Home How To இன்ஸ்டாகிராம் வீடியோ, புகைப்படம் & ரீல்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

இன்ஸ்டாகிராம் வீடியோ, புகைப்படம் & ரீல்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

நீங்கள் விரும்பும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கம் செய்ய நீங்கள் நினைத்தால்.. முடியாது. ஏனெனில் இன்ஸ்டாகிராம் வழியே நேரடியாக வீடியோவைப் பதிவிறக்க வழி  இல்லை. அதற்கு மூன்றாம் தரப்பு செயலியோ, இணையதளமோ தேவை. ஆஃப்லைனில் பார்க்க அல்லது பிற தளங்களில் பகிர்வதற்காக ஆப்ஸில் இருந்து உங்களுக்குப் பிடித்த வீடியோக்களை நீங்கள் பதிவிறக்க முடியாது என்பதே இதன் பொருள். ஆனால், இன்ஸ்டாகிராம் வீடியோக்களை ஆஃப்லைனில் பார்ப்பதற்கு எப்படிப் பதிவிறக்குவது என்பதை இப்போது பார்க்கலாம். Facebook வீடியோக்களைப் போலவே, Instagram வீடியோக்களைப் பார்க்க நீங்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடு அல்லது உலாவியைப் பயன்படுத்த வேண்டும்.

 

Android மற்றும் iPhone இல் Instagram வீடியோக்களை App மூலம் பதிவிறக்குவது எப்படி?

இன்ஸ்டாகிராமின் புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் போன்றவற்றை டவுன்லோடு செய்வதற்கு ‘video downloader for instagram’ போன்ற Appகள் புகழ்பெற்றவை. இதனை கூகுள் App Storeக்கு சென்று பதிவிறக்கம் செய்து அந்த App மூலம் டவுன்லோடு செய்யலாம். இன்ஸ்டாகிராமின் வீடியோ, புகைப்படங்களை டவுன்லோடு செய்ய தனியாக ஒரு Appஐ பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்களுக்கு மற்றொரு வழியும் உள்ளது. அதாவது நேரடியாக இணையதளத்தின் வழியாகவும் இவற்றை டவுன்லோடு செய்ய முடியும். இன்ஸ்டாவில் இருந்து எப்போதாவது புகைப்படம், வீடியோ, ரீல்ஸை டவுன்லோடு செய்பவர்களுக்கு இந்த வழிமுறை சிறந்ததாக இருக்கும். இதனால்  மொபைலின் சேமிப்புத்திறனை ஆப் அடைத்துக் கொள்ளாது.

Windows / macOS மடிக்கணினிகள் மற்றும் PCகளில் Instagram வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது

 

இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய igram, fastdl, saveinsta போன்ற பல தளங்கள் உள்ளன. இந்த கருவி பதிவிறக்கங்களை ஆதரிக்கும் அனைத்து உலாவிகளிலும் வேலை செய்கிறது. fastDl இன் உதவியுடன் Instagram வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கான முழுமையான செயல்முறையை இப்போது பார்க்கலாம். அனைத்து தளங்களிலிருந்தும் போட்டோ, வீடியோ, ரீல்ஸ், IGTV போன்றவற்றை பதிவிறக்கும் செயல்முறை கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான்.

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள Instagram வீடியோ பதிவிறக்க வழிமுறை அனைத்து Windows 7 / Windows 10, 11 PC மற்றும் Laptop மற்றும் macOS சாதனங்களிலும் வேலை செய்யும்.

Instagram Reels பதிவிறக்கம்

நீங்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் வீடியோவைப் பதிவிறக்க விரும்பினால், மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின் படி நீங்கள் இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் வீடியோவையும், IGTV போன்ற எல்லாவற்றையும் எளிதாகப் பதிவிறக்கலாம்.