வாட்ஸ்-அப்பில் ஜியோ மார்ட்! – அம்பானி மெகா ப்ளான்

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் அனைத்து இடங்களிலும் 5ஜி சேவையை கொண்டுவர உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.

அதாவது மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இணைந்து எண்ட்-டு-எண்ட் (End to end) வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய சேவை மூலம் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் எளிமையாக வாங்க முடியும்.

ஜியோமார்ட்

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள JioMart on WhatsApp சேவை மூலம் பயனர்கள் ஜியோமார்ட்-இல் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ளலாம். பின்பு பொருட்கள் வாங்குவதோடு, பணம் செலுத்துவது என அனைத்தையும் வாட்ஸ்அப் சாட் மூலமாகவே செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப்

ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் சேவை மூலம் பல லட்சம் வியாபாரங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி கிடைக்கும். இதனால் இந்த புதிய சேவை ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கிவிடும் என்றுதான் கூறவேண்டும்.

ஷாப்பிங் செய்வது எப்படி?

உங்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து ஜியோமார்ட்டில் ஷாப்பிங் செய்ய 7977079770 என்ற எண்ணிற்கு “Hi”என்று குறுந்தகவல்அனுப்ப வேண்டும். அதன்பின்பு உங்களுக்கு பிடித்த ஜியோமார்ட் பொருட்களை நீங்கள் வாட்ஸ்அப்-இல் வாங்க முடியும்.

45-வது ஆண்டு கூட்டம்

அதேபோல் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 45-வது ஆண்டு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் எதிர்கால முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி நெட்வொர்க் சேவை

இந்த கூட்டத்தில் 5ஜி நெட்வொர்க் சேவை, குறைந்த விலையில் 5ஜி போனுக்கான திட்டங்கள், புதிய ஜியோ போன் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார் முகேஷ் அம்பானி. அதில் 5ஜி சேவை முதற்கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு (2023) டிசம்பருக்குள், இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் மூலை முடுக்கெல்லாம் ஜியோ 5ஜி சேவையை வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.

5ஜி இணைய சேவை

மேலும் ஜியோ கொண்டுவரும் 5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும். குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.