ஆன்லைனில் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பான் கார்டு (PAN Card) என்பது வருமான வரி செலுத்துதல், வங்கிக் கணக்கு தொடங்குதல், வீடு அல்லது கார் வாங்குதல் அல்லது வியாபாரம் செய்தல் மற்றும் பெரிய அளவிலான பணத்தை மாற்றுதல் மற்றும் பல முக்கிய அரசுப் பணிகளுக்கு முக்கியமான ஆவணமாகும். இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை எளிதாகப் பெறலாம். இந்தக் கட்டுரையில், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பான் கார்டைப் பெறுவது எப்படி என்பது பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

 

ஆன்லைனில் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அரசு போர்டலான – NSDL மூலம் கேட்கப்படும் தகவல்களை வழங்கி ஆன்லைனில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இந்த போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்  பான் கார்டுக்கு  விண்ணப்பிக்கலாம். இந்திய குடிமக்கள் பான் கார்டுக்கான படிவம் 49A மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு படிவம் 49AA ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

 

NSDL போர்ட்டலில் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

படி 1: முதலில், NSDL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் ‘Application Type’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

 

படி 2: நீங்கள் இந்திய குடிமகனாக இருந்தால், பான் கார்டுக்கான படிவம் 49A மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கான படிவம் 49AA ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

 

படி 3: இப்போது நீங்கள் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

படி 4: இங்கே உங்களிடம் சில முக்கியமான தகவல்கள் கேட்கப்படும். அனைத்தையும் கவனமாக நிரப்பவும். உங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை பூர்த்தி செய்த பிறகு, guidelines-ஐ ‘டிக்’ செய்ய வேண்டும்.

 

படி 5: அதன் பின் கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, அதனையடுத்து கட்டணப் பக்கத்திற்குச் சென்று கட்டணத்தைச் செலுத்தவும். பான் கார்டுக்கு இந்திய குடிமக்களுக்கு ரூ.93 மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் ரூ.864 கட்டணமாக செலுத்த வேண்டும்

 

படி 6: பணம் செலுத்திய பிறகு, நீங்கள் ஒப்புகை சீட்டைப் பெறுவீர்கள். அதை பிரிண்ட் அவுட் எடுக்கவும். அதில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ஒட்டி உங்கள் கையொப்பத்தை போட்டு வருமான வரித்துறைக்கு போஸ்ட் செய்யவும். இதனுடன் உங்கள் இருப்பிடம் மற்றும் அடையாள அட்டையை வழங்க வேண்டும்.

 

பான் கார்டுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

 

பான் கார்டு பெற, அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்று தேவை. இவற்றுக்கு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், மின் கட்டணம், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட், மத்திய அல்லது மாநில அரசு வழங்கும் அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

 

பான் கார்டு பெற எவ்வளவு செலவாகும்?

 

பான் கார்டு பெற, இந்திய குடிமக்கள் ரூ.93 கட்டணமாகவும், வெளிநாட்டு குடிமக்கள் ரூ.864 செலுத்த வேண்டும்.

 

பான் கார்டு எத்தனை நாட்களில் தயாராகும்?

 

நாம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பித்தபின் அவற்றைக் கொண்டு பான் கார்டு உருவாக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு 10 முதல் 15 நாட்களில் பான் கார்டு உருவாக்கப்படும்.