இந்தியாவில் அறிமுகமானது ஜியோ மற்றும் ஏர்டெல் 5G நெட்வொர்க்குகளில் இயங்கும் POCO X5 5G போன்.

Highlights

  • POCO X5 5G போன் இந்தியாவில் 7 5G பேண்ட் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த மொபைல் Qualcomm Snapdragon 695 சிப்செட்டில் வேலை செய்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போனில் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

சில காலத்திற்கு முன்பு இந்தியாவில் POCO X5 Pro 5G தொலைபேசியை அறிமுகப்படுத்திய பிறகு , இப்போது நிறுவனம் அதே தொடரின் புதிய மாடலான POCO X5 5G ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Poco X5 5G ஃபோன் இன்று இந்தியாவில் 7 5G பேண்ட்கள் (band) ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் வழங்கும் 5G சேவையையும் பயன்படுத்த முடியும். இந்த மொபைல் போன் வேகமாக 5G இணையத்தை இயக்கும் திறன் கொண்டது. சிறந்த அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது. இனி POCO X5 5G மொபைலின் விலை, விற்பனை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை விரிவாகப் பார்க்கலாம்.

 

மெமரி

இந்தியாவில் POCO X5 5G போன் இரண்டு மெமரி வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. மற்றொன்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. இந்த ஃபோனில் 5 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் வசதியைப் பெற முடியும். இது போனுக்கு 13 ஜிபி டர்போ ரேம் செயல்திறனை வழங்குகிறது. அதே போல், Poco X5 5G இல் microSD கார்டைப் பயன்படுத்தி சேமிப்புத்திறனை 1 TB வரை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

விலை

6GB + 128ஜிபி POCO X5 5G மொபைல் ரூ.18,999 என்ற விலைக்கும், 8GB + 256ஜிபி  POCO X5 5G மொபைல் ரூ.20,999 என்ற விலைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி பயனர்கள் வங்கி அட்டை மூலம் இந்த போனை வாங்கினால் 2,000 தள்ளுபடியும் கிடைக்கும். Poco X5 5G ஷாப்பிங் தளமான Flipkart இல் மார்ச் 21 முதல் விற்பனைக்கு கிடைக்கும், இந்த மொபைலை ஜாகுவார் பிளாக், வைல்டுகேட் ப்ளூ, மற்றும் சூப்பர்நோவா கிரீன் ஆகிய வண்ணங்களில் வாங்கலாம்.

 

Poco X5 5G போனின் விவரக்குறிப்புகள்

  • 6.67 அங்குல 120Hz AMOLED டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 695
  • 5ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 48MP மூன்று பின்புற கேமராக்கள்
  • 33W 5,000mAh பேட்டரி

 

டிஸ்ப்ளே

POCO X5 5G போன் 6.67 அங்குல FullHD+ டிஸ்பிளேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்ச்-ஹோல் பாணியிலான திரை சூப்பர் AMOLED பேனலில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தில் வேலை செய்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் திரை பாதுகாக்கப்படுகிறது. 240Hz தொடு மாதிரி வீதம், 1200நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 45,00,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ போன்ற அம்சங்களும் இந்த ஃபோன் டிஸ்ப்ளேவில் கிடைக்கின்றன.

சிப்செட்

MIUI உடன் இணைந்து செயல்படும் ஆண்ட்ராய்டு 13 இல் Poco X5 5G போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன்களில் தயாரிக்கப்பட் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 ஆக்டா கோர் ப்ராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த Poco போன் ஏழு 5G பேண்டுகளை கொண்டுள்ளது. இதன் மூலம் 5G சேவையை தடையின்றி பயன்படுத்தலாம்.

 

கேமரா

புகைப்படம் எடுப்பதற்காக POCO X5 5Gயில் டிரிபிள் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனின் பின்பக்க பேனலில் LED ஃபிளாஷ் பொருத்தப்பட்ட 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த ஸ்மார்ட்போன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 13 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

இந்த POCO X5 5G ஃபோன் இரட்டை சிம் வசதியோடு வருகிறது. அதில் 5G மற்றும் 4G இரண்டையும் இயக்க முடியும். பவர் பேக்கப்பிற்காக, இந்த ஃபோனில் 5,000 mAh பேட்டரி உள்ளது, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த Poco போன் IP53 சான்றிதழ் பெற்றுள்ளது, இது தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்கிறது. NFC, IR பிளாஸ்டர், 3.5mm ஜாக் போன்ற அம்சங்களும் இந்த போனில் கிடைக்கின்றன.