atto 3 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 05:29:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! https://www.91mobiles.com/tamil/byd-launches-atto-3-special-edition-limited-car/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-launches-atto-3-special-edition-limited-car Fri, 13 Jan 2023 13:16:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4998 நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிசையாகக் காட்சிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இந்தாண்டு இந்த கண்காட்சியில் பிஒய்டி என்ற சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவி9 காரை அறிமுகப்படுத்தியது. தோற்றம் இத்துடன் சேர்ந்து இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் அட்டோ 3 காரின் ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் […]

The post ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! first appeared on .

]]>

Highlights

  • பிஒய்டி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிசனை உருவாக்கி பார்வைக்கு வைத்துள்ளது.
  • இந்த ஸ்பெஷல் எடிஷனில் வெறும் 1200 கார்களை மட்டுமே உருவாக்க இருக்கிறது.
  • இந்த பிஒய்டி அட்டோ 3 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது.
  • இந்த கார் முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும்.

நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிசையாகக் காட்சிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இந்தாண்டு இந்த கண்காட்சியில் பிஒய்டி என்ற சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவி9 காரை அறிமுகப்படுத்தியது.

தோற்றம்

இத்துடன் சேர்ந்து இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் அட்டோ 3 காரின் ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஓஆர்விஎம்கள் மட்டும் கருப்பு நிறத்திலும், வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் வீல்களில் டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஒய்டி அட்டோ 3 கார் அந்நிறுவனத்தின் இ-பிளாட்ஃபார்ம் 3.0-ல் உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டரி & மைலேஜ்

அட்டோ 3 காரை பொருத்தவரை அந்நிறுவனத்தின் பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மிகப்பெரிய மோட்டாரை கையாளும் திறன் கொண்டது. மேலும் இந்த காரில் வெஹிகில் – டூ-லோடு பங்ஷன் இருக்கிறது. இந்த பேட்டரி 3.3 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும்.

இந்த காரில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் முன்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 201 பிஎச்பி பவரையும் 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பிஒய்டி அட்டோ 3 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த கார் முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும்.

அம்சங்கள்

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை 12.8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய கனெக்ட்டிவிட்டி அம்சங்களை உள்ளடக்கியது. இதுபோக இந்த காரின் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இது போக இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு முன்பக்க சீட்கள், ஒன் டச் எலெக்ட்ரிக் டெயில் கேட், ஆகியஅம்சங்கள் இருக்கிறது. மிக முக்கியமாக இந்த காரில் ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது. இதில் 7-ஏர்பேக், ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில்-ஹோல்டு அசிஸ்ட், மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

விலை

இந்த கார் ஒரு லிமிட்டட் எடிசன் கார் என்பதால் வெறும் 1200 கார்களை மட்டுமே தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ34.49 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

The post ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! first appeared on .

]]>
சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3! https://www.91mobiles.com/tamil/byd-atto3-wins-award/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-atto3-wins-award Mon, 12 Dec 2022 08:34:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4244 பிஒய்டி அட்டோ3 சமீபத்தில் பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எனும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது. இது இந்தியாவில் வெளியான பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது கார் ஆகும். அதுவரை இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வந்தது. இந் நிலையில், இந்த அட்டோ 3 எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை பிஒய்டி அறிமுகப்படுத்தியது. இதுவும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்டதாகும். இதுவரை இந்த காரை 1,500 -க்கும் அதிகமான இந்தியர்கள் […]

The post சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3! first appeared on .

]]>

பிஒய்டி அட்டோ3

சமீபத்தில் பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எனும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது. இது இந்தியாவில் வெளியான பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது கார் ஆகும். அதுவரை இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வந்தது. இந் நிலையில், இந்த அட்டோ 3 எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை பிஒய்டி அறிமுகப்படுத்தியது. இதுவும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்டதாகும். இதுவரை இந்த காரை 1,500 -க்கும் அதிகமான இந்தியர்கள் புக் செய்திருக்கின்றனர். ஏற்கனவே, பென்ஸ், ஆடி போன்ற சொகுசு கார்களை பயன்படுத்தி வரும் இந்தியர்களே இந்த காரை அதிகளவில் புக் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருது

