galaxy M04 https://www.91mobiles.com/tamil Thu, 28 Sep 2023 07:44:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங் அதிரடி! ரூ.6499க்கு புது Samsung மொபைல்! 4 மொபைல்களின் விலை குறைப்பு! https://www.91mobiles.com/tamil/samsung-special-price-offer-on-galaxy-m04-f04-m13-and-f13/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-special-price-offer-on-galaxy-m04-f04-m13-and-f13 Thu, 28 Sep 2023 07:37:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=11001 சாம்சங் தனது ரசிகர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் ஒரே நேரத்தில் 4 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை கடுமையாக குறைத்துள்ளது.  ‘Samsung Special Price’ என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் தனது Galaxy M04, Galaxy F04, Galaxy M13 மற்றும் Galaxy F13 ஆகியவற்றின் விலைகளைக் குறைத்துள்ளது. மேலும் இந்த மொபைல்கள் இன்று முதலே இந்த சலுகை விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. சாம்சங் ஸ்மார்ட்போன் விலை சலுகை மொபைல் புதிய விலை வெளியீட்டு விலை […]

The post சாம்சங் அதிரடி! ரூ.6499க்கு புது Samsung மொபைல்! 4 மொபைல்களின் விலை குறைப்பு! first appeared on .

]]>

சாம்சங் தனது ரசிகர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் ஒரே நேரத்தில் 4 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை கடுமையாக குறைத்துள்ளது.  ‘Samsung Special Price’ என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் தனது Galaxy M04, Galaxy F04, Galaxy M13 மற்றும் Galaxy F13 ஆகியவற்றின் விலைகளைக் குறைத்துள்ளது. மேலும் இந்த மொபைல்கள் இன்று முதலே இந்த சலுகை விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

சாம்சங் ஸ்மார்ட்போன் விலை சலுகை

மொபைல் புதிய விலை வெளியீட்டு விலை
Galaxy M04 ₹6,499 ₹8,499
Galaxy F04 ₹6,499 ₹7,499
Galaxy M13 4GB + 64GB ₹9,199 ₹11,999
Galaxy M13 6GB + 128GB ₹10,199 ₹13,999
Galaxy F13 4GB + 64GB ₹9,199 ₹11,999
Galaxy F13 4GB + 128GB ₹10,199 ₹12,999

Samsung Galaxy M04

Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனை ரூ.6,499 ஆரம்ப விலையில் வாங்கலாம். இந்த மொபைலில் 8GB ரேம் பிளஸ் அம்சம் உள்ளது, இது போனுக்கு 12GB ரேம் ஆற்றலை வழங்குகிறது. இது 128GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது, அதை 1 டிபி வரை விரிவாக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio P35 செயலியில் இயங்குகிறது. இந்த போனில் 13MP பின்புறம் மற்றும் 5எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. மேலும் இது 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

Samsung Galaxy F04

Samsung Galaxy F04 பற்றி பேசுகையில், இந்த மொபைல் ஃபோனும் ரூ.6,499 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மொபைலின் சிறப்பம்சங்களும் Galaxy M04 போன்றே உள்ளது. Galaxy F04 ஆனது MediaTek Helio P35 சிப்செட் உடன் ரேம் பிளஸ் அம்சத்தையும் கொண்டுள்ளது, இது அதன் செயலாக்க சக்தியை அதிகரிக்கிறது. பவர் பேக்கப்பிற்காக, இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2 வருட OS மேம்படுத்தலுடன் வருகிறது.

Samsung Galaxy M13

இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் திட்டத்தின் கீழ் ரூ.9,199 ஆரம்ப விலையில் வாங்க முடியும். இதில் கொடுக்கப்பட்டுள்ள 6,000mAh பேட்டரி போனின் பெரிய USP ஆகும். இந்த மொபைல் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராவை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FullHD+ டிஸ்ப்ளே உள்ளது. இந்த சாதனம் Exynos 850 சிப்செட்டில் இயங்குகிறது. ரேம் பிளஸ் தொழில்நுட்பம் அதன் 14 ஜிபி ரேம் ஆற்றலை வழங்குகிறது.

