MG https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 05:29:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 குறைந்தவிலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறதா எம்ஜி? https://www.91mobiles.com/tamil/mg-small-electric-car-india-debut-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mg-small-electric-car-india-debut-details Wed, 16 Nov 2022 07:34:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3652 இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது டாடா நிறுவனம். அந்த டாடா எலக்ட்ரிக் கார்களையே ஓரம் கட்டும் வகையில், விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). இது இங்கிலாந்தை (England) சேர்ந்த நிறுவனம் ஆகும். சீனாவை சேர்ந்த (China) செயிக் மோட்டார் (SAIC Motor) குழுமத்தின் ஒரு அங்கமாக எம்ஜி இயங்கி […]

The post குறைந்தவிலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறதா எம்ஜி? first appeared on .

]]>

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது டாடா நிறுவனம். அந்த டாடா எலக்ட்ரிக் கார்களையே ஓரம் கட்டும் வகையில், விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). இது இங்கிலாந்தை (England) சேர்ந்த நிறுவனம் ஆகும். சீனாவை சேர்ந்த (China) செயிக் மோட்டார் (SAIC Motor) குழுமத்தின் ஒரு அங்கமாக எம்ஜி இயங்கி வருகிறது.

இந்தியாவில் எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், எம்ஜி இஸட்எஸ் இவி காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகதான் உள்ளது. ஆனால் இதன் விலை மிகவும் அதிகம்.

தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 22.58 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இவ்வளவு விலை கொடுத்து அனைவராலும் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியாது. எனவே எம்ஜி நிறுவனம் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், எம்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை வரும் ஜனவரி 5ம் தேதி இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

இந்தோனேஷியா (Indonesia) மற்றும் சீனா ஆகிய நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள வுல்லிங் ஏர் இவி (Wuling Air EV) காரின் அடிப்படையில் இந்த புதிய எலெக்ட்ரிக் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது 4 சீட்டர் எலெக்ட்ரிக் காராக இருக்கும். இதன் இன்டீரியரில் இரண்டு 10.25 இன்ச் திரைகள் மற்றும் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவை இடம்பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 4 சீட்டர் கார் என்பதால், முன் பகுதியில் 2 இருக்கைகளும், பின் பகுதியில் 2 இருக்கைகளும் வழங்கப்பட்டிருக்கும்.

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரில் 20-25 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யக்கூடிய தூரம்) 150-200 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 9 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு (Tata Tiago EV), எம்ஜி நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே எம்ஜி நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படும் அதே ஜனவரி 5ம் தேதி எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

The post குறைந்தவிலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறதா எம்ஜி? first appeared on .

]]>
இந்தியாவின் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்கள் https://www.91mobiles.com/tamil/indias-safest-electric-cars-list/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=indias-safest-electric-cars-list Tue, 18 Oct 2022 08:23:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3101 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். பெரிய மோதலின் போது கூட நல்ல பாதுகாப்பை வழங்கக் கூடிய பல கார்கள்  தற்போது இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. அந்தவகையில், அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கும் குறிப்பிட்ட சில எலெக்ட்ரிக் கார்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். இந்த லிஸ்டில் டாடா டிகோர் இவி, ஹூண்டாய் கோனா இவி, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் பிஒய்டி அட்டோ3 ஆகிய […]

The post இந்தியாவின் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

பெரிய மோதலின் போது கூட நல்ல பாதுகாப்பை வழங்கக் கூடிய பல கார்கள்  தற்போது இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. அந்தவகையில், அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கும் குறிப்பிட்ட சில எலெக்ட்ரிக் கார்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இந்த லிஸ்டில் டாடா டிகோர் இவி, ஹூண்டாய் கோனா இவி, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் பிஒய்டி அட்டோ3 ஆகிய எலெக்ட்ரிக் கார்களின் சிறப்புகள் மற்றும் பாதுகாப்பு ரேட்டிங் பற்றிய தகவல்களை பார்க்க இருக்கின்றோம்

டாடா டிகோர் இவி (Tata Tigor EV)

இந்தியாவின் மிக மலிவு விலைக் கொண்ட கார் என்ற புகழுக்கு சொந்தக்காரராக டியாகோ இவி விற்பனைக்கு வரும் வரையில் இருந்த எலெக்ட்ரிக் காரே டாடா டிகோர் இவி. இந்தியாவில் அதீத பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும். அதேவேலையில், இதுவே இந்தியாவின் முதல் அதிக பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் ஆகும்.

இந்தியா தயாரிப்பான டிகோர் இவி குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களை பெற்றது. இது இக்கார் அதீத பாதுகாப்பு திறன்மிக்கது என்பதற்காக சான்றாக அமைந்தது. இக்கார் 2021 ஆகஸ்டிலேயே மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆய்வின்போது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 12 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 49க்கு 37.24 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 12.24 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹூண்டாய் கோனா இவி (Hyundai Kona EV)

இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் எலெக்ட்ரிக் கார் எஸ்யூவி காரே ஹூண்டாய் கோனா. இந்த மின்சார வாகனம் மிக மிக அதிகாப்பானது என்கிற ரேட்டிங்கை ஏஎன்சிஏபி அமைப்பிடம் இருந்து பெற்றிருக்கின்றது. இது நடத்திய மோதல் ஆய்வில் 37 புள்ளிகளுக்கு 35.07 புள்ளிகளை பெற்று அசத்தியது.

