iQoo 11 https://www.91mobiles.com/tamil Thu, 20 Apr 2023 05:30:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 iQOO 11, iQOO 9 Pro மொபைல்களுக்கு ரூ. 25,000 வரை தள்ளுபடி: முழு விவரம் https://www.91mobiles.com/tamil/iqoo-11-9-pro-india-price-discount-rs-25000-sale-deals/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iqoo-11-9-pro-india-price-discount-rs-25000-sale-deals Wed, 19 Apr 2023 08:08:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7647   iQOO நிறுவனம் அதன் மூன்றாம் ஆண்டு விற்பனையின் ஒரு பகுதியாக, அதன் ஸ்மார்ட்போன்களுக்குத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. சீன ஸ்மார்ட்போன் பிராண்டான விவோவால் ஆதரிக்கப்படும் இந்நிறுவனம், 2020 இல் இந்திய சந்தையில் நுழைந்தது. குறிப்பிடத்தக்க பாராட்டைப் பெற்ற பல குறிப்பிடத்தக்க போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதன் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகளை வழங்குகிறது. இதனையடுத்து iQOO 11 மொபைல் தள்ளுபடி போக ரூ. 49,999 என்ற விலையில் […]

The post iQOO 11, iQOO 9 Pro மொபைல்களுக்கு ரூ. 25,000 வரை தள்ளுபடி: முழு விவரம் first appeared on .

]]>

Highlights

  • iQOO இந்தியாவில் அதன் மூன்றாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
  • இதனையடுத்து சில ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியை வழங்குகிறது.
  • தள்ளுபடி விற்பனை ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெறும்.

 

iQOO நிறுவனம் அதன் மூன்றாம் ஆண்டு விற்பனையின் ஒரு பகுதியாக, அதன் ஸ்மார்ட்போன்களுக்குத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. சீன ஸ்மார்ட்போன் பிராண்டான விவோவால் ஆதரிக்கப்படும் இந்நிறுவனம், 2020 இல் இந்திய சந்தையில் நுழைந்தது. குறிப்பிடத்தக்க பாராட்டைப் பெற்ற பல குறிப்பிடத்தக்க போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதன் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகளை வழங்குகிறது. இதனையடுத்து iQOO 11 மொபைல் தள்ளுபடி போக ரூ. 49,999 என்ற விலையில்  கிடைக்கிறது. அதாவது ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் அசல் விலையான ரூ. 59,999 இலிருந்து ரூ. 10,000 குறைக்கப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களைப் பார்ப்போம்.

iQOO 3வது ஆண்டு விற்பனை தேதிகள், கிடைக்கும்

ஏப்ரல் 19 (இன்று) முதல், iQOO மூன்றாம் ஆண்டு விற்பனையானது நிறுவனத்தின் வலைத்தளமான iQOO.com மற்றும் Amazon இல் கிடைக்கிறது. ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நாட்டில் உள்ள இரு இணையதளங்களிலும் விற்பனை தொடர்ந்து நடைபெறும். விருப்பமுள்ளோர் இன்று முதல் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

ஆண்டுவிழா விற்பனையின் போது, ​​iQOO 11 தள்ளுபடி விலையில் ரூ.49,999 கிடைக்கும், இது இந்தியாவில் அதன் அசல் விலையான ரூ.59,999ஐ விட ரூ.10,000 குறைவாகும். iQOO 9 மற்றும் iQOO 9 Pro ஆகியவையும் குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் கிடைக்கின்றன. iQOO 9 தற்போது ரூ.30,990 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது அதன் அசல் விலையான ரூ.42,990ஐ விட ரூ.12,000 குறைவாகும். வழக்கமாக ரூ.64,990க்கு விற்கப்படும் ப்ரோ வேரியன்ட் தற்போது ரூ.39,990 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது ரூ.25,000 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள் வங்கி விளம்பரங்களை உள்ளடக்கியது மற்றும் வழக்கமான சேமிப்பக (இண்டர்னல் ஸ்டோரேஜ்) வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

நிர்வாகச் செலவுகளை சேமிக்கும் பொருட்டு, Vivo நிறுவனம் அதன் துணை பிராண்டான iQOO நிறுவனத்தை விவோவோடுஇணைக்க விரும்புவதாக வதந்தி பரவுகிறது . இரண்டு வணிகங்களும் ஏற்கனவே R&D வசதிகள், சேனல் அமைப்பு, விநியோகச் சங்கிலி மற்றும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இருப்பினும், பிராண்டுகள் திட்டமிடல், பயனர் செயல்பாடு, ஊடக உத்தி, மற்றும் ஆன்லைன் விற்பனை ஆகியவற்றின் தனித்துவமான முறைகளை எடுத்ததுள்ளன.

iQOO 9 Pro 5G முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Qualcomm Snapdragon 8 Gen 1
  • ரேம் – 8 ஜிபி
  • டிஸ்ப்ளே – 6.78 அங்குலம் (17.22 செமீ)
  • பின் கேமரா – 50 எம்பி + 50 எம்பி + 16 எம்பி
  • செல்ஃபி கேமரா – 16 எம்.பி
  • பேட்டரி – 4700 mAh

 

The post iQOO 11, iQOO 9 Pro மொபைல்களுக்கு ரூ. 25,000 வரை தள்ளுபடி: முழு விவரம் first appeared on .

