5G போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
  • ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாகிறது
  • 120W ஃபாஸ்ட் சார்ஜிங் & 16 ஜிபி ரேமுடன் வெளியாகலாம்

 

கிட்டத்தட்ட ஒரு வார காலமாக  iQOO Neo 7 Pro 5G போனை டீஸ் செய்த பிறகு, இன்று iQOO நிறுவனம் இறுதியாக அதன் இந்திய வெளியீட்டு தேதியை வெளியிட்டு இருக்கிறது. iQoo Neo 7 Pro 5G போன் இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று சமூக ஊடக தளமான ட்விட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதன் வெளியீட்டு விவரங்களுடன், எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகளையும் பார்க்கலாம்.

iQoo Neo 7 Pro 5G இந்திய அறிமுக விவரங்கள்

 

iQOO இந்தியா நிறுவனம் அதன் ட்விட்டர் ஹேண்டிலின் பேனரை மாற்றும் போது,​​ அதில் நியோ 7 ப்ரோ 5ஜியின் புகைப்படத்தை வைத்துள்ளது. இந்தப் புகைப்படத்தின் மூலம், இந்த மொபைலின் வெளியீட்டு தேதி என ஜூலை 4 ஆம் தேதியை அறிவித்துள்ளது. இது வரை எந்த ஒரு பத்திரிக்கைச் செய்தியோ அல்லது சமூகப் பதிவோ ஐக்குவினால் பகிரப்படவில்லை. இந்த ஃபோனை ‘பவர் டு வின்’ என்ற தலைப்பில் நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.

 

iQOO Neo 7 Pro 5G (கசிந்த) இந்திய விலை

சமீபத்தில் வெளியான கசிவுகளின்படி, iQOO Neo 7 Pro 5G ஃபோன் இந்தியாவில் 16 GB RAM + 256 GB சேமிப்பகத்தில் வெளியிடப்படலாம். இது ஃபோனின் டாப் வேரியண்ட் ஆக இருக்கலாம், இதன் விலை சுமார் ரூ.40,000 ஆக இருக்கும். அதே நேரத்தில், நியோ 7 ப்ரோ 5ஜியின் ஆரம்ப விலை ரூ.32,000 ஆக வைத்திருக்கலாம்.

iQoo Neo 7 Pro 5G (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்

 

டிஸ்ப்ளே

கசிவின் படி, iQOO Neo 7 Pro 5G க்கு 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம். இது 1260 x 2800 பிக்சல் அடர்த்தி கொண்டது. இது 144Hz புதுப்பிப்பு வீதத்தையும் 1300 nits பிரகாசத்தையும் பார்க்கும்.

 

சிப்செட்

இந்த IQOO போனில் Qualcomm Snapdragon 8 Plus Gen 1 சிப்செட்டோடு வெளி வரலாம்

 

கேமரா

புகைப்படம் எடுப்பதற்காக நியோ 7 ப்ரோவில் டூயல் ரியர் கேமரா கொடுக்கப்படலாம். இதில் OIS அம்சத்துடன் கூடிய 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா இருக்கும். அதே நேரத்தில், முன் பேனலில் 16 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் கொடுக்கப்படலாம்.

 

பேட்டரி

இந்த போன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற அம்சங்கள்

போனில் பாதுகாப்பிற்காக, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் 5ஜி, புளூடூத், வைஃபை போன்ற அம்சங்கள் இணைப்புக்காக வழங்கப்படும்.