இனி நெட்ப்ளிக்ஸில் பாஸ்வேர்டு ஷேரிங் பண்ண முடியாது!

ஓடிடி தளங்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கூடுதல் பணம் வசூலிக்க திட்டம்

இந்நிலையில் Netflix வெளியிட்ட தகவலின்படி, பாஸ்வேர்ட் பகிர்வு.. பயனர்கள் இழப்புக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. இதை பலரும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செய்கின்றனர். எனவே இனி யாரும் தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிர முடியாது என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் கணக்கு “உங்கள் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட நபர்களுடன் பகிரப்படக்கூடாது” என நிறுவனக் கொள்கை கூறுகிறது. இந்த கொள்கையை மீறும் பயனர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்க நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பயனர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நெட்ஃபிளிக்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்ஷன்

நெட்ஃபிளிக்ஸ் ரீசார்ஜ் திட்டத்திலேயே ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்ஷன் இருக்கிறதே என்ற கேள்வி வரலாம். நெட்பிளிக்ஸ் எடுக்கும் நடவடிக்கை நெட்பிளிக்ஸ் எடுக்கும் நடவடிக்கை இதை பயன்படுத்தி தான் பலரும் தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிர்ந்து வருகின்றனர் எனவும் இனி பயனர்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை அறிந்து, ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரீமியம் திட்டங்களின் வாடிக்கையாளர்கள் பகிர்ந்த பாஸ்வேர்ட்களை பயன்படுத்தும் நபர்களின் சுயவிவரம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் பெறப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே நீங்கள் ஒரு கருவியில் நெட்ஃபிளிக்ஸை பயன்படுத்திவிட்டு திடீரென அடுத்த லொகேஷனில் உள்ள நபர்களுக்கு பாஸ்வேர்ட்டை பகிர முடியாது என கூறப்படுகிறது.

எப்போது அமலுக்கு வருகிறது?

ஒரு பயனர் தனது கணக்கின் பாஸ்வேர்ட்டை குடும்பத்தில் உள்ள நபர்களை தவிர்த்து வேறு யாருக்கேனும் பகிர்ந்தால் இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023 இல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வர இருக்கிறது.

கட்டணம் எவ்வளவு?

நெட்ஃபிளிக்ஸ் யூஸர் ஐடி பாஸ்வேர்ட்டை அப்படி வேறு ஒருவருக்கு பகிரும் பட்சத்தில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரத்தை நிறுவனம் வெளியிடவில்லை. இந்த சேவை தற்போது சில லத்தீன் அமெரிக்க நாட்டில் சோதிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் பாஸ்வேர்ட் பகிரும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் $2.99 (சுமார் ரூ.246) வசூலிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் சந்தா கட்டணத்தின் விகிதத்தில் நான்கில் ஒரு பங்கு இதுவாகும்.

விளம்பர திட்டம்

நெட்ஃபிளிக்ளின் இந்த நடவடிக்கையால் பயனர்கள் அதிருப்தி அடைவார்களே என்று கணிக்கப்பட்டு வந்த நிலையில் நிறுவனம் இதை மற்றொரு வகையில் ஈடு செய்திருக்கிறது. அதாவது நிறுவனம் விளம்பரம் அடிப்படையிலான ரீசார்ஜ் திட்டத்தை அறிவிக்க இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Netflix விளம்பர அடிப்படையிலான திட்டங்களுக்கு மாதத்திற்கு USD 7 முதல் USD 9 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.559 முதல் ரூ.719 ஆகும். தற்போதுவரை அமெரிக்காவில் நெட்ஃபிளிக்ஸ் 1 மாத திட்டத்திற்கான விலை USD 9.99 (சுமார் ரூ.799), USD 15.49 (சுமார் ரூ.1,239), மற்றும் USD 19.99 (சுமார் ரூ.1,599) என வசூலிக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை விலை இந்த அளவிற்கு இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை மொபைல் திட்டம் ரூ.149 என வசூலிக்கப்படுகிறது. எனவே நெட்ஃபிளிக்ஸ் விளம்பர திட்டங்கள் விலை இந்தியாவில் மிக குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாதாந்திர திட்டம் விலை ரூ.149 ஆக இருக்கும் காரணத்தால், விளம்பர திட்டங்களின் விலை ரூ.100க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.