இந்த அட்டோ 3, தற்போது ‘விஏபி எலெக்ட்ரிக் ஃபேமிலி கார் ஆஃப் தி இயர் 2023’ (VAB Electric Family Car of the Year 2023) விருதை வென்றிருக்கின்றது. 15 நடுவர்கள் அடங்கிய குழுவே இந்த விருதை எலெக்ட்ரிக் காருக்கு வழங்கியிருக்கின்றது. இந்த 15 நடுவர்களும் மோட்டார் வாகன உலகைச் சேர்ந்த கை தேர்ந்த பத்திரிக்கையாளர்கள் ஆவார்கள். இவர்களின் நற்மதிப்புடன் சேர்த்து 74 க்கும் அதிகமானோர் தங்களின் குடும்பத்திற்கு ஏற்ற காராக இந்த எலெக்ட்ரிக் கார் இருப்பதாக வாக்களித்திருக்கின்றனர்.

போட்டியில் பிஒய்டி அட்டோ 3 உடன் சேர்த்து ஃபோக்ஸ்வேகன், ரெனால்ட், சிட்ரோன், நிஸான், சியூப்ஆர்ஏ, எம்ஜி, ஐவேஸ், செரஸ் மற்றும் சாங்யாங் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களும் இந்த போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் தயாரிப்புகளைக் காட்டிலும் மிக சிறப்பானதாக பிஒய்டி அட்டோ3 காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே பல கட்ட ஆய்விற்கு பின்னர் அக்காருக்கு மிக சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளது. டிசைன், அதிக கம்ஃபோர்ட், தரம் என அனைத்திலும் இந்த கார் மிக தரமானது என்று மக்களால் பாராட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அதிக வாரண்டி, லாபம், அதிக இட வசதி, உயர் தர சிறப்பம்சங்கள் ஆகியவைகள் விஷயத்திலும் இந்த கார் நற் மதிப்பையே பெற்றிருக்கின்றது.

ஐந்து ஸ்டார்

பிஒய்டி ஏற்கனவே அதிக பாதுகாப்பான வாகனம் என்கிற விருதையும் வென்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பான கார் என்ற ரேட்டிங்கைப் பெற்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு விருதுகளை இந்த கார் வெகு விரைவில் வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 33.99 லட்சம். இந்த காரின் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்தே நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஏராளமான இந்தியர்கள் எலெக்ட்ரிக் காரை புக் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

மைலேஜ்

இந்த காரில் ஓர் ஃபுல் சார்ஜில் 521 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 60.48 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வாயிலாககூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 0 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இதேபோல், இக்காரை 2 ஏசி பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் சார்ஜ் செய்யும்போது முழு சார்ஜை எட்ட 10 மணி நேரங்களை அட்டோ 3 எடுத்துக் கொள்ளும்.

திறன்

இந்த மின்சார காரில் 201 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரையே பிஒய்டி பயன்படுத்தியிருக்கின்றது. இது வெறும் 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

வசதிகள்

இக்காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக கேபினை விரைவில் குளிர்விக்கக் கூடிய பவர்ஃபுல் ஏசி, வட்ட வடிவ ஸ்பீக்கர்கள், 12.8 அங்குல ரொட்டேட் செய்யும் வசதிக் கொண்ட திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 5 அங்குல டிஜிட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல ஏராளமான அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்டவையே பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

The post சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3! first appeared on .

]]>
இந்தியாவின் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்கள் https://www.91mobiles.com/tamil/indias-safest-electric-cars-list/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=indias-safest-electric-cars-list Tue, 18 Oct 2022 08:23:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3101 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். பெரிய மோதலின் போது கூட நல்ல பாதுகாப்பை வழங்கக் கூடிய பல கார்கள்  தற்போது இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. அந்தவகையில், அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கும் குறிப்பிட்ட சில எலெக்ட்ரிக் கார்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். இந்த லிஸ்டில் டாடா டிகோர் இவி, ஹூண்டாய் கோனா இவி, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் பிஒய்டி அட்டோ3 ஆகிய […]

The post இந்தியாவின் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

பெரிய மோதலின் போது கூட நல்ல பாதுகாப்பை வழங்கக் கூடிய பல கார்கள்  தற்போது இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. அந்தவகையில், அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கும் குறிப்பிட்ட சில எலெக்ட்ரிக் கார்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இந்த லிஸ்டில் டாடா டிகோர் இவி, ஹூண்டாய் கோனா இவி, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் பிஒய்டி அட்டோ3 ஆகிய எலெக்ட்ரிக் கார்களின் சிறப்புகள் மற்றும் பாதுகாப்பு ரேட்டிங் பற்றிய தகவல்களை பார்க்க இருக்கின்றோம்

டாடா டிகோர் இவி (Tata Tigor EV)

இந்தியாவின் மிக மலிவு விலைக் கொண்ட கார் என்ற புகழுக்கு சொந்தக்காரராக டியாகோ இவி விற்பனைக்கு வரும் வரையில் இருந்த எலெக்ட்ரிக் காரே டாடா டிகோர் இவி. இந்தியாவில் அதீத பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும். அதேவேலையில், இதுவே இந்தியாவின் முதல் அதிக பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் ஆகும்.