Samsung Galaxy F13

Galaxy F13 ஸ்மார்ட்போன் சாம்சங்கின் Exynos 850 சிப்செட்டிலும் இயங்குகிறது. இந்த மொபைலில் ரேம் பிளஸ் அம்சமும் உள்ளது. இதன் காரணமாக கூடுதல் 8 ஜிபி ரேமை பிசிகல் ரேமில் சேர்க்க முடியும். பவர் பேக்கப்பிற்காக, இது 18W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

சலுகையின் பலனை எங்கே பெறலாம்?

இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் திட்டம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும். Galaxy M  சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆஃபர் அமேசானில் கிடைக்கிறது. அதே நேரத்தில் Galaxy F சீரிஸ் சலுகையை பிளிப்கார்ட்டில் பெறலாம். சலுகைகளின் கடைசி தேதியை சாம்சங் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் இந்த ஷாப்பிங் தளங்களின் ‘சிறப்பு விற்பனை’ வரை இந்த சலுகை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சாம்சங் அதிரடி! ரூ.6499க்கு புது Samsung மொபைல்! 4 மொபைல்களின் விலை குறைப்பு! first appeared on .

]]>
ரூ8,499க்கு 8ஜிபி ரேம் போன்! சாம்சங்ல அதிரடி! https://www.91mobiles.com/tamil/samsung-new-8gb-ram-phone-galaxy-m04-launched-in-india-for-just-rs-8499/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-new-8gb-ram-phone-galaxy-m04-launched-in-india-for-just-rs-8499 Wed, 14 Dec 2022 08:35:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4291 8ஜிபி ரேம் இருக்கும் ஒரு ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.8,499 தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வெண்டும். ஏனென்றால் வெறும் ரூ.8,499 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் 8GB RAM-ஐ கொண்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி 5000mAh பேட்டரி, வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் உடனான 6.5 அங்குல டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா செட்டப், பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் என.. விலையை மீறிய பல அம்சங்களும் […]

The post ரூ8,499க்கு 8ஜிபி ரேம் போன்! சாம்சங்ல அதிரடி! first appeared on .

]]>

8ஜிபி ரேம் இருக்கும் ஒரு ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.8,499 தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வெண்டும். ஏனென்றால் வெறும் ரூ.8,499 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் 8GB RAM-ஐ கொண்டு இருக்கிறது.

அதுமட்டுமின்றி 5000mAh பேட்டரி, வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் உடனான 6.5 அங்குல டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா செட்டப், பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் என.. விலையை மீறிய பல அம்சங்களும் இருக்கிறது! சாம்சங் நிறுவனத்தின் எம் சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போன் பட்ஜெட் மொபைல் பிரிவை ஒரு கலக்கு கலக்க போகிறது இதன் மூலம் உறுதியாகிறது.

அம்சங்களை பொறுத்தவரை, Samsung Galaxy M04 ஆனது HD+ ரெசல்யூஷன் உடனான 6.5 அங்குல IPS LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 (Helio P35) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4GB ரேம் மற்றும் 4GB வரையிலான ரேம் பிளஸ் (விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டு இருக்கிறது. இதுதவிர சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள எஸ்டி கார்டு ஸ்லாட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வழியாக 1டிபி வரை சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

பேட்டரி & ஓஎஸ் அப்டேட்

ஆண்ட் ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) அடிப்படையிலான OneUI 4.1 உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வரையிலான அப்டேட் கிடைக்கும் என்று சாம்சங் உறுதி அளித்துள்ளது. கேலக்ஸி M04 ஆனது வெறும் 10W சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கிறது என்றாலும் கூட, இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது ஒரு நாள் முழுவதுமான பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் என்பதில் சந்தகமே வேண்டாம்.

கேமராக்கள்

சாம்சங் கேலக்ஸி எம்04 மொபைலில் 13 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என டூயல் ரியர் கேமராக்கள் உள்ளன. இதனுடன் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம், 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது.

எப்போ வருது?

