electric bike https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:02:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கியர்பாக்ஸூடன் விற்பனைக்கு வந்தது ஏரா எலக்ட்ரிக் பைக்! https://www.91mobiles.com/tamil/matter-launches-aera-e-bike-officially-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=matter-launches-aera-e-bike-officially-in-india Thu, 02 Mar 2023 13:04:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6186 குஜராத்தைச் சேர்ந்த மேட்டர் (Matter) எனும் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. ஏரா (Aera) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இ-பைக் பற்றிய முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மேட்டர் (Matter). இது ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. […]

The post கியர்பாக்ஸூடன் விற்பனைக்கு வந்தது ஏரா எலக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>

Highlights

  • குஜராத்தைச் சேர்ந்த மேட்டர் (Matter) எனும் நிறுவனம் ஏரா (Aera) எனும் பெயரில் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்து இருக்கிறது.
  • இதன் உயர்நிலை ட்ரிம்மான 6000 பிளஸ், ஓர் முழு சார்ஜில் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கும்.

குஜராத்தைச் சேர்ந்த மேட்டர் (Matter) எனும் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. ஏரா (Aera) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இ-பைக் பற்றிய முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மேட்டர் (Matter). இது ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதுவே இந்திய இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக அதன் புதிய எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது.

 

4 வேரியண்ட்கள்

நான்கு விதமான ட்ரிம்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். 4000, 5000, 5000 பிளஸ் மற்றும் 6000 பிளஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரேஞ்ஜ் திறன் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மைலேஜ்

இதன் உயர்நிலை ட்ரிம்மான 6000 பிளஸ், ஓர் முழு சார்ஜில் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கும். மற்ற வேறியண்டுகளின் ரேஞ்ஜ் திறன் 125 கிமீ மட்டுமே ஆகும். ஆனால், இது இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்காது. மேட்டார் ஏரா இதேபோல், 4000 ட்ரிம்மின் விற்பனையும் இன்னும் தொடங்கப்படவில்லை. 5000 மற்றும் 5000 பிளஸ் ஆகியவற்றின் விற்பனை மட்டுமே இப்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் சில தினங்களில் 4000 மற்றும் 6000 பிளஸ் ஆகிய ட்ரிம்களுக்கும் விற்பனை பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

விலை

மேட்டர் நிறுவனம் 5000 தேர்விற்கு 1,43,999 ரூபாயை விலையாக நிர்ணயம் செய்து இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 5000 பிளஸ்-க்கு 1,53,999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

வடிவமைப்பு

மேட்டர் ஏரா ஓர் நேக்கட் ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். மேட்டார் ஏரா இந்திய சந்தையில் இந்த ரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இதற்கு பல்சர் இருசக்கர வாகன மாடலே முக்கிய சான்று. இதன் நேக்கட் வெர்ஷன்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகம். இத்தகைய வரவேற்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே மேட்டர் நிறுவனம் ஏரா-வை நேக்கட் ஸ்டைலில் உருவாக்கி இருக்கிறது. மேலும், இதனை தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் குறி வைத்தும் மேட்டர் உருவாக்கி இருக்கின்றது. அதாவது, ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இதை மேட்டர் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் தோற்றம் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவை டிவிஎஸ் ரைடர், பஜாஜ் பல்சர் மற்றும் ஹார்னெட் 2.0 உள்ளிட்ட மாடல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

 

தொழிற்நுட்பம்

மேட்டார் ஏரா எலெக்ட்ரிக் பைக்கில் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மேட்டர் ஏராவில் வழங்கப்பட்டிருக்கும் 7.0 அங்குல முழு டிஜிட்டல் எல்சிடி திரை மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. இது 4ஜி இணைப்பு வசதிக் கொண்டது. இத்துடன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இ பைக்கை லாக் மற்றும் அன்லாக் செய்ய உதவும். இதுமட்டுமின்றி, லைவ் டிராக்கிங் தகவல், வாகனத்தின் ஆரோக்கியம் மற்றும் ஜியோஃபென்சிங் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் இது வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேட்டர் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023-லேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்போதே விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

வசதிகள்

இதனை சாவியில்லாமல் பன்படுத்திக் கொள்ள முடியும். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் லிக்யூடு கூல்டு மோட்டார் ஆகும். இத்துடன், பெட்ரோல் டூ-வீலர்களில் வழங்கப்படுவதைப் போல வேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பு வசதிகளாக லிக்யூடு கூல்டு பேட்டரி பேக், 3பின் 5ஆம்ப் சார்ஜர், டபுள் கிரேடில் சேஸிஸ் மற்றும் இணைப்பு – இன்டலிஜென்ட் அம்சம் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பாதுகாப்பான ரைடிங் அனுபவத்திற்காக இ-பைக்கில் டிஸ்க் பிரேக்குகள் இரு வீல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஏரோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்திலானவை ஆகும். ஆகையால், மின்சார செலவு மிகவும் சிக்கனமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பைக்கின் அழகிய தோற்றத்திற்கு இந்த எல்இடி லைட்டுகளும் ஓர் காரணம் ஆகும். இத்துடன், பெட்ரோல் டூவீலர்களில் காணப்படுவதைப் போல எஞ்ஜின் குவார்ட், ஸ்பிளிட் டைப் இருக்கைகள், பில்லியன் ரைடருக்கான கிராப் ஹேண்டில் உள்ளிட்டவையும் ஏராவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றத்திலும் இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற அதிக வாய்ப்புள்ளது.