குறிப்பாக, இந்த மோதல் ஆய்வில் காரின் முகப்பு பகுதி மிகவும் அசாத்தியமானது தனி திறனை வெளிப்படுத்தியிருக்கின்றது. கடுமையான மோதலிலும் பெரியளவு பாதிப்பைச் சந்திக்காமல் அது அசத்தியது. இந்த மின்சார எஸ்யூவி கார் தற்போது இந்திய சந்தையில் ரூ. 23.84 லட்சம் தொடங்கி ரூ. 24.03 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.

எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV)

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மற்றுமொரு அதீத பாதுகாப்பு திறன்மிக்க எலெக்ட்ரிக் காராகக எம்ஜி இசட்எஸ் இவி இருக்கின்றது. யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் மிக அதிக புள்ளிகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அதாவது, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 90 சதவீதமும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 85 சதவீத புள்ளளையும் இக்கார் பெற்றது.

இந்த மின்சார வாகனம் தற்போதைய நிலவரப்படி ரூ. 22.58 லட்சம் தொடங்கி ரூ. 26.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எம்ஜி நிறுவனம் இந்த மின்சார காரில் பாதுகாப்பு அம்சங்களாக முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏர் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் என எக்கசக்க அம்சங்களை வழங்கியிருக்கின்றது.

இதுமாதிரியான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மேலே பார்த்த மூன்று எலெக்ட்ரிக் கார்களும் அதீத பாதுகாப்பானவை என்கிற புகழைச் சூடியிருக்கின்றன. இதேபோல் அதீத பாதுகாப்பு திறன்மிக்க கார் என்ற பட்டத்தை சமீபத்தில் இந்தியாவில் வெளியீட்டைப் பெற்ற மற்றொரு எலெக்ட்ரிக் காரும் பெற்றிருக்கின்றது. சீன நிறுவனமான பிஒய்டி அறிமுகப்படுத்திய அட்டோ 3 மின்சார காரே அதுவாகும்.

அட்டோ 3

இந்த எலெக்ட்ரிக் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு ஏற்கனவே புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் 2023 ஜனவரியில் டெலிவரி கொடுக்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக 500 வாடிக்கையாளர்களுக்கே அந்த மாதத்தில் கார்கள் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக 7 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமிரா, ஏபிஎஸ், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அடாஸ் தொழில்நுட்பமும் இக்காரில் வழகப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் தானியங்கி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். இதுமாதிரியான சூப்பரான பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் மிக அதிக புள்ளிகளைப் பெற்று 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற மின்சார கார் என்ற புகழைப் பெற்று இருக்கிறது.

The post இந்தியாவின் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>
விரைவில் வர இருக்கும் விலை குறைந்த எலக்ட்ரிக் கார்கள் https://www.91mobiles.com/tamil/3-upcoming-affordable-electric-cars-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=3-upcoming-affordable-electric-cars-in-india Thu, 15 Sep 2022 12:58:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2356 இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 80 சதவீத சந்தை பங்குடன் முன்னணியில் உள்ளது. ஆனால் வரும் காலங்களில் இந்த நிலைமை மாறலாம். ஏனெனில் நிறைய நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன. குறிப்பாக சிட்ரோன் மற்றும் எம்ஜி போன்ற நிறுவனங்கள் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது […]

The post விரைவில் வர இருக்கும் விலை குறைந்த எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 80 சதவீத சந்தை பங்குடன் முன்னணியில் உள்ளது.

ஆனால் வரும் காலங்களில் இந்த நிலைமை மாறலாம். ஏனெனில் நிறைய நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன. குறிப்பாக சிட்ரோன் மற்றும் எம்ஜி போன்ற நிறுவனங்கள் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றன.

இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் 3 எலெக்ட்ரிக் கார்களும் அடுத்த 6 மாதங்களுக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலையும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV)

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின், இதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை (Tata Nexon EV) விற்பனை செய்து வருகிறது. இதில், டிகோர் எலெக்ட்ரிக் காரில் 26kWh பேட்டரி தொகுப்பும், நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 30.2kWh பேட்டரி தொகுப்பும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த 2 பேட்டரி ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றுதான் டியாகோ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மிகவும் விலை குறைவான மாடல் என்பதால், அனேகமாக டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் 26kWh பேட்டரி தொகுப்புதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் இடம்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் சுமார் 300 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். இது மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதாலும், விலை மிகவும் குறைவு என்பதாலும், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் (Citroen-C3 EV)