]]>
25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/top-5-mobiles-that-charge-100-percent-in-25-minutes/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=top-5-mobiles-that-charge-100-percent-in-25-minutes Mon, 13 Mar 2023 07:29:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6791   சமூக வலைதளங்களைப் பார்வையிடுவது, வீடியோ பார்ப்பது, கேம்கள் விளையாடுவது, இசைக் கேட்பது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு என்பது அதிகரித்துவிட்டது. மேலும் இப்போது வெளியாகும் மொபைல்கள் 5ஜி ஆதரவைக் கொண்டு இருப்பதால், பெரிய பேட்டரியின் தேவை முன்பை விட முக்கியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும் என்பதே. குறிப்பாக […]

The post 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் first appeared on .

]]>

Highlights

  • இப்போது வரும் மொபைல்கள் பெரும்பாலும் வேகமான சார்ஜிங் திறனைக் கொண்டு வெளிவருகின்றன.
  • குறிப்பாக சில மொபைல்கள் 25 நிமிடங்களுக்குள் 100% முழுவதுமாக சார்ஜ் ஆகும் திறனைப் பெற்றுள்ளன.

 

சமூக வலைதளங்களைப் பார்வையிடுவது, வீடியோ பார்ப்பது, கேம்கள் விளையாடுவது, இசைக் கேட்பது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு என்பது அதிகரித்துவிட்டது. மேலும் இப்போது வெளியாகும் மொபைல்கள் 5ஜி ஆதரவைக் கொண்டு இருப்பதால், பெரிய பேட்டரியின் தேவை முன்பை விட முக்கியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும் என்பதே. குறிப்பாக சூப்பர் வேகத்தில் சார்ஜ் ஆகும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இப்படி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் உடன் 1% முதல் 100% வரை வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் டாப் 5 ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் ஐக்யூ 11, ஒன்ப்ளஸ் 11ஆர், ஷாவ்மி 12 ப்ரோ, ஷாவ்மி 13 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆகிய மொபைல்கள் உள்ளன.

ஐக்கூ 11

ஐக்கூ 11 5G  (IQOO 11 5G) என்பது  ஒரு 5ஜி மொபைல் ஆகும். இது 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. கூடவே இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இது 6.78 அங்குல அளவு கொண்ட AMOLED டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது.

ஒன்பிளஸ் 11ஆர்

ஒன்பிளஸ் 11ஆர் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இது இந்த மொபைலை 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இந்த மொபைல் 50 எம்பி பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. கூடவே, இது சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஆனது 4,980 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் மூலம் 19 நிமிடங்களில் இந்த மொபைலை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 5ஜி வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 6.16 அங்குல OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 200 மெகாபிக்சல் பிரைமரி கேமராவையும் கொண்டுள்ளது.

ஷாவ்மி 12 ப்ரோ

ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 pro) ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது 4,600 mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜரோடு வருகிறது. இது பூஸ்ட் மோடில் 18 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது. அதுவே இந்த ஸ்மார்ட்போனை சாதாரண பயன்முறையில் சார்ஜ் செய்தால், 100 சதவீதம் சார்ஜ் செய்ய சுமார் 24 நிமிடங்கள் ஆகிறது. மேலும், இந்த மொபைலில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

ஷாவ்மி 13 ப்ரோ

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாவ்மி 13 ப்ரோ மொபைல் 2K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,820 mAh பேட்டரி உள்ளது. இது 4 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யக் கூடியது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 9.2 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட்டில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல்கள் அனைத்தும் வெறும் 25 நிமிடங்களுக்குள் 1% முதல் 100% வரை முழுமையாக சார்ஜ் ஆகும் திறனை கொண்டவை. பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புபவர்கள் இந்த போன்களை கருத்தில் கொள்ளலாம்.

The post 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் first appeared on .