 

The post கியர்பாக்ஸூடன் விற்பனைக்கு வந்தது ஏரா எலக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>
தண்டர்ஃபேர்ட் தோற்றத்தில் குஜராத் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் பைக் https://www.91mobiles.com/tamil/aarya-commander-e-motorcycle-launch-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=aarya-commander-e-motorcycle-launch-details Tue, 21 Feb 2023 07:26:28 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5959 கமாண்டர் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நிறுவனம் அதன் கமேண்டர் (Aarya Commander) எனும் எலெக்ட்ரிக் பைக்கையே இந்திய சந்தைக்காக தயார்படுத்தி இருக்கின்றது. இதையே வெகு விரைவில் நாட்டில் அது விற்பனைக்குக் களமிறக்க திட்டம் போட்டு உள்ளது. அடுத்த மாதம் இதன் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வு அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அறிமுகமாக கமேண்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. […]

The post தண்டர்ஃபேர்ட் தோற்றத்தில் குஜராத் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் பைக் first appeared on .

]]>

Highlights

  • ஆர்யா ஆட்டோமொபைல்ஸ் (Aarya Automobiles) எனும் புதிய நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் வெளியிட இருக்கிறது.
  • இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது

கமாண்டர்

விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நிறுவனம் அதன் கமேண்டர் (Aarya Commander) எனும் எலெக்ட்ரிக் பைக்கையே இந்திய சந்தைக்காக தயார்படுத்தி இருக்கின்றது. இதையே வெகு விரைவில் நாட்டில் அது விற்பனைக்குக் களமிறக்க திட்டம் போட்டு உள்ளது. அடுத்த மாதம் இதன் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வு அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அறிமுகமாக கமேண்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

 

திறன் & மைலேஜ்

ஓர் முழு சார்ஜில் 125 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனுடன் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 4.4 kWh லித்தியம் அயன் (lithium-ion) பேட்டரி பேக் கமேண்டர் எலெக்ட்ரிக் பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன், 3 kW திறன் கொண்ட மின் மோட்டாரும் இ-பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 4.02 பிஎச்பி-யை வெளியேற்றும் திறன் கொண்டது. அப்போ ஃபாஸ்ட் சார்ஜிங் மையம்தான் பெஸ்ட் மேலும், மணிக்கு 90 கிமீ வேகத்தில் அது இயங்கும்.

சார்ஜிங்

எலெக்ட்ரிக் பைக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெகுலரான சார்ஜிங் கருவியை பயன்படுத்தும் போதே இந்த அளவு அதிக நேரம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களைப் பயன்படுத்தி சார்ஜ் செய்தால் பல மணி நேரங்களை மிச்சப்படுத்த முடியும். அதாவது, இரண்டு மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்தில் ஆர்யா கமேண்டரை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

 

முன் தொகை கட்டணம்

அடுத்த மாதம் இது விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு இப்போதே ஆர்யா நிறுவனம் புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. ரூ. 2,500 முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. டெலிவரி பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்கிவிடும் என கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்யா கமேண்டர் எலெக்ட்ரிக் பைக்கை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்திய சாலைகளில் பார்க்க முடியும். முதற்கட்டமாக விற்பனை பணிகள் நாட்டின் முக்கியமான முதல் நிலை நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட உள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான நகரங்களிலும் துவங்கும். இதற்கான முயற்சியில் ஏற்கனவே ஆர்யா நிறுவனம் களமிறங்கிவிட்டது.

இந்த நிறுவனம் குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதன் உற்பத்தி ஆலை சூரத்தில் அமைந்திருக்கின்றது. இந்த ஆலை மாதத்திற்கு 5 ஆயிரம் யூனிட்டுகள் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது.

அம்சங்கள்

ஆர்யா கமேண்டோ எலெக்ட்ரிக் பைக்கில் பல்வேறு சிறப்பு வசதிகளை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. டிஸ்க் பிரேக் கொடுத்திருக்காங்க இது தவிர யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக கமேண்டர் எலெக்ட்ரிக் பைக்கில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டும், டிஸ்க்குகளும் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர, சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக ஸ்போர்ட் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், டூயல் ஸ்பிரிங்குகள் கொண்ட ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

 

தோற்றம்

இந்திய இருசக்கர வாகன உலகின் பிரபல பைக்கான தண்டர்பேர்டை தழுவிய ஸ்டைலில் இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஆர்யா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. முகப்பு மற்றும் பக்கவாட்டு பகுதி முற்றிலுமாக தண்டர்பேர்டை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.

 

The post தண்டர்ஃபேர்ட் தோற்றத்தில் குஜராத் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் பைக் first appeared on .

]]>
250 கிமீ மைலேஜ், ரூ 3 லட்சத்தில் வருகிறதா ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக்? https://www.91mobiles.com/tamil/royal-enfield-electric-bike-price-range/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=royal-enfield-electric-bike-price-range Thu, 09 Feb 2023 07:56:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5690 இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் பலவும் எலெக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. இதில், ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனமும் ஒன்று. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டு (2024) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புதிய மாடலை உருவாக்கும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரம் […]

The post 250 கிமீ மைலேஜ், ரூ 3 லட்சத்தில் வருகிறதா ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக்? first appeared on .

]]>

Highlights

  • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டு (2024) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆண்டுக்கு 1.20 லட்சம் முதல் 1.80 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் பலவும் எலெக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. இதில், ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனமும் ஒன்று. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டு (2024) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புதிய மாடலை உருவாக்கும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.  இந்த ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் 250 கிமீ மைலேஜில் ரூ 3 லட்சத்தில் வரலாம் என நம்பப்படுகிறது.

 

புதிய குழு

இதற்காக புதிய குழு ஒன்றை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கிற்கு உயிர் கொடுக்கும் பணிகளை இங்கிலாந்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குழுவும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற நிறுவனங்களில் பணியாற்றி வரும் திறமைமிக்க நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பணியில் சேர்க்கும் வேலையையும் ராயல் என்பீல்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

 

ப்ளாட்பார்ம் ‘L’

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை டெக்னிக்கல் அதிகாரியான உமேஷ் கிருஷ்ணப்பா சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இணைந்திருப்பது இதற்கு ஒரு உதாரணம். அத்துடன் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு என பிரத்யேகமான பிளாட்பார்ம் ஒன்றை உருவாக்கும் பணிகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இந்த புதிய பிளாட்பார்ம் ‘L’ என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பிளாட்பார்ம்மை பயன்படுத்தி பல்வேறு பாடி ஸ்டைல்களில் எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்க முடியும்.

