iQOO Neo 7 Pro 5G https://www.91mobiles.com/tamil Wed, 12 Jul 2023 08:33:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Amazon Prime day விற்பனையில் வாங்க சிறந்த மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/loved-mobiles-to-buy-in-amazon-prime-day-sale/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=loved-mobiles-to-buy-in-amazon-prime-day-sale Wed, 12 Jul 2023 08:33:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9323 Amazon நிறுவனத்தின் Prime day சிறப்பு விற்பனை வரும் 15, 16 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையை முன்னிட்டு புதிய சில மொபைல்கள் வெளியாக உள்ளன. நிறைய மொபைல்கள் தள்ளுபடியை பெற இருக்கின்றன. மொபைலுக்கு வழங்கப்பட இருக்கும் தள்ளுபடிகள், சலுகைகள், எந்தெந்த மொபைல்கள் தள்ளுபடியை பெற இருக்கின்றன போன்ற விவரங்கள் இப்போதே அமேசான் இணைய தளத்தில் வெளிவரத் துவங்கி விட்டன. நீங்கள் ஏதேனும் மொபைல் வாங்க நினைத்திருந்தால் அந்த மொபைல் தள்ளுபடி பட்டியலில் உள்ளதா […]

The post Amazon Prime day விற்பனையில் வாங்க சிறந்த மொபைல்கள் first appeared on .

]]>

Amazon நிறுவனத்தின் Prime day சிறப்பு விற்பனை வரும் 15, 16 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையை முன்னிட்டு புதிய சில மொபைல்கள் வெளியாக உள்ளன. நிறைய மொபைல்கள் தள்ளுபடியை பெற இருக்கின்றன. மொபைலுக்கு வழங்கப்பட இருக்கும் தள்ளுபடிகள், சலுகைகள், எந்தெந்த மொபைல்கள் தள்ளுபடியை பெற இருக்கின்றன போன்ற விவரங்கள் இப்போதே அமேசான் இணைய தளத்தில் வெளிவரத் துவங்கி விட்டன. நீங்கள் ஏதேனும் மொபைல் வாங்க நினைத்திருந்தால் அந்த மொபைல் தள்ளுபடி பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அல்லது ஏதேனும் புதிய மொபைல் வாங்க நினைத்திருந்தால் தள்ளுபடி கிடைக்கும் மொபைல்களை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவும் இந்த கட்டுரை உதவியாய் இருக்கும்.

 

Oneplus Nord 3

இந்த சிறப்பு விற்பனையில் மக்கள் அதிக ஆர்வமுடன் இருப்பது Oneplus நிறுவனத்தின் Nord 3 5G மொபைலுக்காக என்று அமேசான் குறிப்பிட்டுள்ளது. இந்த மொபைல் இந்த சிறப்பு விற்பனையின் போதே ரிலீஸ் ஆக இருக்கிறது. Flagship-grade IMX890 கேமரா சென்சார், MTK 9000 Flagship-grade சிப்செட், 80W SUPERVOOC fast-charging, 6.74“ அளவிலான 120Hz AMOLED Display போன்ற முக்கியமான அம்சங்களுடன் வெளியாக இருக்கிறது இந்த நோர்ட் 3 5ஜி மொபைல். ரூ.33,999 விலையில் அறிமுகமாக இருக்கும் இந்த மொபைல், Prime day விற்பனையை முன்னிட்டு ரூ.1000 தள்ளுபடியையும் பெற இருக்கிறது. எனவே இதை ரூ.32,999க்கு வாங்க முடியும்.

 

Samsung Galaxy M34 5G

சமீபத்தில் அமேசானில் அதிகம் வாங்கப்பட்ட மொபைல் என அமேசான் இந்த Samsung Galaxy M34 5G மொபைலை குறிப்பிடுகிறது. 120Hz sAMOLED டிஸ்ப்ளே, 50MP Triple No Shake கேமரா, 6000mAh பேட்டரி, RAM Plus வசதி மூலம்  12GB வரையிலான RAM போன்ற முக்கிய அம்சங்களோடு இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது. தற்போது ரூ. 18,999 என்ற விலையில் விற்பனையாகி வரும் இதன் 6GB வேரியண்ட், Prime Day விற்பனையில் ரூ.2000 தள்ளுபடி போக, ரூ.16,999 என்ற விலைக்குக் கிடைக்கும்.