சாம்சங் நிறுவனத்தின் Galaxy M04 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த விற்பனை பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் வழியாக நடக்கும். விலையைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 64GB ஆப்ஷன் ஆனது ரூ.8,499 க்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன், சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவும் கிடைக்கும்!

புது 5ஜி போன்!

கேலக்ஸி எம்04 மாடலை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ14 (Galaxy A14) என்கிற புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், டைமன்சிட்டி 700 சிப்செட், 5000mA பேட்டரி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post ரூ8,499க்கு 8ஜிபி ரேம் போன்! சாம்சங்ல அதிரடி! first appeared on .

]]>
டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி எம்04 https://www.91mobiles.com/tamil/best-samsung-phone-under-rs-9000-in-india-check-details-of-galaxy-m04/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-samsung-phone-under-rs-9000-in-india-check-details-of-galaxy-m04 Wed, 07 Dec 2022 11:33:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4153 டிசம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் ரூ.9,000 விலைப்பிரிவில் கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் படியான டிசைன் மற்றும் அம்சங்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது! அது எந்த போன்? அதன் விலை என்ன? எந்த பிராண்ட்? பார்க்கலாம் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கேலக்ஸி எம்04 (Galaxy M04) வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியன்று இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே இதை அமேசான் […]

The post டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி எம்04 first appeared on .

]]>

டிசம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் ரூ.9,000 விலைப்பிரிவில் கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் படியான டிசைன் மற்றும் அம்சங்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது! அது எந்த போன்? அதன் விலை என்ன? எந்த பிராண்ட்? பார்க்கலாம்

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கேலக்ஸி எம்04 (Galaxy M04) வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியன்று இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே இதை அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வாங்கவும் முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனை மேலோட்டாமாக பார்க்கும் எவருமே, இது ரூ.9000 விலைப்பிரிவில் வருகிறது என்றால் நம்ப மறுப்பார்கள். ஏனென்றால், கேலக்ஸி 04 ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த டிசைனுமே கொஞ்சம் பிரீமியம் லுக்கில் உள்ளது.

வடிவமைப்பு

அதாவது இது சற்றே விலை அதிகமான ஒரு ஸ்மார்ட்போனை போல தெரிகிறது! குறிப்பாக இதன் டூயல் ரியர் கேமரா செட்டப் ஆனது மிகவும் நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது. இன்னும் சொல்லபோனால் இது ஐபோனில் இருக்கும் டூயல் ரியர் கேமரா டிசைனைப் போல் இருக்கிறது என்றும் கூறலாம். மேலும் இதன் கேமரா செட்டப்பில் எல்இடி ப்ளாஷ் ஒன்றும் உள்ளது.

ரியர் டிசைன் (பின்பக்க வடிவமைப்பு) மட்டுமல்ல.. சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனின் முன்பக்கமும் கூட, அதாவது டிஸ்பிளேவும் கூட நன்றாகவே உள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது மூன்று பக்கங்களிலும் மெல்லிய பெஸல்களையே கொண்டுள்ளது; கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே சற்றே தடினமான பெஸல் உள்ளது. இதுவொரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை எதிர்பார்க்க கூடாது. மாறாக இது AI ஃபேஸ் அன்லாக் ஆதரவுடன் வரும். அதே சமயம் பேட்டர்ன் / பின் அடிப்படையிலான ஆத்தென்டிகேஷனை (Authentication) வழங்கக்கூடும்.

அம்சங்கள்

இதில் 8ஜிபி வரையிலான ரேம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது பிஸிக்கல் ரேம் மற்றும் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) ஆகியவற்றின் கலவையாகும், சாம்சங் நிறுவனம் இதை ரேம் பிளஸ் (RAM Plus) என்று அழைக்கிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 128ஜிபி-ஐ கொண்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட்டின் (Android) எந்த வெர்ஷனை கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இது பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான One UI 4.1 (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) உடன் தான் வரும்! எல்லாவற்றை விடவும் மிக முக்கியமான தகவல் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்களை (Software Updates) பெறும் என்பதை சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது!