இலக்கு

இந்திய சந்தை மட்டுமல்லாது, சர்வதேச சந்தைகளையும் குறிவைத்துதான் ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கவுள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 1.20 லட்சம் முதல் 1.80 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டுவதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

மைலேஜ்

எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக், 2024ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், அதாவது ஜூலை-டிசம்பர் காலகட்டத்தில் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கில், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய வகையிலான பேட்டரி வழங்கப்படலாம்.

 

விலை

பொதுவாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள்தான் தொலைதூர பயணங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை பெருக்கினால், பெட்ரோல் பைக்குகளை போலவே தொலைதூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்ள கூடிய வகையில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் (Range) இருக்கலாம். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை (Price) 3 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் பிரீமியமான எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய ஒரு பிரீமியமான எலெக்ட்ரிக் பைக்கிற்கு 3 லட்ச ரூபாய் என்பது சிறப்பான விலை நிர்ணயமாக இருக்கலாம்.

குறிப்பு: படத்தில் இருப்பது மாதிரி படங்களே

The post 250 கிமீ மைலேஜ், ரூ 3 லட்சத்தில் வருகிறதா ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக்? first appeared on .

]]>
200 கிமீ மைலேஜ்! மணிக்கு 120 கிமீ வேகம்!! அதிரடி காட்டும் டெவோட்-ன் மின்சார பைக்! https://www.91mobiles.com/tamil/devot-motors-unveils-e-bike-with-200-km-range/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=devot-motors-unveils-e-bike-with-200-km-range Fri, 20 Jan 2023 11:14:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5245 2023 ஆட்டோ எக்ஸ்போவின் கடைசி தினமான நேற்றைய நாளில் ஜோத்பூரைச் சேர்ந்த டெவோட் மோட்டார்ஸ் அதன் சூப்பரான ஓர் பைக் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த இருசக்கர வாகனத்தில் ஓர் முழுமையான சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது உண்மையிலேயே மிக சூப்பரான ரேஞ்ஜ் திறன் ஆகும். இதுமட்டுமல்லாது இந்த வாகனம் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதும்கூட. இந்த இருசக்கர வாகனத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம் […]

The post 200 கிமீ மைலேஜ்! மணிக்கு 120 கிமீ வேகம்!! அதிரடி காட்டும் டெவோட்-ன் மின்சார பைக்! first appeared on .

]]>

Highlights

  • டெவோட் மோட்டார்ஸ்  தனது புதிய எலெக்ட்ரிக் பைக்கை ஆட்டோ எக்போவில்  காட்சிப்படுத்தியது.
  • இதில் ஓர் முழுமையான சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்ல முடியும்.

2023 ஆட்டோ எக்ஸ்போவின் கடைசி தினமான நேற்றைய நாளில் ஜோத்பூரைச் சேர்ந்த டெவோட் மோட்டார்ஸ் அதன் சூப்பரான ஓர் பைக் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த இருசக்கர வாகனத்தில் ஓர் முழுமையான சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது உண்மையிலேயே மிக சூப்பரான ரேஞ்ஜ் திறன் ஆகும்.

இதுமட்டுமல்லாது இந்த வாகனம் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதும்கூட. இந்த இருசக்கர வாகனத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம் வெகு விரைவில் இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. இந்நிறுவனத்தின் ஆர்&டி மையம் இங்கிலாந்தில் இருக்கிறது.

 

3 மணி நேரத்தில் முழுமையான சார்ஜ்

அதேவேளையில், இருசக்கர வாகனங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்தே கட்டமைக்கப்படுகின்றன. இதன் அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக டெவொட் மோட்டார்ஸ் 9.5 kW உயர் திறன் கொண்ட பேட்டரி பேக்கையே பயன்படுத்தி இருக்கின்றது. இதை வெறும் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்த இருசக்கர வாகனம் விற்பனைக்கு வரும்பட்சத்தில் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் யூகிக்கப்படுகின்றது.

உள்ளூர் தயாரிப்பாக உருவாக்க திட்டம்

நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தியை 70 முதல் 90 சதவீதம் வரை உள்ளூர் மயமாக்க இருக்கிறது. நிறுவனத்தின் இந்த யுக்தியே டெவோட்டின் மின்சார இருசக்கர வாகனத்தை விலை குறைவாக வழங்க இருக்கின்றது. பலவிதமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் இந்த பைக்கில் டெவோட் நிறுவனம் வழங்கி இருக்கிறது. குறிப்பாக, டிஎஃப்டி திரை, சாவியில்லாமல் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்யும் வசதி, திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், இரண்டு சார்ஜிங் பாயிண்டுகள் உள்ளிட்டவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

தீ விபத்து பேச்சுக்கே இடம் இருக்காது

எலெக்ட்ரிக் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரி பேக் அதிக பாதுகாப்பானது என நிறுவனம் தெரிவித்துள்ளது. லித்தியம் எல்எஃப்பி தர பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது தீ விபத்தை தவிர்க்கும் வசதிக் கொண்டது எனக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது எலெக்ட்ரிக் டூ-வீலர் பற்றிய சில தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

 

வெகு விரைவில் இருசக்கர வாகனம் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் இ-பைக்கை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. டெவோட் நிறுவனத்தின் இந்த மின்சார பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் தற்போது விற்பனையில் இருக்கும் ரிவோல்ட் நிறுவனத்தின் இ-பைக் மற்றும் டார்க் நிறுவனத்தின் மின்சார பைக் ஆகிய இரண்டிற்கும் கடுமையான போட்டியாளனாக இருக்கும்.