 

Realme Narzo 60 Pro

இந்த மொபைல் கடந்த 6ஆம் தேதி வெளியானது. இதன் விற்பனை வரும் 14ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இப்போது இதற்கான Pre-booking நடந்து வருகிறது. MediaTek Dimensity 7050 சிப்செட், 8 GB RAM, 128 GB ROM, 17.02 cm (6.7 inch) OLED டிஸ்ப்ளே, 100MP ப்ரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 5000mAh போன்ற முக்கிய அம்சங்களுடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.23,999. இதை அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ரூ.1500 தள்ளுபடியில், ரூ.22,499 என்ற விலைக்கு வாங்க முடியும்.

 

iQOO Neo 7 Pro 5G

இந்த மொபைல் கடந்த 4ஆம் தேதி வெளியானது. Snapdragon® 8+ Gen 1 சிப்செட், கேமிங்கிற்கு என தனியான சிப்செட், 6.78-inch டிஸ்ப்ளே, 16MP செல்ஃபி கேமரா, 50MP + 8MP + 2MP என மூன்று பின்பக்க கேமரா, 8GB-128GB, 12GB-256GB என இரண்டு வேரியண்ட்கள், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது.  ரூ.34,999 என்ற விலையில் தற்போது ப்ரீ புக்கிங்கில் இருக்கும் இந்த மொபைலின் 8GB-128GB வேரியண்டை அமேசான் Prime day saleல் ரூ. 2000 தள்ளுபடியோடு, ரூ.32,999 என்ற விலையில் வாங்கலாம்.

 

Tecno Camon 20 Premier 5G

இந்த மொபைல் அமேசான் ப்ரைம் டே துவங்கும் ஜூலை 15 அன்றே அறிமுகமாக இருக்கிறது. தற்போது இதற்கான ப்ரீ புக்கிங் நடைபெற்று வருகிறது. 8GB பிசிகல் ரேம் உடன் 8GB Expandable RAM வசதி, Industry 1st 50MP RGBW-Pro கேமரா, Segment 1st 108MP Ultra-Wide மேக்ரோ லென்ஸ், 6.67″ அளவிலான 120Hz, 10bit AMOLED டிஸ்ப்ளே போன்ற சிறப்பு அம்சங்களோடு வெளியாக இருக்கிறது இந்த மொபைல். ரூ. 29,999 என்ற விலையில் அறிமுகமாக இருக்கும் இந்த போனை ப்ரைம் டே சிறப்பு விற்பனையில் ரூ.1000 தள்ளுபடி போக, ரூ.28,999 என்ற விலைக்கு வாங்க முடியும்.

The post Amazon Prime day விற்பனையில் வாங்க சிறந்த மொபைல்கள் first appeared on .

]]>
120W சார்ஜிங் & 16 ஜிபி ரேமுடன் இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாகிறது iQOO Neo 7 Pro 5G https://www.91mobiles.com/tamil/4-july-iqoo-neo-7-pro-5g-launch-date-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4-july-iqoo-neo-7-pro-5g-launch-date-in-india Fri, 09 Jun 2023 10:06:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8661   கிட்டத்தட்ட ஒரு வார காலமாக  iQOO Neo 7 Pro 5G போனை டீஸ் செய்த பிறகு, இன்று iQOO நிறுவனம் இறுதியாக அதன் இந்திய வெளியீட்டு தேதியை வெளியிட்டு இருக்கிறது. iQoo Neo 7 Pro 5G போன் இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று சமூக ஊடக தளமான ட்விட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதன் வெளியீட்டு விவரங்களுடன், எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகளையும் பார்க்கலாம். iQoo Neo 7 Pro 5G […]

The post 120W சார்ஜிங் & 16 ஜிபி ரேமுடன் இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாகிறது iQOO Neo 7 Pro 5G first appeared on .

