4 புதிய நிறங்களில் வெளியானது பேட்ரே ஸ்டோரி எலெட்ரிக் ஸ்கூட்டர்!

Highlights

  • ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர், புதிதாக ஐஸ் நீலம், ஸ்டார்லைட் நீலம், கேண்டி சிவப்பு மற்றும் இக்ரு மஞ்சள் என 4 நிறங்களில் வெளியாகி இருக்கிறது
  • இந்த ஸ்கூட்டர் ரூ.89,600 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேட்ரே ஸ்டோரி (Battre Storie)

ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விளங்கும் பேட்ரே ஸ்டோரி (Battre Storie) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 4 புதிய நிறங்கள் ரூ.89,600 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நிறங்களில் சந்தையில் பிரபலமான இந்த பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எவ்வாறு உள்ளது என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் பேட்ரே எலக்ட்ரிக் மொபைலிட்டி ஆகும். இந்த நிறுவனத்தின் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றான ஸ்டோரி மாடலுக்கு புதிய 2023ஆம் ஆண்டை முன்னிட்டு ஐஸ் நீலம், ஸ்டார்லைட் நீலம், கேண்டி சிவப்பு மற்றும் இக்ரு மஞ்சள் என 4 நிறத்தேர்வுகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

 

4 புதிய நிறங்களில்!

பேட்ரே ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.89,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறங்களுடன் மிட்நைட் கருப்பு, ஸ்டோர்மி கிரே மற்றும் எலக்ட்ரிக் நீலம் என வழக்கமான நிறங்களிலும் ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில் இது குறைவான விலையே ஆகும். இதனால்தான் இந்த பேட்ரே எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விற்பனையில் ஓலாவின் விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்1 ஏர் நேரடி போட்டி மாடலாக விளங்குகிறது.

பேட்டரி

ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 கிலோவாட்ஸ் BLDC எலக்ட்ரிக் ஹப் மோட்டார் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 2.6 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்க பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 132 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

 

மைலேஜ்

ஸ்டோரியின் பேட்டரியை வெறும் 4 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம் என்கிறது பேட்ரே நிறுவனம். இந்த விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 65kmph வேகத்தில் பயணிக்கலாம்.

 

அம்சங்கள்

உலோக பேனல்களை கொண்டு உருவாக்கப்படும் பேட்ரே ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கன்சோல் வழங்கப்படுகிறது. இந்த 5 அங்குல திரை ஆனது ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் கிடைக்கிறது. ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் உள்ளதால் வாகனத்தை பற்றிய விபரங்கள், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள்/ குறுஞ்செய்திகள், எரிபொருள் முடிவடைய உள்ள தொலைவு, வழிக்காட்டி உதவி உள்பட பல்வேறு விபரங்களை ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் வழியாகவே அறியலாம்.

அறிமுகம்

இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புதிய நிறங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பேட்ரே நிறுவனர் நிஷ்சல் சௌத்ரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “வாடிக்கையாளர் சேவை மற்றும் புதுமைக்கான எங்கள் ஆர்வமே எங்களை புதுமையாக இருக்க தூண்டுகிறது. இதுவே நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். தற்போதைய காலத்தின் புதிய துடிப்பான மற்றும் கவர்ச்சிக்கரமான வண்ணங்கள் இப்போது ஸ்டோரி ஸ்கூட்டரில் பிரதிபலிக்கின்றன. அதாவது, அவர்கள் (வடிவமைப்பு குழு) ஒரு பிரகாசமான, கற்பனையான எதிர்காலத்தை சுட்டிக்காட்டுகின்றனர்” என்றார்.

 

போட்டி

பேட்ரே ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 2kWh பேட்டரி தொகுப்பை பெறும் ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முக்கியமான போட்டி மாடலாக விளங்குகிறது. அதேநேரம், ஒகாயா, ஒகினவா, ஆம்பியர், ப்யூர் இவி உள்ளிட்ட மற்ற இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களின் தயாரிப்புகளும் இந்த பேட்ரே எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ளன.