டார்க் நிறுவனம் க்ரடோஸ் எனும் மோட்டார்சைக்கிளையே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் க்ரடோஸ் ஆர் மற்றும் க்ரடோஸ் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. முழு டிஜிட்டல் திரை, 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய நேவிகேஷன் கன்ட்ரோல் ஜாய்ஸ்டிக் போன்ற எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் க்ரடோஸ் ஆர் வேரியண்டில் சற்று கூடுதல் அம்சங்களைக் நம்மால் காண முடியும்.

 

குறிப்பாக ரேஞ்ஜ் மற்றும் டாப் ஸ்பீடு விஷயத்தில் இதுவே பெஸ்ட்டானதாகக் காட்சியளிக்கின்றது. க்ரடோஸ் ஆர் வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இதன் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 180 கிமீ ஆகும். ஆனால், க்ரடோஸ் வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ மட்டுமே ஆகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீட்டருக்கும் குறைவான ரேஞ்ஜை பெற முடியும்.

 

இத்தகைய ஓர் எலெக்ட்ரிக் பைக்கிற்கே டஃப் கொடுக்கும் விதமாக டெவோட் அதன் மின்சார பைக்கை உருவாக்கி இருக்கின்றது. இந்த பைக்கின் வருகை மின்சார வாகனங்களுக்கு மட்டுமின்றி பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். குறிப்பாக, பட்ஜெட் விலை பைக் மாடல்களான ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா போன்ற கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு இதன் வருகையை போட்டியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

The post 200 கிமீ மைலேஜ்! மணிக்கு 120 கிமீ வேகம்!! அதிரடி காட்டும் டெவோட்-ன் மின்சார பைக்! first appeared on .

]]>
70 கிமீ டாப் ஸ்பீடு, 110 கிமீ மைலேஜ்! அசத்தும் இந்திய நிறுவனத்தின் இ-பைக்! https://www.91mobiles.com/tamil/evtric-rise-auto-expo-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=evtric-rise-auto-expo-2023 Tue, 17 Jan 2023 05:58:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5057 எவ்ட்ரிக் நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஆட்டோ எக்ஸ்போ 2023 மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த மின்சார பைக்கிற்கு அறிமுகமாக ரூ. 1.6 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சதில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.   எவ்ட்ரிக் ரைஸ் இதுவே இந்நிறுவனத்தின் முதல் அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக் மாடலாகும். புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் எவ்ட்ரிக் மோட்டார்ஸ், வெறும் […]

The post 70 கிமீ டாப் ஸ்பீடு, 110 கிமீ மைலேஜ்! அசத்தும் இந்திய நிறுவனத்தின் இ-பைக்! first appeared on .

]]>

Highlights

  • இந்திய நிறுவனமான எவ்ட்ரிக், ‘ரைஸ்’ எனும் புதிய மின்சார பைக்கை அறிமுகம் செய்திருக்கின்றது.
  • இதை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சதில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ வரை இருக்கும்.

எவ்ட்ரிக் நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஆட்டோ எக்ஸ்போ 2023 மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த மின்சார பைக்கிற்கு அறிமுகமாக ரூ. 1.6 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சதில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

 

எவ்ட்ரிக் ரைஸ்

இதுவே இந்நிறுவனத்தின் முதல் அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக் மாடலாகும். புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் எவ்ட்ரிக் மோட்டார்ஸ், வெறும் எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. தற்போது நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எவ்ட்ரிக் ஆக்ஸில், எவ்ட்ரிக் ரைடு மற்றும் எவ்ட்ரிக் மைட்டி ஆகிய மின்சார ஸ்கூட்டர்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் இவற்றின் வரிசையில் எவ்ட்ரிக் நிறுவனம் புதிதாக எவ்ட்ரிக் ரைஸ் என்ற பைக்கை விற்பனைக்குச் சேர்த்திருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 மூலம் இந்த இ-பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்தைத் தொடர்ந்து புக்கிங் பணிகளும் தொடங்கியிருக்கிறது. ரூ. 5 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

22 மாநிலங்களில்

நிறுவனத்திற்கு நாட்டின் 22 மாநிலங்களில் டச் பாயிண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வாயிலாகவே நிறுவனம் அதன் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதிலேயே புதிய எவ்ட்ரிக் ரைஸ் இ-பைக்கும் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இதுமட்டுமின்றி இரு இ-ஸ்கூட்டர்களையும் ஆட்டோ எக்ஸ்போவில் எவ்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் மேட் இன் இந்தியா தயாரிப்பு ஆகும். ஸ்போர்ட்டி நிறம் மற்றும் சிறப்பம்சங்களில் இந்த எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லேம்புகள், டிஆர்எல்களுடனும், ரியர் பகுதியில் பிளிங்கர்களும் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி & மைலேஜ்

இத்துடன், 2000 வாட் பிஎல்டிசி மோட்டார் மற்றும் 70 V / 40 Ah பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வளவு நேரம் செலிவிட்டு அதை சார்ஜ் செய்யும்பட்சத்திலேயே 110 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ வேகம் ஆகும்.

எலெக்ட்ரிக் பைக்கில் 10 ஆம்ப் மைக்ரோ சார்ஜர் ஆட்டோ கட் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரியை தனியாக கழட்டி செல்ல முடியும். ஆகையால், தேவைப்படும் இடத்திற்கு எடுத்துச் சென்று அதை சார்ஜ் செய்து கொள்ளவும் முடியும்.

இத்தகைய சூப்பரான வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் பைக்கை எவ்ட்ரிக் நிறுவனம் தற்போது இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதை பராமரிப்பது மிக சுலபம் என்றும், பெரியளவில் பராமரிப்பு செலவு ஏற்படாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் கவரும் விதமாகவே இந்த பைக்கை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

The post 70 கிமீ டாப் ஸ்பீடு, 110 கிமீ மைலேஜ்! அசத்தும் இந்திய நிறுவனத்தின் இ-பைக்! first appeared on .