இந்தியா தயாரிப்பான டிகோர் இவி குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களை பெற்றது. இது இக்கார் அதீத பாதுகாப்பு திறன்மிக்கது என்பதற்காக சான்றாக அமைந்தது. இக்கார் 2021 ஆகஸ்டிலேயே மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆய்வின்போது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 12 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 49க்கு 37.24 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 12.24 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹூண்டாய் கோனா இவி (Hyundai Kona EV)

இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் எலெக்ட்ரிக் கார் எஸ்யூவி காரே ஹூண்டாய் கோனா. இந்த மின்சார வாகனம் மிக மிக அதிகாப்பானது என்கிற ரேட்டிங்கை ஏஎன்சிஏபி அமைப்பிடம் இருந்து பெற்றிருக்கின்றது. இது நடத்திய மோதல் ஆய்வில் 37 புள்ளிகளுக்கு 35.07 புள்ளிகளை பெற்று அசத்தியது.

குறிப்பாக, இந்த மோதல் ஆய்வில் காரின் முகப்பு பகுதி மிகவும் அசாத்தியமானது தனி திறனை வெளிப்படுத்தியிருக்கின்றது. கடுமையான மோதலிலும் பெரியளவு பாதிப்பைச் சந்திக்காமல் அது அசத்தியது. இந்த மின்சார எஸ்யூவி கார் தற்போது இந்திய சந்தையில் ரூ. 23.84 லட்சம் தொடங்கி ரூ. 24.03 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.

எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV)

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மற்றுமொரு அதீத பாதுகாப்பு திறன்மிக்க எலெக்ட்ரிக் காராகக எம்ஜி இசட்எஸ் இவி இருக்கின்றது. யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் மிக அதிக புள்ளிகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அதாவது, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 90 சதவீதமும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 85 சதவீத புள்ளளையும் இக்கார் பெற்றது.

இந்த மின்சார வாகனம் தற்போதைய நிலவரப்படி ரூ. 22.58 லட்சம் தொடங்கி ரூ. 26.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எம்ஜி நிறுவனம் இந்த மின்சார காரில் பாதுகாப்பு அம்சங்களாக முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏர் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் என எக்கசக்க அம்சங்களை வழங்கியிருக்கின்றது.

இதுமாதிரியான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மேலே பார்த்த மூன்று எலெக்ட்ரிக் கார்களும் அதீத பாதுகாப்பானவை என்கிற புகழைச் சூடியிருக்கின்றன. இதேபோல் அதீத பாதுகாப்பு திறன்மிக்க கார் என்ற பட்டத்தை சமீபத்தில் இந்தியாவில் வெளியீட்டைப் பெற்ற மற்றொரு எலெக்ட்ரிக் காரும் பெற்றிருக்கின்றது. சீன நிறுவனமான பிஒய்டி அறிமுகப்படுத்திய அட்டோ 3 மின்சார காரே அதுவாகும்.

அட்டோ 3

இந்த எலெக்ட்ரிக் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு ஏற்கனவே புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் 2023 ஜனவரியில் டெலிவரி கொடுக்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக 500 வாடிக்கையாளர்களுக்கே அந்த மாதத்தில் கார்கள் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக 7 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமிரா, ஏபிஎஸ், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அடாஸ் தொழில்நுட்பமும் இக்காரில் வழகப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் தானியங்கி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். இதுமாதிரியான சூப்பரான பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் மிக அதிக புள்ளிகளைப் பெற்று 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற மின்சார கார் என்ற புகழைப் பெற்று இருக்கிறது.

