250 கிலோ எடையைத் தாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒடிசி ட்ரோட்.

Highlights

  • ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் (Odysee Electric Vehicles) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ட்ரோட் (Trot) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்து இருக்கிறது.
  • இந்த ஒடிசி ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வணிக தேவைக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்பட ஸ்கூட்டர் குறித்த முக்கிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். புதிய ஒடிசி ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது பி2பி சந்தைக்கானது ஆகும். அதாவது, கேஸ் சிலிண்டர்கள், எடைமிக்க ஹார்ட்வேர் பாகங்கள், வாட்டர் கேன்கள் உள்பட அன்றாடம் பயன்படுத்தக்கூடிய குறைந்த எடைமிக்க பொருட்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும்.

 

விலை & உத்திரவாதம்

மேலும், இத்தகைய பணிகளுக்கு ஏற்றவாறு இந்த ஸ்கூட்டரை கஸ்டமைஸ்ட் செய்தும் கொள்ளலாம். ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.99,999-ஐ ஒடிசி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த இ-ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 3 வருட உத்தரவாதத்தையும், எலக்ட்ரிக் மோட்டாருக்கு 1 வருட உத்தரவாதத்தையும் ஒடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள ஒடிசி டீலர்ஷிப் மையங்களில் வாங்கலாம்.

 

திறன்

ஏற்கனவே கூறியதுபோல், லாஸ்ட்-மைல் டெலிவிரி பணிகளுக்கு ஏற்றதாக விளங்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 250 கிலோ வரையிலான எடையை கொண்டு செல்லும் திறன் கொண்டது. ட்ரோட் ஸ்கூட்டரை மஞ்சள், கருப்பு, சிவப்பு மற்றும் மெரூன் என மொத்தம் 4 விதமான நிறத்தேர்வுகளில் வாங்கலாம்.

அம்சங்கள்

முக்கிய தொழிற்நுட்ப அம்சங்களாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் பிஎம்எஸ் மற்றும் எல்இடி ஓடோமீட்டர் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ஐஒடி எனப்படும் இன்ஃபர்மேஷன் ஆஃப் டெக்னாலஜி இணைப்பு வசதியும் ட்ரோட் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகனம் இருக்கும் இடத்தை அடையாளம் காணுதல், ஜியோ-ஃபென்சிங் மற்றும் இம்மொபைலிசேஷன் உள்ளிட்ட அம்சங்களை பெறலாம்.

பேட்டரி

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த இ-ஸ்கூட்டரில் 250 வாட் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. நீக்கக்கூடிய 60 வோல்ட் 32 ஆம்பியர் வாட்டர்ப்ரூஃப் பேட்டரியின் மூலம் இயக்க ஆற்றலை எலக்ட்ரிக் மோட்டார் பெறுகிறது.

மைலேஜ்

இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 75 கிமீ-க்கு தொடர்ந்து பயணிக்க முடியும். ஸ்கூட்டருடன் வழங்கப்படும் சார்ஜரை கொண்டு இந்த பேட்டரியை வெறும் 2 மணிநேரங்களில் 0-60% சார்ஜ் நிரப்பிவிட முடியும். அதுவே 0-100% சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 4 மணிநேரங்கள் தேவைப்படும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க முடியும்.

ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து பேசிய ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ நெமின் வோரா, “புதிய ஒடிசி ட்ரோட் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் மூலம் இந்தியாவின் வணிகங்களுக்கான லாஸ்ட் மைல் டெலிவிரி சேவைகளை எலக்ட்ரிக் ஆக்குவதை நோக்கமாக நாங்கள் கொண்டுள்ளோம். பி2பி இவி பிரிவில் எங்களது எண்ட்ரீயை பதிவு செய்துவதுடன், சந்தையின் போக்கை மாற்றக்கூடிய ஸ்கூட்டர்களுள் இதுவும் ஒன்று. ட்ரோட் போன்ற தயாரிப்புகளின் மூலமாக வளர்ச்சியை பதிவு செய்யவும், பிரிவில் புதிய பென்ச் மார்க்கை அமைக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

 

வேரியண்ட்கள்

இந்த புதிய அறிமுகத்தின் மூலம் ஒடிசி பிராண்டில் இருந்து சந்தையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. புதிய ட்ரோட் ஸ்கூட்டர் மட்டுமின்றி, இ2கோ, ரேசர் மற்றும் ஹாவ்க் என்ற மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், எவோக்கிஸ் என்ற எலக்ட்ரிக் பைக்கையும் ஒடிசி நிறுவனம் விற்பனை செய்கிறது.