]]>
எம்7 என்ற பல பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது மோட்டோவோல்ட் https://www.91mobiles.com/tamil/motovolt-debuts-m7-multi-purpose-electric-scooter-in-auto-expo-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motovolt-debuts-m7-multi-purpose-electric-scooter-in-auto-expo-2023 Mon, 16 Jan 2023 12:21:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5033 மோட்டோவால்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது எம்7 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நொய்டாவில் நடந்துவரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள் மோட்டோவால்ட் எம்7 நொய்டாவில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பல எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகியுள்ளன. அந்த வரிசையில் மோட்டோவால்ட் நிறுவனம் தனது எம்7 என்ற மல்டி பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் […]

The post எம்7 என்ற பல பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது மோட்டோவோல்ட் first appeared on .

]]>

Highlights

  • மோட்டோவோல்ட் நிறுவனம் எம்7 என்ற பல பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது.
  • இது டிவிஎஸ் XL பைக்கின் இடத்தை பிடிக்கும் என நம்பப்படுகிறது.

மோட்டோவால்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது எம்7 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நொய்டாவில் நடந்துவரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

மோட்டோவால்ட் எம்7

நொய்டாவில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பல எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகியுள்ளன. அந்த வரிசையில் மோட்டோவால்ட் நிறுவனம் தனது எம்7 என்ற மல்டி பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

பிரத்யேக வடிவமைப்பு

மோட்டோடவால்ட் நிறுவனம் இந்த எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒவ்வொரு ரைடரின் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல கஸ்டமைஸ்டு செய்து கொடுக்கும்படி இந்த ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் அதிகமான பொருட்களை எடுத்து செல்லும் வகையில் அதிக ஸ்டிரென்ட்த் மற்றும் லோடு பியரிங் கேப்பாசிட்டியுடன் இதை உருவாக்கியுள்ளது.

வசதிகள்

இந்த எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பின்பக்க சீட் சுலபமாக அகற்றிக்கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில்பெட்டி அல்லது வேறு ஏதேனும் பொருட்களை இணைத்துக்கொள்ளமுடியும். இந்த ஸ்கூட்டரில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பேட்டரியை எடுத்து செல்லும் வசதி இருக்கிறது. இந்த எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோட்டோடவால்ட் ஆப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு ஒரு தடையில்லா அனுபவத்தை வழங்கும். இந்த மோட்டோ வால்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையிலும் வாங்க முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் மார்கெட்டில் உள்ள இஎம்ஐயை விட குறைவான செலவில் ஸ்கூட்டரை சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

பேட்டரி

மற்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு  வாரண்டி வழங்கும் நிலையில், இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முதன் முறையாக காலவரையற்ற பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. இந்த மோட்டோவால்ட் எம்7 ஸ்கூட்டரின் பேட்டரி AIS152 2 ம் கட்ட சான்று பெற்றுள்ளது. இந்த பேட்டரி ஸ்வாப்பபிள் பேட்டரியாக இருப்பதால் இதை பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும்.

வளர்ச்சி

இந்நிறுவனம் சமீபத்தில் துபாய் நிறுவனத்தின் மூலம் ரூ16 கோடியை முதலீடாக பெற்றுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் இந்நிறுவனம் தற்போது தனது சேவையை வழங்கி வரும் 100க்கும் அதிகமான நகரங்களின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

The post எம்7 என்ற பல பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது மோட்டோவோல்ட் first appeared on .

]]>
முழுசார்ஜ்க்கு 130கிமீ, டாப் ஸ்பீடு 75கிமி! அசத்தும் தெலுங்கானா நிறுவனம்! https://www.91mobiles.com/tamil/pure-ev-ecodryft-electric-motorcycle/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=pure-ev-ecodryft-electric-motorcycle Fri, 16 Dec 2022 06:22:57 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4348 முழுசார்ஜ்க்கு 135கிமீ மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் பைக்கை வெளியிட்டது ப்யூர் எனர்ஜி. பார்ப்பதற்கு பஜாஜ் பிளாட்டினா போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக் பெட்ரோல் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் போலிருக்கே என கூறும் அளவிற்கு மிக சிறப்பான வசதிகளைக் கொண்ட இ-பைக்கை ப்யூர் இவி நிறுவனம் இந்தியாவில் நேற்று வெளியீடு செய்தது. இந்த வாகனம் பற்றிய முக்கிய தகவல்கள் அனைத்தும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார […]

The post முழுசார்ஜ்க்கு 130கிமீ, டாப் ஸ்பீடு 75கிமி! அசத்தும் தெலுங்கானா நிறுவனம்! first appeared on .

]]>

முழுசார்ஜ்க்கு 135கிமீ மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் பைக்கை வெளியிட்டது ப்யூர் எனர்ஜி.

பார்ப்பதற்கு பஜாஜ் பிளாட்டினா போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக் பெட்ரோல் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் போலிருக்கே என கூறும் அளவிற்கு மிக சிறப்பான வசதிகளைக் கொண்ட இ-பைக்கை ப்யூர் இவி நிறுவனம் இந்தியாவில் நேற்று வெளியீடு செய்தது. இந்த வாகனம் பற்றிய முக்கிய தகவல்கள் அனைத்தும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ப்யூர் இவி. தனது புதிய எலெக்ட்ரிக் பைக்கான ‘ஈகோ ட்ரிஃப்ட்’ (Eco dryft)-ஐ இந்தியாவில் நேற்று (டிசம்பர் 15) வெளியிட்டது.

மைலேஜ்

ப்யூர் ஈகோ ட்ரிஃப்ட் அறிமுகத்தை முன்னிட்டு மின்சார வாகனம் பற்றிய முக்கிய தகவல்களை நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ப்யூர் இவி ஈகோ ட்ரிஃப்ட் ஓர் முழு சார்ஜில் 130 கிமீ தூரம் பயணிக்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜை வழங்குவதற்காக 3.0 kWh பேட்டரி பேக் எலெக்ட்ரிக் பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி பேக் ஏஐஎஸ் 156 சான்று பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தண்ணீர், அதிக வெப்பத்தின் காரணமாக பாதிக்காத வண்ணம் பேட்டரி பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தரமான வசதிக் கொண்ட இ-பைக்கையே ப்யூர் இவி இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது.