The post இந்தியாவின் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>
521கிமி மைலேஜ் தரும் காரை அறிமுகப்படுத்தியது BYD https://www.91mobiles.com/tamil/byd-launches-atto-3-ev-with-521-km-range-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-launches-atto-3-ev-with-521-km-range-in-india Thu, 13 Oct 2022 08:15:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2992 சீன மின் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (Build Your Dreams), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்டோ 3 இவி எஸ்யூவி காரை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மின்சார காராகும். இதன் வெளியீட்டைத் தொடர்ந்து காருக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளன. இதுவரை பிஒய்டி நிறுவனத்தின் இ6 எனும் ஒற்றை எம்பிவி ரக மின்சார கார் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இந்த நிலையிலேயே தற்போது புதிய அட்டோ 3 இவி எலெக்ட்ரிக் கார் […]

The post 521கிமி மைலேஜ் தரும் காரை அறிமுகப்படுத்தியது BYD first appeared on .

]]>

சீன மின் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (Build Your Dreams), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்டோ 3 இவி எஸ்யூவி காரை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மின்சார காராகும். இதன் வெளியீட்டைத் தொடர்ந்து காருக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளன. இதுவரை பிஒய்டி நிறுவனத்தின் இ6 எனும் ஒற்றை எம்பிவி ரக மின்சார கார் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இந்த நிலையிலேயே தற்போது புதிய அட்டோ 3 இவி எலெக்ட்ரிக் கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

பிஒய்டி, இ6 எலெக்ட்ரிக் காரை நீண்ட நாட்களாக வெறும் கால் டாக்சி துறைக்காக மட்டுமே விற்பனைக்கு வழங்கி வந்தது குறிப்பிடத்தகுந்தது. சமீபத்திலேயே இக்காரை தனிநபர் பயன்பாட்டிற்கும் வாங்கிக் கொள்ளலாம் என நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையிலேயே தன்னுடைய வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் விதமாக அட்டோ3 இவி எலெக்ட்ரிக் காரை அது அறிமுகம் செய்திருக்கின்றது.

ரூ. 50 ஆயிரம் முன்தொகை செலுத்தி இந்த காரை புக் செய்து கொள்ளலாம். காரை புக் செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு வரும் 2023 ஜனவரியில் டெலிவரி கொடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. பிஒய்டி நிறுவனம் பீரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காராக அட்டோ 3 இவியை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் காருக்குள் பன்முக சிறப்பு வசதிகளை அந்நிறுவனம் வழங்கியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. கேபினை விரைவில் குளிர்விக்கும் ஏசி வெண்டுகள், வட்ட வடிவ ஸ்பீக்கர்கள், 12.8 அங்குல ரொட்டேட் வசதிக் கொண்ட திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 5 அங்குல டிஜிட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் (இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), சிந்தெட்டிக் லெதர் இருக்கைகள், பன்முக நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட் உள்ளிட்ட அம்சங்கள் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதேபோல் பாதுகாப்பு அம்மசங்களும் இந்த காரில் மிக ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஏழு ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஏபிஎஸ், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், அடாஸ் எனும் மிக முக்கியமான தொழில்நுட்பமும் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக தானியங்கி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். தொழில்நுட்பம், பாதுகாப்பு வசதி உள்ளிட்டவற்றை போலவே ரேஞ்ஜ் தருவதிலும் மிக சூப்பரான காராக அட்டோ 3-ஐ பிஒய்டி நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

ஒற்றை முழு சார்ஜில் அட்டோ3 எலெக்ட்ரிக் கார் சுமார் 521 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 60.48 kWh பேட்டரி பேக்கை பிஒய்டி பயன்படுத்தியிருக்கின்றது. உலக சந்தையில் இதே வாகனம் 49.92kWh பேட்டரி பேக் தேர்வில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த 60.48 kWh பேட்டரி பேக்கை 80kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். அப்படி இந்த பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 0 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இதேபோல், இக்காரை 2 ஏசி பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் சார்ஜ் செய்யும்பட்சத்தில் முழு சார்ஜூக்கு 10 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். கூடுதல் சிறப்பு வசதியாக இந்த பேட்டரி பேக் மின்சாரத்தை பிற மின்சாதனங்களுக்கு பகிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 201 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த அட்டோ 3, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி, மற்றும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

அட்டோ 3 இவி எலெக்ட்ரிக் கார் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் சற்று கூடுதல் இட வசதியைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, எம்ஜி இசட்எஸ் இவி-யைக் காட்டிலும் 132 மிமீ நீளம் கொண்டதாகவும், ஹூண்டாய் கோனா இவி-யைக் காட்டிலும் 275 மிமீ நீளம் கொண்டதாகவும் அட்டோ 3 காட்டியளிக்கின்றது.