]]>

Highlights

  • iQOO Neo 7 Pro 5G போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
  • ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாகிறது
  • 120W ஃபாஸ்ட் சார்ஜிங் & 16 ஜிபி ரேமுடன் வெளியாகலாம்

 

கிட்டத்தட்ட ஒரு வார காலமாக  iQOO Neo 7 Pro 5G போனை டீஸ் செய்த பிறகு, இன்று iQOO நிறுவனம் இறுதியாக அதன் இந்திய வெளியீட்டு தேதியை வெளியிட்டு இருக்கிறது. iQoo Neo 7 Pro 5G போன் இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று சமூக ஊடக தளமான ட்விட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதன் வெளியீட்டு விவரங்களுடன், எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகளையும் பார்க்கலாம்.

iQoo Neo 7 Pro 5G இந்திய அறிமுக விவரங்கள்

 

iQOO இந்தியா நிறுவனம் அதன் ட்விட்டர் ஹேண்டிலின் பேனரை மாற்றும் போது,​​ அதில் நியோ 7 ப்ரோ 5ஜியின் புகைப்படத்தை வைத்துள்ளது. இந்தப் புகைப்படத்தின் மூலம், இந்த மொபைலின் வெளியீட்டு தேதி என ஜூலை 4 ஆம் தேதியை அறிவித்துள்ளது. இது வரை எந்த ஒரு பத்திரிக்கைச் செய்தியோ அல்லது சமூகப் பதிவோ ஐக்குவினால் பகிரப்படவில்லை. இந்த ஃபோனை ‘பவர் டு வின்’ என்ற தலைப்பில் நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.

 

iQOO Neo 7 Pro 5G (கசிந்த) இந்திய விலை

சமீபத்தில் வெளியான கசிவுகளின்படி, iQOO Neo 7 Pro 5G ஃபோன் இந்தியாவில் 16 GB RAM + 256 GB சேமிப்பகத்தில் வெளியிடப்படலாம். இது ஃபோனின் டாப் வேரியண்ட் ஆக இருக்கலாம், இதன் விலை சுமார் ரூ.40,000 ஆக இருக்கும். அதே நேரத்தில், நியோ 7 ப்ரோ 5ஜியின் ஆரம்ப விலை ரூ.32,000 ஆக வைத்திருக்கலாம்.

iQoo Neo 7 Pro 5G (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்

 

டிஸ்ப்ளே

கசிவின் படி, iQOO Neo 7 Pro 5G க்கு 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம். இது 1260 x 2800 பிக்சல் அடர்த்தி கொண்டது. இது 144Hz புதுப்பிப்பு வீதத்தையும் 1300 nits பிரகாசத்தையும் பார்க்கும்.

 

சிப்செட்

இந்த IQOO போனில் Qualcomm Snapdragon 8 Plus Gen 1 சிப்செட்டோடு வெளி வரலாம்

 

கேமரா

புகைப்படம் எடுப்பதற்காக நியோ 7 ப்ரோவில் டூயல் ரியர் கேமரா கொடுக்கப்படலாம். இதில் OIS அம்சத்துடன் கூடிய 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா இருக்கும். அதே நேரத்தில், முன் பேனலில் 16 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் கொடுக்கப்படலாம்.

 

பேட்டரி

இந்த போன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற அம்சங்கள்

போனில் பாதுகாப்பிற்காக, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் 5ஜி, புளூடூத், வைஃபை போன்ற அம்சங்கள் இணைப்புக்காக வழங்கப்படும்.

 

The post 120W சார்ஜிங் & 16 ஜிபி ரேமுடன் இந்தியாவில் ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாகிறது iQOO Neo 7 Pro 5G first appeared on .

]]>