ஒரே போனில் இரண்டு வாட்ஸப் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய காலக் கட்டத்தில், பெரும்பாலோனோர் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறோம். ஆனால், என்னதான் நம்மிடம் 2 சிம் கார்டுகள் இருந்தாலும், ஒரு ஸ்மார்ட்போனில் 1 வாட்ஸ்அப் (WhatsApp) கணக்கை மட்டும் தான் நம்மால் பயன்படுத்த முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப் இன் விதி தான். ஒரு மொபைல் எண்ணிற்கு ஒரு WhatsApp கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் இன்னும் பின்பற்றப்படுகிறது.

உங்களால், மற்றொரு சிம் நம்பரை ஒரே நேரத்தில், ஒரே ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப் நிறுவனம் இதை அனுமதிக்காது. 2 சிம் கார்டுகள் இருக்கும் போன்களில் 1 வாட்ஸ்அப் கணக்கை மட்டும் பயன்படுத்துவது எப்படி நியாயமாகும்.

இதனை உணர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், உங்களுக்கு ஒரு மாற்று வழியை வழங்குகிறது. இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், உங்களுடைய ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் நம்பர் கணக்குகளை உருவாக்கி, ஒரே போனில் 2 வெவ்வேறு வாட்ஸ்அப் கணக்குகளை உங்களால் இயக்க முடியும். இந்த டிரிக்கை ஆக்டிவேட் செய்ய உங்கள் இரட்டை சிம் போனின் செட்டிங்ஸ்-க்கு செல்ல வேண்டும்.

உங்களிடம் சியோமி (Xiaomi), சாம்சங் (Samsung), விவோ (Vivo), ஒப்போ (Oppo), ஹுவாய் (Huawei), ஹானர் (Honor), ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் ரியல்மி (Realme) என்று எந்த ஸ்மார்ட்போன் உங்களிடம் இருந்தாலும் சரி, உங்கள் போனிலும் இரண்டு வாட்ஸ்அப் கணக்கை உங்களால் பயன்படுத்த முடியும்.

உங்கள் போனில் 2 வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த உங்கள் போனில் டூயல் ஆப்ஸ், ஆப் குளோன், ஆப் ட்வின் அல்லது பேரலல் ஆப்ஸ் போன்ற வார்த்தைகளை செட்டிங்ஸ் மெனுவில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆப்ஷனின் பெயர் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனைப் பொறுத்து மாறுபடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இந்த விருப்பத்தை பயன்படுத்தி எப்படி 2 வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம் என்று பார்க்கலாம்.

Xiaomi

ஷாவ்மி (Xiaomi) ஸ்மார்ட்போன் பயனர்கள் உங்கள் போனின் Settings > Apps > Dual apps கிளிக் செய்து, அதிலிருந்து WhatsApp என்பதை கிளிக் செய்யுங்கள்.

Samsung

சாம்சங் (Samsung) ஸ்மாரட்போன் பயனர்கள் Settings > Advance features > Dual Messenger கிளிக் செய்து, அதிலிருந்து WhatsApp என்பதை தேர்வு செய்யுங்கள்.

Vivo

விவோ (Vivo) பயனர்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் Settings > Apps and notifications > App Clone என்று கிளிக் செய்ய வேண்டும். அதிலிருந்து WhatsApp என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.

Oppo

ஒப்போ (Oppo) ஸ்மார்ட்போன் பயனர்கள் Settings > App Cloner கிளிக் செய்து, WhatsApp என்பதை கிளிக் செய்யுங்கள்.

Huawei & Honor

ஹுவாய் (Huawei) ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் (Honor) ஸ்மார்ட்போன் பயனர்கள் Settings > Apps > App twin கிளிக் செய்து உங்களுடைய 2 ஆம் வாட்ஸ்அப்பை ஆக்டிவேட் செய்யலாம்.

OnePlus

ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன் யூசர்ஸ் Settings > Utilities > Parallel Apps என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

Realme

ரியல்மி (Realme) போனில் Settings > App management > App cloner ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செட்டிங்ஸ்-ஐ மாற்றிய பிறகு அங்கு நீங்கள் க்ளோன் செய்ய வேண்டிய வாட்ஸ்அப்பை செலக்ட் செய்ய வேண்டும். இப்போது உங்கள் ஸ்மாரட்போனின் மெயின் மெனு அல்லது ஹோம் ஸ்கிரீனில் ஒரு சிறிய அடையாளத்துடன் இரண்டாவது க்ளோன் செய்யப்பட்ட வாட்ஸ்அப் ஐகானை உங்களால் பார்க்க முடியும்.

இப்போது நீங்கள் உங்களது இரண்டாவது வாட்ஸப்பை பெறலாம். இனி வழக்கம் போல புது வாட்ஸ்அப் கணக்கை துவங்கி பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.