181கிமி ரேஞ்ச் தரும் புதிய பேட்டரியை அறிமுகப்படுத்திய ஓலா!

Highlights

  • ஓலா நிறுவனம் தனது ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ஏர் ஆகிய பைக்குகளில் புதிய பேட்டரி பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது 181 கி.மீ ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது.

ஓலா நிறுவனம் தனது எஸ்1ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்த நிலையில் மக்கள் மத்தியில் அதற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதனால் அதன் விற்பனை படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது.

 

புதிய பேட்டரி

ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஸ்கூட்டரில் எஸ்1 ப்ரோ, எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய வேரியன்ட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய வேரியன்ட்களில் புதிய பேட்டரி ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி 8.5 கிலோ வாட் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 181 கி.மீ ரேஞ்சை வழங்கும்.

ரேஞ்ச்

எஸ்1 ஸ்கூட்டரில் அதே மெக்கானிக்கல் மாற்றத்துடன் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஓலா நிறுவனம் தனது எஸ் 1 ஸ்கூட்டரில் 2 கிலோ வாட் பேட்டரியுடன் புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மோட்டாரை பொருத்தவரை அதே 8.5 கிலோ வாட் மோட்டார் தான் இருக்கிறது. ஆனால் இது ஐடிசி ரேஞ்சாக 91 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் இருக்கும்.

 

மைலேஜ்

ஓலா நிறுவனம் எஸ்1 ஏர் ஸ்கூட்டரிலும் 3 விதமான போக்குகளை ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தனையிலும் பொதுவாக மோட்டாரை பொருத்தவரை 4.5 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அனைத்தும் அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த மூன்றுக்கும் பேட்டரி பேக் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். 2 கிலோ வாட் ஹவர், 3 கிலோ வாட் ஹவர் மற்றும் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இருக்கிறது. இதில் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் அதிகபட்சமாக 165 கி.மீ வரை ரேஞ்ச் தரும். அதுவே 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. 125 கி.மீ வரை ரேஞ்ச் தரும். இறுதியாக 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. 85 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை

தற்போது ஓலா நிறுவனத்திடம் எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 3 பேக்குகள். எஸ்1 ஸ்கூட்டரில் 2 பேக்குகள், எஸ்1 ப்ரோவில் 1 ஸ்கூட்டர் என மொத்தம் 6 விதமான ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் தற்போது மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமல்ல ஓலா நிறுவனம் இந்த ஸ்கூட்டர்களுக்கான விலை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. எஸ்1 ஏர் 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடனான ஸ்கூட்டர் ரூ84,999 என்ற விலையிலும், 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ99,999 என்ற விலையிலும், 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ1,09,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இதுவே எஸ்1 ஸ்கூட்டரை பொருத்தவரை 2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ99,999 என்ற விலையிலும், 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ1,09,999 என்ற விலையிலும், எஸ்1 ப்ரோ என்ற 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ1,29,999 என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலையெல்லாம் பெங்களூரு எக்ஸ் ஷோரூம் விலையாகும். மொத்தத்தில் புதிதாக 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஓலா ஸ்கூட்டரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

அப்கிரேடு

எஸ்1 ஏர் ஸ்கூட்டர்களுக்கான அனைத்து பேட்டரி பேக் வேரியன்ட்களுக்கான புக்கிங்கும் துவங்கிவிட்டது. ஆனால் இந்த ஸ்கூட்டர்கள் எல்லாம் ஜூலை மாதம் தான் விற்பனைக்கு வரவுள்ளன. இதற்கு முன்னர் 2.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் எஸ்1 ஏர் ஸ்கூட்டரை ரிசர்வ் செய்தவர்களுக்கு இலவசமாக 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் அப்கிரேடு செய்யப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.