வேகம்

இதனை ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ப்யூர் ஈகோ ட்ரிஃப்ட் ஈகோ ட்ரிஃப்ட் எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிமீ என கூறப்படுகின்றது. ஆனால், இதில் பயன்படுத்தப்பட இருக்கும் மின்சார மோட்டார் பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடிவமைப்பு

ப்யூர் இவி நிறுவனம் இந்த பைக்கை கம்யூட்டர் ரக வாகனத்தைப் போல் வடிவமைத்துள்ளது. உதாரணமாக பஜாஜ் நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன மாடலான பிளாட்டினாவின் ஸ்டைலை ஒத்தவாறு அது கட்டமைக்கப்பட்டு உள்ளது. ஆங்குலர் டைப் ஹெட்லேம்ப், ஐந்து ஸ்போக் அலாய் வீல்கள், ஒற்றை துண்டு அமைப்பிலான இருக்கை என முழுக்க முழுக்க தினசரி பயன்பாட்டு வாகனமாக ஈகோ ட்ரிஃப்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இதனை ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

விலை

கருப்பு, கிரே, நீலம் மற்றும் சிகப்பு ஆகிய நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது. தினசரி பயன்பாட்டை மையப்படுத்தி வந்த வாகனம் விற்பனைக்கு வர இருப்பதால் இதை நிறுவனம் பட்ஜெட் விலையில் வெளியிட்டு இருக்கிறது. அந்தவகையில், ரூ. 1.20 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையில் ஈகோ ட்ரிஃப்ட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விற்பனையில் இந்த பைக் சாதனைப் படைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ப்யூர் இவி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இ ட்ரிஸ்ட் எனும் புதுமுக இ-பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே மற்றுமொரு புதிய வாகனத்தைக் கொண்டு இந்தியர்களைக் கவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இ ட்ரிஸ்ட் எலெக்ட்ரிக் பைக்கை நிறுவனம் ரூ. 1.54 லட்சத்திற்கு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 3.5 KWH பேட்டரி பேக்கை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். அதேநேரத்தில், இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளுக்கும் உகந்த வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நவீன கால சிறப்பம்சங்கள் பலவும் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

The post முழுசார்ஜ்க்கு 130கிமீ, டாப் ஸ்பீடு 75கிமி! அசத்தும் தெலுங்கானா நிறுவனம்! first appeared on .

]]>
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்! https://www.91mobiles.com/tamil/tork-motors-exchange-offer/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tork-motors-exchange-offer Wed, 07 Dec 2022 08:27:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4142 இந்திய எலக்ட்ரிக் வாகன தயரிப்பு நிறுவனமான ‘டார்க் மோட்டார்ஸ்’ எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபரை அறிவித்திருக்கின்றது. இந்த திட்டத்தில் என்ன மாதிரியான வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்யலாம்?, எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை எப்படி பெறுவது என்கிற தகவலை பார்க்கலாம். ஆண்டு முடிவில் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், டார்க் மோட்டார்ஸ் எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் க்ரடோஸ் மற்றும் க்ரடோஸ் ஆர் எனும் இரு விதமான எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் விற்பனை […]

The post எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>

இந்திய எலக்ட்ரிக் வாகன தயரிப்பு நிறுவனமான ‘டார்க் மோட்டார்ஸ்’ எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபரை அறிவித்திருக்கின்றது. இந்த திட்டத்தில் என்ன மாதிரியான வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்யலாம்?, எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை எப்படி பெறுவது என்கிற தகவலை பார்க்கலாம்.

ஆண்டு முடிவில் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், டார்க் மோட்டார்ஸ் எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் க்ரடோஸ் மற்றும் க்ரடோஸ் ஆர் எனும் இரு விதமான எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

எக்ஸ்சேஞ்ஜ்

இந்த் பைக்குகளை எக்ஸ்சேஞ்ஜ் மூலம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை அந்-நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ளளாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோலால் இயங்கக் கூடிய ஸ்கூட்டர் மற்றும் பைக்.. அது எந்த பிராண்டின் பழைய வாகனமாக இருந்தாலும் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்காக நிறுவனம் கிரெட்ஆர் எனும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. யூஸ்டு டூ-வீலர்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே இந்த க்ரெட்ஆர். இது பழைய இருசக்கர வாகனத்தை வாங்குதல் மற்றும் விற்றல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

எப்படி செய்வது?

டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கிரெட்ஆர்-இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தை விசிட் செய்ய வேண்டும். இங்கு பழைய இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ஜ் செய்வதற்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கிரெட்ஆர் நிறுவனத்திற்கு 120 செக் பாயிண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கு நம்முடைய பழைய வாகனத்தை சமர்பித்தால் அவர்கள் அந்த வாகனத்திற்கான மதிப்பை ஆய்வை செய்து வழங்குவர். இவர்கள் கொடுக்கக் கூடிய மதிப்புகளின் அடிப்படையிலேயே புதிய டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கிற்கு தள்ளுபடி வழங்கப்படும். மீதமுள்ள தொகையை வாடிக்கையாளர்கள் வங்கி கடன் அல்லது கேஷ் என எந்த வழிகளில் வேண்டுமானாலும் கொடுத்து எலெக்ட்ரிக் பைக்கை வாங்கிக் கொள்ளலாம்.