இக்காரை பிஒய்டி நிறுவனம் 4,445 மிமீ நீளம் கொண்டதாகவும், 1,875 மிமீ அகலம் கொண்டதாகவும், 2,720 மிமீ வீல் பேஸைக் கொண்டதாகவும் உருவாக்கியிருக்கின்றது. இதன் பூட் ஸ்பேஸ் அளவு 440 லிட்டர் ஆகும். இக்காரை சிகேடி வாயிலாக இந்தியா வரவழைத்தே, பின்னர், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் வைத்து பிஒய்டி நிறுவனம் அசெம்பிள் செய்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இன்னும் இக்காரின் விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. வெகுவிரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம்.

The post 521கிமி மைலேஜ் தரும் காரை அறிமுகப்படுத்தியது BYD first appeared on .

]]>
Atto 3 எலக்ட்ரிக் காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு https://www.91mobiles.com/tamil/byd-india-officially-confirmed-atto-3-electric-suv-launch-date/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-india-officially-confirmed-atto-3-electric-suv-launch-date Wed, 21 Sep 2022 06:34:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2483 BYD Atto 3 எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சீனாவைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி, அதன் புதிய எலெக்ட்ரிக் காரான அட்டோ 3-ஐ இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது டீசர் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஏற்கனவே இந்த தகவல் வதந்தியாக பரவி வந்த நிலையில் தற்போது […]

The post Atto 3 எலக்ட்ரிக் காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு first appeared on .

]]>

BYD Atto 3 எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சீனாவைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி, அதன் புதிய எலெக்ட்ரிக் காரான அட்டோ 3-ஐ இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது டீசர் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஏற்கனவே இந்த தகவல் வதந்தியாக பரவி வந்த நிலையில் தற்போது பிஒய்டி நிறுவனம் அதிகாரப்பர்வமாக இந்த நாளை உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இன்னும் பத்து நாட்களில் பிஒய்டி-இன் புதுமுக எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

பிஒய்டி நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் இ6 எனும் எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை முன்னதாக வாடகை வாகன சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனைக்கு அளித்து வந்த நிலையில், அண்மையில் தனிநபர் பயன்பாட்டாளர்களும் இக்காரை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து நிறுவனம் நாடு முழுவதும் ஷோரூம்களை திறக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இந்த பணிகளைத் தொடர்ந்து புதுமுக வாகனங்களைக் களமிறக்கும் பணியிலும் அது தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கின்றது. ஆகையால், பிஒய்டி அட்டோ 3 காரைத் தொடர்ந்து இன்னும் சில புதுமுக வாகனங்களையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட வாகனமாகவே பிஒய்டி அட்டோ 3 கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதிக அடர்த்தியான ஒற்றை ஸ்லேட் ஸ்டைலிலான குரோம் கிரில், ட்வின் பாட் எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப்புகள், டூயல் டோன் பம்பர், டிஸ்க் பிரேக்குகள் என பல்வேறு அலங்காரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
காரின் தோற்றத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், 18 அங்குல டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டனா ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்ட 12.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜிங், ஏர் ப்யூரிஃபையர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஐந்து அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளும் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த காரில் என்ன மாதிரியான மின் மோட்டார் மற்றும் பேட்டரி வழங்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போது சர்வதேச சந்தையில் இதே அட்டோ 3 எலெக்ட்ரிக் காரானது ஸ்டாண்டர்டு மற்றும் எக்ஸ்டெண்ட் ரேஞ்ஜ் எனும் இரு வேரியண்டுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இவையிரண்டிலும் வெவ்வேறு விதமான பேட்டரி பேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, ஸ்டாண்டர்டு வேரியண்டு 49.92 kWh பேட்டரி பேக்கிலும், எக்ஸ்டெண்ட் வேரியண்டில் 60.48 kwh பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவை ஓர் ஃபுல் சார்ஜில் 345 கிமீ தொடங்கி 420 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். பேட்டரி பேக்கில் வித்தியாசத்துடன் காணப்படும் இந்த வேரியண்டுகளில் ஒரே மாதிரியான திறனை வெளியேற்றக் கூடிய பேட்டரி பேக்கே வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன், 204பிஎஸ் இ-மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 150 பிஎச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இந்த மோட்டார் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

The post Atto 3 எலக்ட்ரிக் காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு first appeared on .

]]>