Home How To மொபைல் போன் மற்றும் கணினியில் தமிழில் டைப் செய்வது எப்படி?

மொபைல் போன் மற்றும் கணினியில் தமிழில் டைப் செய்வது எப்படி?

Highlights
  • தமிழ் உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும்.
  • மொபைல் மற்றும் கணினியில் தமிழில் எழுத பல செயலிகள் இருக்கின்றன.
  • கணினியில் தமிழில் எழுத, தட்டச்சு கற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவில் பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் பரவலாக இருந்தாலும், தென் இந்தியாவில் தமிழ் மிகவும் பிரபலமாக உள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தமிழ் பேசுகிறார்கள். தகவல் மற்றும் தொழில்நுட்ப காலத்தில், விஷயங்கள் வேகமாக மாறி வருகின்றன. இப்போது மக்கள் மெசேஜிங் ஆப் மூலம் பெரும்பாலான விஷயங்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர். மக்கள் தங்கள் எண்ணங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் அல்லது ட்விட்டர் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சொந்த மொழியான தமிழ் மொழியில் ஒரு செய்தி வந்தவுடன், மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாகிறது. ஆனால் இந்த மெசேஜிங் ஆப்களில் தமிழில் எழுதுவது எப்படி என்பது சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதை இன்று நாங்கள் உங்களுக்கு கற்றுத் தருகிறோம்.

 

தமிழில் எழுதுவது எப்படி?

தமிழில் எழுதுவதற்கு தமிழ் விசைப்பலகை கிடைக்கிறது. தமிழ் தட்டச்சு தெரியாவிட்டாலும் தமிழில் எளிதாக எழுதலாம். இன்று பல ஆன்லைன்-ஆஃப்லைன் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன, அதன் உதவியுடன் நீங்கள் தமிழில் எளிதாக எழுதலாம். முதலில், மொபைலில் தமிழில் எழுதுவது எப்படி என்று பார்க்கலாம்.

மொபைலில் தமிழில் எழுதுவது எப்படி?

மொபைலில் தமிழில் எழுத, கூகுளின் ஜி-போர்டை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.

படி 1: முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் இருந்து ஜி-போராட் கீபோர்டை நிறுவ வேண்டும்.

படி 2: இந்த கீபோர்டை நிறுவிய பின், ஃபோன் அமைப்பில் உள்ள ‘மொழி & உள்ளீடு’ மெனுவிற்குச் செல்ல வேண்டும்.

படி 3: இப்போது இங்கே விசைப்பலகை மற்றும் உள்ளீட்டு விருப்பத்தில் தற்போதைய விசைப்பலகை விருப்பத்தைத் தட்டவும். இங்கே நீங்கள் விசைப்பலகையைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைப் பெறுவீர்கள். இங்கே நீங்கள் G-Borad ஐ தேர்வு செய்யவும்.

படி 4: கீபோர்டைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் G-Borad இன் அமைப்பிற்குச் சென்று, மொழியில் தமிழைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கே நீங்கள் விசைப்பலகை வகை விருப்பத்தில் abc – தமிழ் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது உங்கள் கீபோர்டு தமிழுக்கு மாற்றப்பட்டுவிடும். இப்போது நீங்கள் ‘அம்மா இங்கே வா’ என்று எழுத விரும்பினால், நீங்கள் ’ammaa inge vaa’ என்று தட்டச்சு செய்ய வேண்டும். இந்த வழியில் நீங்கள் மொபைல் போனில் எளிதாக தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.

 

கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?

கணினியில் ஆன்லைனில் தமிழில் எழுத பல வழிகள் உள்ளன. அதுபோல் ஆஃப்லைனில் எழுதவும் சில நிரல்கள் (program) உள்ளன. இதெற்கென நீங்கள் தட்டச்சு கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனில் தமிழில் எழுதுவது எப்படி என்பதைப் பார்க்கலாம். இதற்கு நீங்கள் Google Chrome extention அல்லது Google உள்ளீட்டு கருவியைப் பயன்படுத்த வேண்டும்.

 

Google input tool

உங்கள் கணினியில் கூகுள் குரோம் பிரவுசர் இருந்தால், கூகுள் இன்புட் டூல் எக்ஸ்டென்ஷனை நிறுவி குரோம் பிரவுசரில் தமிழில் தட்டச்சு செய்யலாம். அது எப்படி என்பதை படிப்படியாக பார்க்கலாம்.

படி 1: முதலில் நீங்கள் Chrome ப்ரெளசரில் Chrome  Web Store-ஐ திறக்க வேண்டும்.

படி 2: இப்போது நீங்கள்  Search barல் Google input tools-ஐத் தேட வேண்டும். Add to Chrome என்பதைத் தட்டி அதை நிறுவவும்.

படி 3: இப்போது நீங்கள் ப்ரெளசரின் மேலே உள்ள Extention-ஐ கிளிக் செய்து Google input tools-ஐ கிளிக் செய்ய வேண்டும். இங்கே நீங்கள் Extention option-ஐ கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் தமிழைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படி 4: இப்போது மீண்டும் ஒருமுறை கூகுள் இன்புட் டூலை கிளிக் செய்து பின் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் Google Chrome இல் எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம். தமிழில் தட்டச்சு செய்வதற்கு முன், நீங்கள் chrome நீட்டிப்பை இயக்க வேண்டும்.

நிரல்களைப் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

நீங்கள் இணைய இணைப்பு இல்லாத போதும் தமிழில் டைப் செய்ய பல நிரல்கள் (Software / Program) இருக்கின்றன. இவற்றில் சில நல்ல நிரல்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன. அப்படி ஒன்று தான்..’NHM Writer’. தமிழ் மட்டுமல்லாது இந்திய மொழிகள் பலவற்றை இதனை உபயோகித்து ஃபோனோடிக் முறையில் டைப் செய்ய முடியும். ஃபோனோடிக் முறையில் ‘ammaa’ என்று டைப் செய்தால் ‘அம்மா’ என்று தமிழில் வரும்.

 

NHM Writer

NHM Writer என்பது ஒரு இலவச நிரல் ஆகும். கூகுளில் இந்த பெயரில் தேடினால் அந்த நிரல் கிடைக்கும். இதை டவுன்லோடு செய்து நிறுவ வேணும். அப்படி நிறுவும் போது தேவையான மொழியில் ‘தமிழை’ தேர்ந்தெடுக்க வேண்டும். (tamil – phonotic) நிறுவிய பின், நமது கணினியின் டாஸ்க் பாரின், தேதி-நேரம் காட்டும் இடத்தின் அருகே மணி போன்ற ஒரு குறியீட்டைக் காண முடியும். இப்போது அந்த ஐகானை க்ளிக் செய்து அதில் Tamil –phonotic என்பதை க்ளிக் செய்யவும். இப்போது அந்த மணி போன்ற ஐகான் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும். இப்போது நீங்கள் ஃபேஸ்புக், வாட்ஸப் போன்ற இணையத்திலோ, அல்லது Ms-office Word போன்ற எதில் வேண்டுமானாலும் மேற்சொன்ன முறையில் தமிழில் டைப் செய்யலாம்.