எல்லோருக்கும் இல்லை

ஆனால், இந்த சிறப்பு ஆஃபரை டார்க் மோட்டார்ஸ் எல்லோருக்கும் வழங்கவில்லை. அதாவது குறிப்பிட்ட இரு நகரங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. புனே மற்றும் பெங்களூரு நகர வாசிகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டார்க் மோட்டார்ஸ் இந்த எலெக்ட்ரிக் பைக்கை நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

விலை

க்ரடோஸ் ஆர் வேரியண்டைக் காட்டிலும் க்ரடோஸ் சற்றுக் குறைந்த திறன் கொண்டதாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 1.22 லட்சம் ஆகும். இது புனே எக்ஸ்-ஷோரூம் விலை. இதைவிட 15 ஆயிரம் ரூபா அதிக விலைக் கொண்டதாக க்ரடோஸ் ஆர் இருக்கின்றது.

திறன் & வசதிகள்

டார்க் க்ரடோஸ் வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச் திறன் வெளிப்பாடு 7.5kW. கிளட்ச் இல்லா சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரி பேக் இந்த இ-பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர முழு டிஜிட்டல் திரை, 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய நேவிகேஷன் கன்ட்ரோல் ஜாய்ஸ்டிக் போன்ற எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதைக் காட்டிலும் அதிக வசதிக் கொண்டதாக க்ரடோஸ் ஆர் இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச திறன் வெளிப்பாடு 9.0 கிலோவாட். இதன் ரேஞ்ஜ் திறன் 180 கிமீ ஆகும். இதிலும், முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட திரை, நான்கு விதமான ரைடிங் மோட்கள், டிஸ்க் பிரேக், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், செல்போன் இணைப்பு, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தவிர திருட்டை தவிர்க்கும் வசதி, ஜியோ ஃபென்சிங், ஸ்டோரேஜ் பாக்ஸ் போன்ற சிறப்பு வசதிகளும் இந்த க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

The post எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>
100கிமீ வேகம், 200கிமீ மைலேஜ், ரூ 99.999 விலை.. அசத்தும் பெங்களூர் நிறுவனம்! https://www.91mobiles.com/tamil/oben-rorr-got-17k-booking-delivery-starts-in-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oben-rorr-got-17k-booking-delivery-starts-in-2023 Fri, 02 Dec 2022 07:13:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4047 பெங்களூருவைத் தலைமையாகக் கொண்டு துவங்கப்பட்ட ஓபன் எலெக்ட்ரிக் (Oben Electric)நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கான ரோர் (Rorr) இதுவரை 17 ஆயிரம் பேர் முன்பதிவுகளைப் பெற்றுள்ளது என்றும், இந்த பைக்கின் டெலிவரி 2023ம் ஆண்டு முதல் காலாண்டில் துவங்கும் என்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார். இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது ரோர் என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் பைக் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவிற்கு நல்ல […]

The post 100கிமீ வேகம், 200கிமீ மைலேஜ், ரூ 99.999 விலை.. அசத்தும் பெங்களூர் நிறுவனம்! first appeared on .

]]>

பெங்களூருவைத் தலைமையாகக் கொண்டு துவங்கப்பட்ட ஓபன் எலெக்ட்ரிக் (Oben Electric)நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கான ரோர் (Rorr) இதுவரை 17 ஆயிரம் பேர் முன்பதிவுகளைப் பெற்றுள்ளது என்றும், இந்த பைக்கின் டெலிவரி 2023ம் ஆண்டு முதல் காலாண்டில் துவங்கும் என்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.

இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது ரோர் என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் பைக் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவிற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் 2022 தீபாவளிக்கே இந்த பைக் அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பைக்கின் தயாரிப்பில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த மாதம் (டிசம்பர்) இதன் உற்பத்தி துவங்கவுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ மதுமிதா அகர்வால் ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில், “தற்போது வரை 17 ஆயிரம் புக்கிங்கள் எங்கள் எலெக்ட்ரிக் பைக்கிற்கு குவிந்துள்ளது. முதற்கட்டமாகப் பெங்களூரு, சென்னை, ஐதராபாத், புனே, மும்பை, டில்லி, சூரத், ஆமதாபாத், ஜெய்பூர் ஆகிய பகுதிகளில் மட்டும் விற்பனையைத் துவக்க முடிவு செய்துள்ளோம். அடுத்து படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக இந்தியா முழுவதும் எங்கள் பைக்கின் விற்பனை நடைபெறும்.” எனக் கூறினார்.

ஓபன் (Oben) நிறுவனம் இந்தியா முழுவதும் டீலர் ஷிப் முறையில் தனது வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஆஃப் லைன் விற்பனை தான் மக்களுக்கு நம்பிக்கையைத் தரும் என இந்நிறுவனம் நம்புவதால் புதிய நேரடி விற்பனையைப் பெரிய அளவில் இந்நிறுவனம் விரும்பவில்லை. இந்நிறுவனம் தற்போது ரூ32.67 கோடி பணத்தை பண்டிங்காக பெற்றுள்ளது. ஏற்கனவே புக்கிங்காக குவிந்துள்ள 17ஆயிரம் பைக்குகளை தயார் செய்யவும், டிஸ்டிப்யூஷன் நெட்வோர்க்கை விரிவுபடுத்தவும் இதைப் பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஓபன் (Oben) நிறுவனம் தனது ஆலையைப் பெங்களூரு அருகே அமைத்துள்ளது. ஆண்டிற்கு 3 லட்சம் பைக்குகளை தயார் செய்யும் கொள்ளளவு கொண்டதாக இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் இங்கு வெறும் 50 ஆயிரம் பைக்குகளை மட்டுமே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் 50 மில்லியன் டாலர் பணம் பண்டிங் கிடைத்தவுடன் இதை 1 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓபன் (Oben) ரோர் எலெக்ட்ரிக் பைக் மார்கெட்டில் உள்ள 150 சிசி பைக்குகளுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.

இந்த ஓபன் (Oben) ரோர் எலெக்ட்ரிக் பைக்கில் 4.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 200 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த பைக்கில் பிஎம்எஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடியில் பிக்கப் செய்துவிடும். இது அதிகபட்சமாக 100 கி.மீ வேகம் வரை செல்லலும், இந்த பைக்கில் எக்கோ, சிட்டி மற்றும் ஹாவக் என்ற 3 விதமான டிரைவிங் மோட்கள் இருக்கிறது.