]]>
இதுவரை எந்த ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கிடாத அந்துது ஸ்கோரை எடுத்த ஐக்கூ 11! https://www.91mobiles.com/tamil/iqoo-11-gets-highest-antutu-score-ever-recorded-by-any-android-smartphone-till-date/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iqoo-11-gets-highest-antutu-score-ever-recorded-by-any-android-smartphone-till-date Mon, 19 Dec 2022 06:22:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4374 இதுவரை எந்த ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கிடாத அந்துது ஸ்கோரை எடுத்துள்ளது ஐக்கூ 11 மொபைல். ஒரு ஸ்மார்ட்போனின் தரத்தை பெரும்பாலும் விவரம் தெரிந்த மக்கள் AnTuTu ஸ்கோரிங்கை வைத்துத் தான் மதிப்பீடு செய்து அது தரமானதா இல்லையா என்பதை கண்டு கொள்கிறார்கள். அப்படி, சமீபத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் தான் iQOO 11. இந்த ஸ்மார்ட் போனின் சமீபத்திய டெஸ்டிங் ஸ்கோர் ஒட்டுமொத்த இணையத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. காரணம், இதுவரை இருந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் […]

The post இதுவரை எந்த ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கிடாத அந்துது ஸ்கோரை எடுத்த ஐக்கூ 11! first appeared on .

]]>

இதுவரை எந்த ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கிடாத அந்துது ஸ்கோரை எடுத்துள்ளது ஐக்கூ 11 மொபைல். ஒரு ஸ்மார்ட்போனின் தரத்தை பெரும்பாலும் விவரம் தெரிந்த மக்கள் AnTuTu ஸ்கோரிங்கை வைத்துத் தான் மதிப்பீடு செய்து அது தரமானதா இல்லையா என்பதை கண்டு கொள்கிறார்கள். அப்படி, சமீபத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் தான் iQOO 11. இந்த ஸ்மார்ட் போனின் சமீபத்திய டெஸ்டிங் ஸ்கோர் ஒட்டுமொத்த இணையத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. காரணம், இதுவரை இருந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே இப்படி ஒரு உயர் மதிப்பெண்ணை எந்தவொரு ஸ்மார்ட்போனும் எடுத்ததில்லை.

இந்திய அறிமுகம்

உண்மையிலேயே இந்த புதிய ஸ்மார்ட்போனின் ஸ்கோரிங் மதிப்பீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் ரேட்டிங் ஸ்கேலை தாண்டியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் ஜனவரி 10ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குவால்கம் ஸ்னாப் டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட்டுடன் அறிமுகமாகும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் சேர்த்து iQOO 11 Pro ஸ்மார்ட்போனையும் நிறுவனம் அறிமுகம் செய்தது.

அதிகபட்ச மதிப்பெண்

வெளியான தகவலின்படி iQOO 11 இதுவரை இல்லாத AnTuTu மதிப்பெண்ணை பெற்றுள்ளது. நம்ப முடியாத விதத்தில் 13,23,820 என்ற AnTuTu மதிப்பெண்களை இந்த iQOO 11 சாதனம் பெற்றுள்ளது. இந்த மதிப்பெண் போக, iQOO 11 அதன் சிபியு டெஸ்டிங் இல் 2,70,987 என்ற மதிப்பெண்ணையும், அதேபோல் நம்ப முடியாத வகையில் 6,07,822 என்ற ஜிபியு மதிப்பெண்களையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஸ்டோரேஜ் மற்றும் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மதிப்பீட்டின் போது இந்த சாதனம் முறையே 2,44,782 மற்றும் 2,00,229 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளது.

இந்த புதிய iQOO 11 ஸ்மார்ட்போன் UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் LPDDR5 RAM உடன் வருகிறது. இந்த iQOO 11 சாதனம் Asus ROG Phone 6, Asus ROG Phone 6 Pro, Xiaomi 12T Pro போன்ற ஸ்மர்ட்போனின் மதிப்பெண்களை தரைமட்டம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்படி மதிப்பெண்களை வாரிக் குவித்த இந்த iQOO 11 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

iQOO 11 சிறப்பம்சம் மற்றும் முழு விபரங்கள்

  • 6.78 அங்குல AMOLED LTPO 4.0 (3200 x 1440 பிக்சல்) டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC
  • 16 GB ரேம் மற்றும் 512 GB ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 13 OS
  • 50 MP + 13 MP + 8 MP டிரிபிள் ரியர் கேமரா
  • 16 MP செல்ஃபி ஷூட்டர்
  • 5,000mAh பேட்டரி
  • 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 5G
  • டூயல் 4G VoLTE Wi-Fi 6 802.11
  • ப்ளூடூத் 5.3
  • ஜிபிஎஸ் / க்ளோனஸ் (GLONASS)
  • யுஎஸ்பி டைப்-C
  • NFC
  • இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • IR சென்சார்
  • ஹை-ஃபை ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்

இது போன்று ஏராளமான அம்சங்களை இந்த iQOO 11 போன் கொண்டுள்ளது.

The post இதுவரை எந்த ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கிடாத அந்துது ஸ்கோரை எடுத்த ஐக்கூ 11! first appeared on .

]]>