120 கிமீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் ரூ. 69,900!

Highlights

  • ஆம்பியர் ஜீல் இஎக்ஸ் (Ampere Zeal EX) எனும் எலக்ட்ர்க் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கிறது.
  • இதற்கு அறிமுக விலையாக ரூ. 69,900 என்கிற மிகக் குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility)-க்கு சொந்தமான நிறுவனம் ஆம்பியர் (Ampere). இது ஓர் ஸ்டார்ட்-அப் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்திய இளைஞர்களைக் கவரும் விதமாக ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆம்பியர் ஜீல் இஎக்ஸ் (Ampere Zeal EX) எனும் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இது ஓர் என்ட்ரீ லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டருக்கு லேசான ஸ்போர்ட்டி தோற்றத்தை ஆம்பியர் வழங்கி இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 69,900 என்கிற மிகக் குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மலிவு விலையில் இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே ஜூல் இஎக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

திறன் & மைலேஜ்

விலை குறைவான தயாரிப்பாக இருந்தாலும் இதில் சிறப்பு வசதிகளை கஞ்சத் தனமின்றி ஆம்பியர் வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக ஜூல் இஎக்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஓர் முழுமையான சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 120 கிமீ வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. பேட்டரி பேக் விபரம் இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக ஆம்பியர் ஜீல்ல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60V, 2.3 KWh திறன் கொண்ட அட்வான்ஸ்டு லித்தியம் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார மோட்டாரை பொருத்தவரை 1.8 KW திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆம்பியர் டாப் ஸ்பீடு இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ முதல் 55 கிமீ ஆகும்.

ப்ரேக்

இந்த வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் டிரம் பிரேக் வசதி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் ட்வின் ட்யூபும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பரான வாகனமாகவே ஆம்பியர் ஜீல் இஎக்ஸ் இந்திய மின்வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

சிறப்புச் சலுகை

இது தவிர எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக சிறப்பு சலுகை ஒன்றை ஆம்பியர் அறிவித்துள்ளது. ஜீல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு பலன்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பலன் திட்டம் மத்திய பிரதேசம், பிஹார், உத்தர் பிரதேசம் மற்றும் ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதேபோல், மேலே பார்த்த அறிமுக விலையும் இந்த மாநில வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 69,900 என்கிற விலையில் ஜீல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர்களால் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு பின்னர் சற்று உயர்வான விலையில் ஜீல் இஎக்ஸ் விற்கப்பட இருக்கின்றது.

 

வேறுபட்ட விலை

அதேவேளையில், தமிழகம் போன்ற பிற மாநிலங்களில் ரூ. 75 ஆயிரத்திற்கும் அதிகமான விலையில் இதனை விற்க ஆம்பியர் முடிவு செய்யதிருக்கிறது. இந்த விலையும் இன்னும் சில தினங்களில் மாற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி உள்ளன. ஆகையால், இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே இந்த மலிவு விலையில் ஜீல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும் என தெரிகின்றது.

 

நிறங்கள்

ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் 150 கிலோ வரையில் எடையைத் தாங்க முடியும். ஆகையால், சற்று கொழு கொழுவென நபர்களாலும் இந்த வாகனத்தை பயன்படுத்தி பயணிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டோன் கிரே (Stone Grey), ஐவரி ஒயிட் (Ivory White) மற்றும் இன்டிகோ ப்ளூ (Indigo Blue) மூன்று விதமான நிற தேர்வுகளில் ஜீல் இஎக்ஸ்  கிடைக்க இருக்கிறது. ஆம்பியர் நிறுவனம் மூன்று நாட்களுக்கு முன்புதான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த வாகனம் மட்டுமின்றி ஹை-ஸ்பீடு திறன் கொண்ட ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus) என்ற மற்றுமொரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.09 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.