இந்த பைக்கில் இருக்கும் முக்கியமான விஷயமே இந்த பைக் சார்ஜ் ஏறுவதற்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதற்காக அதிக பவர் கொண்ட கேபிள்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 15 ஆம்ப் சாக்கெட்கள் மூலம் சார்ஜ் ஏற்றப்படுகிறது. இந்த பைக்கின் விலையாக ரூ99,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போக மாநில மானியத்தை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் விலை வேறுபடும். இந்த பைக்கை தற்போது 17 ஆயிரம் பேர் புக் செய்துள்ள நிலையில் விரைவில் இந்த பைக் வெளியானதும் இந்த நிறுவனம் அடுத்தடுத்து சில பைக்குகளை களத்தில் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 100கிமீ வேகம், 200கிமீ மைலேஜ், ரூ 99.999 விலை.. அசத்தும் பெங்களூர் நிறுவனம்! first appeared on .

]]>
வெளியானது 307 கிமீ மைலேஜ் தரும் அல்ட்ராவைலட் F77 https://www.91mobiles.com/tamil/most-awaited-ultraviolette-f77-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=most-awaited-ultraviolette-f77-launched Fri, 25 Nov 2022 06:33:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3896 அல்ட்ராவைலட் நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஓர் சிறப்பு பதிப்புடன் சேர்த்து மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் கிடைக்கும். பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனமான அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எஃப் 77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கிறது. இது நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாகும். இந்த […]

The post வெளியானது 307 கிமீ மைலேஜ் தரும் அல்ட்ராவைலட் F77 first appeared on .

]]>

அல்ட்ராவைலட் நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஓர் சிறப்பு பதிப்புடன் சேர்த்து மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் கிடைக்கும்.

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனமான அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எஃப் 77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கிறது. இது நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாகும். இந்த மின்சார பைக்கிற்கு ரூ. 3.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அல்ட்ராவைலட் இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். ஆம், அல்ட்ராவைலட் ஆட்டோமேட்டிவ் தனது எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கை இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. எஃப் 77 மற்றும் எஃப்77 ரெகோன் ஆகிய இரு தேர்வுகளிலேயே இந்த மின்சார பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் எஃப்77 ரெகோன் உயர்நிலை தேர்வாகும். இதில் அதிக ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்கை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இதனால் இதன் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ரூ. 4.55 லட்சம் விலையே எஃப்77 ரெகோனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மூன்றாவதாக லிமிடெட் எடிசனிலும் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை நிறுவனம் வெறும் 77 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இவை ஸ்பெஷல் எடிசன்கள் என்பதால் 001 தொடங்கி 077 வரையிலான எண்களைக் கொண்டு விற்பனைக்கு வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்த லிமிடெட் எடிசனை ரூ. 5.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயித்துள்ளது. தெளிவாகக் கூற வேண்டும் என்றால் சர்வதேச தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த மின்சார பைக்கை இந்திய நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி பலவிதமான நிறங்களிலும் இதனை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஏர் ஸ்ட்ரைக், ஷேடோவ் மற்றும் லேசர் உள்ளிட்ட நிறங்களிலேயே எஃப்77 வழங்கப்பட இருக்கின்றது.

சிறப்பம்சங்கள்

இந்த தேர்வில் 27 கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது 36.2 எச்பி பவருக்கு இணையான திறன் ஆகும். இது 85 என்எம் டார்க்கை வெளியேற்றும். டாப் ஸ்பீடு மணிக்கு 142 கிமீ ஆகும். முழு சார்ஜில் 206 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இதற்காக 7.1 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், மூன்று லெவல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், மூன்று விதமான ரைடிங்கள் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. கிளைட், காம்பேட் மற்றும் பேலிஸ்டிக் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்களே எஃப்77 தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றது.

அல்ட்ராவைலட் எஃப் 77 ரெகோன்

மேலே பார்த்த எஃப்77 தேர்வுகளில் வழங்கப்பட்டிருக்கும் பெரும்பாலான அம்சங்கள் இந்த ரெகோன் எஃப்77லும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பேட்டரி மற்றும் மின் மோட்டார் விஷயத்தில் இது மாறுபட்டதாக இருக்கின்றது. 38.9 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே எஃப்77 ரெகோனில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது 95 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 147 கிமீ ஆகும். இதில், 10.3 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 307 கிமீ தூரம் பயணிக்கலாம்.

ஸ்பெஷல் எடிசன்

மேலே பார்த்த இரு தேர்வுகளைக் காட்டிலும் இது பலமடங்கு அதிக அம்சங்கள் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இந்த தேர்வில் சற்று அதிக பவரை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 40.2 எச்பியையும், 100 என்எம் டார்க்கையும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் வெளியேற்றும். பேட்டரி பேக் விஷயத்தில் இந்த சிறப்பு பதிப்பும், எஃப்77 ரெகோனும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது. இத்தகைய சூப்பரான வசதிகளுடனேயே அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அதன் எஃப் 77 எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அல்ட்ராவைலட் நிறுவனம் இந்த மின்சார பைக்கிற்கு ஏற்கனவே புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கிவிட்டது. அக்டோபர் 23 இல் இருந்து பணிகள் நடைபெற்று வருகின்றது. ரூ. 10 ஆயிரம் முன் தொகையிலேயே புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. சிறப்பு வசதிகளாக எலெக்ட்ரிக் பைக்கில் டிஸ்க் பிரேக்குகள், ஸ்நேஸி அலாய் வீல்கள், ஸ்பிளிட் டைப் எல்இடி லைட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

The post வெளியானது 307 கிமீ மைலேஜ் தரும் அல்ட்ராவைலட் F77 first appeared on .

]]>