இந்தியாவுக்கு வருமா ரெட்மி கே60, ரெட்மி கே60 ப்ரோ மற்றும் ரெட்மி கே60இ?

ரெட்மி நிறுவனம், ரெட்மி கே60, ரெட்மி கே60 ப்ரோ மற்றும் ரெட்மி கே60இ ஆகிய போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரெட்மி கே60, ரெட்மி கே60 ப்ரோ மற்றும் ரெட்மி கே60இ போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இந்த போன்களின் சரியான அறிமுக தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ரெட்மி கே60 சீரிஸின் இந்திய விலை பற்றிய தகவலை ரெட்மி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

விலை

ரெட்மி கே60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.30,000 விலை பிரிவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி கே60 மற்றும் ரெட்மி கே60 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.30,000, ரூ.40,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் ரெட்மி கே60இ ஸ்மார்ட்போன் ரூ.26,000-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போன்களின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி கே60 ப்ரோ 5ஜி அம்சங்கள்

ரெட்மி கே60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். கூடவே 6.67-அங்குல 2கே டிஸ்பிளே வசதி இதில் உள்ளது. இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 5000 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

கேமரா

ரெட்மி கே60 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX800 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி tertiary சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ரெட்மி கே60 5ஜி அம்சங்கள்

ரெட்மி கே60 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 6.67 அங்குல 2கே டிஸ்பிளே வசதி இதில் உள்ளது. இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 5500 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

கேமரா

ரெட்மி கே60 5ஜி ஸ்மாட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி macro சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமராவை முன்பக்கத்தில்க் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ரெட்மி கே60இ அம்சங்கள்

ரெட்மி கே60இ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 6.67 அங்குல டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே60இ ஸ்மார்ட்போன்.

கேமரா

ரெட்மி கே60இ ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.