50MP கேமரா + 5000mAh பேட்டரி + 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் = ரூ.10,000!

மொபைலில் வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் விலையும் அதிகமாகும். தற்போது வெளியாகும் மொபைல்களில் சில கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘கேமரா செண்ட்ரிக்’  மொபைலாக வருகின்றன. வேறு சில மொபைல்கள் பேட்டரிக்கு முக்கியத்துவம் கொடுத்து 7000mAh வரையிலான பேட்டரியோடு வருகின்றன. இப்படி எதேனும் ஒரு வசதியை அதிகப்படுத்தினால் மற்றொரு வசதியை குறைந்துவிடும். நல்ல கேமரா இருக்கும் மொபைலில் சேமிப்புத்திறன் குறைவாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி எல்லா வசதிகளும் இருந்தால் அந்த மொபைலின் விலை மிக அதிகமாக இருக்கும்.

ஆனால், அப்படி பொதுவாகச் சொல்லிவிட முடியாது. நல்ல வசதிகளோடு, குறைந்த விலையில் சில மொபைல்கள் வரத்தான் செய்கின்றன. அப்படி 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் ரூ.10,000க்கும் குறைவான விலையில் வெளியான சில மொபைல்களை உங்களுக்காக தேடி எடுத்து தொகுத்து இருக்கிறோம்.

 

ரூ.10,000க்கும் குறைவான விலையில் 50MP கேமரா + 5000mAh பேட்டரி + 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியான மொபைல்கள்

 

  • Xiaomi Redmi 12
  • Realme C53
  • Itel S23
  • POCO C55
  • Nokia C32
  • Realme Narzo 50A
  • Xiaomi Redmi 12C

 

Xiaomi Redmi 12

இந்த மொபைல் MediaTek Helio G88 பிராசஸர் உடன் வருகிறது. இதில் 50MP கேமரா தவிர்த்து கூடுதலாக இரண்டு கேமராக்கள் பின்பக்கத்திலும், முன் பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும் இருக்கின்றன. 6.78 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் தவிர்த்து, SD கார்டு மூலம் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 4GB RAM வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ 9,999

 

Realme C53

இந்த மொபைல் Unisoc T612 பிராசஸர் உடன் வருகிறது. இதில் 50 அல்ல.. 108MP கேமரா முதன்மை கேமராவாக வருகிறது. இது தவிர்த்து கூடுதலாக ஒரு B/W கேமராவும் உள்லது. முன் பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும் இருக்கின்றன. 6.74 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் தவிர்த்து, SD கார்டு மூலம் இதன் சேமிப்புத்திறனை 2TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 4GB RAM வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ 9,999

 

Itel S23

இந்த மொபைல் Unisoc T606 பிராசஸர் உடன் வருகிறது. இதில் 50MP கேமரா தவிர்த்து கூடுதலாக தவிர்த்து கூடுதலாக ஒரு கேமராவும் உள்லது. முன் பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும் இருக்கிறது. 6.6 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் தவிர்த்து, SD கார்டு மூலம் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 8GB RAM வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ 8,999

 

POCO C55

இந்த மொபைல் MediaTek Helio G85 பிராசஸர் உடன் வருகிறது. இதில் 50MP கேமரா தவிர்த்து கூடுதலாக தவிர்த்து கூடுதலாக ஒரு 2MP கேமராவும் உள்லது. முன் பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. 6.71 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் தவிர்த்து, SD கார்டு மூலம் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 6GB RAM வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ 8,499

 

Nokia C32

இந்த மொபைல் Unisoc SC9863A1 பிராசஸர் உடன் வருகிறது. இதில் 50MP கேமரா தவிர்த்து கூடுதலாக தவிர்த்து கூடுதலாக ஒரு 2MP கேமராவும் உள்லது. முன் பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. 6.51 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் தவிர்த்து, SD கார்டு மூலம் இதன் சேமிப்புத்திறனை 256GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 4GB RAM வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ 8,999

 

Realme Narzo 50A

இந்த மொபைல் MediaTek Helio G85 பிராசஸர் உடன் வருகிறது. இதில் 50MP கேமரா தவிர்த்து கூடுதலாக இரண்டு கேமராக்கள் பின்பக்கத்திலும், முன் பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும் இருக்கின்றன. 6.5 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் தவிர்த்து, SD கார்டு மூலம் இதன் சேமிப்புத்திறனை 256GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 4GB RAM வழங்கப்பட்டுள்ளது. இதில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ 9,999

 

Xiaomi Redmi 12C

இந்த மொபைல் MediaTek Helio G85 பிராசஸர் உடன் வருகிறது. இதில் 50MP கேமரா தவிர்த்து கூடுதலாக இன்னொரு கேமரா பின்பக்கத்திலும், முன் பக்கத்தில் 5MP செல்ஃபி கேமராவும் இருக்கின்றன. 6.71 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் தவிர்த்து, SD கார்டு மூலம் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 4GB RAM வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ 9,299