விலை

இந்த Samsung Galaxy M04 ஸ்மார்ட்போன், முன்னதாக அறிமுகமான Samsung Galaxy A04e ஸ்மார்ட்போனின் “மறுபெயரிடப்பட்ட ” வெர்ஷன் (Rebranded Version) என்றும் கூறப்படுகிறது. அது உண்மையாகும் பட்சத்தில், இது MediaTek Hello G35 SoC மூலம் இயக்கப்படலாம்! இந்த Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் (Basic Variant) ஆனது ரூ.8,999 க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

The post டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி எம்04 first appeared on .

]]>
வெளிநாட்டுலதான் இதுபேரு A04e.. இந்தியாவுல இதுபேரு M04! https://www.91mobiles.com/tamil/best-low-price-smartphone-expected-from-samsung-galaxy-m04-to-be-launched-in-india-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-low-price-smartphone-expected-from-samsung-galaxy-m04-to-be-launched-in-india-soon Wed, 16 Nov 2022 05:28:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3644 இந்தியாவில் கேலக்ஸி எம்04 என விரைவில் அறிமுகமாக இருக்கிறது. Samsung Galaxy M04 ஆனது Galaxy A04e போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த Galaxy A04e ஸ்மார்ட்போனானது இந்தியாவைத் தவிர வேறு சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி எம்04 சாம்சங் நிறுவனம் தரமான குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. குறைந்த விலை ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அனைத்து அம்சங்களும் மிகுதியாகவே இதில் இருக்கும் என முன்னதாகவே தெரிவித்திருந்தோம். அதன்படி […]

The post வெளிநாட்டுலதான் இதுபேரு A04e.. இந்தியாவுல இதுபேரு M04! first appeared on .

]]>

இந்தியாவில் கேலக்ஸி எம்04 என விரைவில் அறிமுகமாக இருக்கிறது. Samsung Galaxy M04 ஆனது Galaxy A04e போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த Galaxy A04e ஸ்மார்ட்போனானது இந்தியாவைத் தவிர வேறு சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

கேலக்ஸி எம்04

சாம்சங் நிறுவனம் தரமான குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. குறைந்த விலை ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அனைத்து அம்சங்களும் மிகுதியாகவே இதில் இருக்கும் என முன்னதாகவே தெரிவித்திருந்தோம். அதன்படி தற்போது கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஸ்மார்ட்போன் ஏ04இ முன்னதாகவே அறிமுகமான காரணத்தால் அதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வெளியாகும் கேலக்ஸி எம்04 இன் அம்சங்களை ஓரளவு கணிக்க முடிகிறது. Galaxy M04 ஆனது மலிவு விலை ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது. சாம்சங் நிறுவனம் வரும் மாதங்களில் Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

அம்சங்கள்

Samsung Galaxy M04 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி எம்04 ஆனது 6.5 அங்குல எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. பட்ஜெட் விலைப்பிரிவில் 5000mAh பேட்டரி என்பது சிறப்பான விஷயமாகும்.

இயங்குதளம்

10 வாட்ஸ் சார்ஜிங் அடாப்டர் இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸில் இடம்பெறும் என கூறப்படுகிறது. சமீப காலங்களில் வெளியாகும் பெரும்பாலான மொபைல் போன்களில் மொபைலோடு சேர்த்து அடாப்டர் அடாப்டர் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OneUI கோர் 4.1 மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

கேமரா

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் இதில் டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா இதுவாக இருக்கும் என்று வெளியான தகவலை வைத்தே கணித்துவிடலாம் இதன் விலை என்னவென்று. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 13 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. அதேபோல் செஃபி எடுக்கவும், வீடியோகால் அழைப்புகளை மேற்கொள்லவும் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5 எம்பி சென்சார் இடம்பெறும் என தகவல்கள் கூறுகிறது.
சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy M04 குறித்த எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பக்கா மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் மலிவு விலைப் பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியை இது ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post வெளிநாட்டுலதான் இதுபேரு A04e.. இந்தியாவுல இதுபேரு M04! first appeared on .

]]>