சிட்ரோன் சி3 கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. இந்தியா மற்றும் பிரேசில் போன்ற வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் கார் சந்தைகளுக்காக சி3 காரின் அடிப்படையிலான இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை சிட்ரோன் நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது. சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் அனேகமாக வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரில் பல்வேறு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 50kWh பேட்டரி ஆப்ஷன் ஒன்றாக இருக்கலாம். இந்த பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 362 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆனால் சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்களில் இதை காட்டிலும் சிறிய பேட்டரி ஆப்ஷன்தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 300 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய வகையில் இந்த பேட்டரி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை போலவே, சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் சிறிய எலெக்ட்ரிக் கார் (MG Small EV)

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்ட வுல்லிங் ஏர் எலெக்ட்ரிக் காரின் (Wuling Air EV) அடிப்படையில் இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறிய எலெக்ட்ரிக் காரில் 20kWh அல்லது 25kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த எலெக்ட்ரின் காரின் டிரைவிங் ரேஞ்ச் 200 முதல் 250 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

விலை குறைவான இந்த 3 புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளதால், இவை விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

The post விரைவில் வர இருக்கும் விலை குறைந்த எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>
800 கி.மீ. ரேன்ஜ் கொண்ட எம்ஜி கன்வெர்டிபில் கார்! https://www.91mobiles.com/tamil/mg-teases-new-two-seater-convertible-car/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mg-teases-new-two-seater-convertible-car Mon, 15 Aug 2022 05:22:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1605 இரண்டு பேர் பயணிக்க கூடிய வகையிலான கன்வெர்டிபில் கார் மாடலை எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த கார் ஏற்கனவே அந்நிறுவனம் அறிமுகம் செய்த கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் ரிட்டன் ‘ஆப் தி லெஜண்ட்’ என்ற தலைப்பில் ஒரு நிமிட வீடியோ டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் எம்ஜி நிறுவனத்தின் புதிய 2-சீட்டர் எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் மாடல் கார் காட்டப்படுகிறது. இந்த கார் சைபர்ஸ்டர் கான்செப்ட்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. […]

The post 800 கி.மீ. ரேன்ஜ் கொண்ட எம்ஜி கன்வெர்டிபில் கார்! first appeared on .

]]>

  • இரண்டு பேர் பயணிக்க கூடிய வகையிலான கன்வெர்டிபில் கார் மாடலை எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
  • இந்த கார் ஏற்கனவே அந்நிறுவனம் அறிமுகம் செய்த கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் ரிட்டன் ‘ஆப் தி லெஜண்ட்’ என்ற தலைப்பில் ஒரு நிமிட வீடியோ டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் எம்ஜி நிறுவனத்தின் புதிய 2-சீட்டர் எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் மாடல் கார் காட்டப்படுகிறது. இந்த கார் சைபர்ஸ்டர் கான்செப்ட்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் எம்ஜிபி ரோட்ஸ்டர் மாடலை நினைவு கூறும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது.

டீசரின் படி எம்ஜி 2 சீட்டர் கன்வெர்டிபில் கார் ப்ரோடக்‌ஷன் ரெடி வடிவில் காட்சி அளிக்கிறது. இந்த காரில் கன்வெர்டிபில் ரூப் ஓபனிங், ரியர் வியூ மிரர்கள், ஓவல் வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி பார், ஸ்வான் டெயில் ஸ்டைல் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருப்பது டீசரில் தெரியவந்துள்ளது. காரின் உள்புறம் யோக் ஸ்டைல் ஸ்டீரிங் வீல், ஸ்போர்ட்ஸ் சீட்கள் உள்ளன.

இவை தவிர புதிய எம்ஜி கன்வெர்டிபில் மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த காரில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். கான்செப்ட் சைபர்ஸ்டெர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை மூன்றே நொடிகளில் எட்டிவிடும் என எம்ஜி மோட்டார் தெரிவித்து இருக்கிறது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் இதே கான்செப்ட்-ஐ தழுவி உருவாகி இருக்கும் எம்ஜி கன்வெர்டிபில் மாடலும் இதே போன்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிரபார்க்கப்படுகிறது.

இன்னொரு போனஸ் செய்தியாக புகழ்பெற்ற ராயல் என்பீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்க இருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனம் எப்போது வெளிவரும்?

இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தா லால் தெரிவித்து இருக்கிறார்.

“எலெக்ட்ரிக் வாகன பிரிவு குறித்த திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்த மிக எளிய வழியை தேர்வு செய்ய மாட்டோம். இதன் பின்னணியில் அதிக வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் ராயல் என்பீல்டு பெயரில் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக அதிக ஆண்டுகள் ஆகும் என்றே தெரிகிறது. “தற்போது ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சில பிரச்சினைகளை சரி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் இப்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

நகர பயன்பாட்டுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.” “தற்போதைய பிளாட்பார்மில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கும் எண்ணம் இல்லை. இது முழுக்க ராயல் என்பீல்டு மாடலாகவே இருக்கும். அறிமுகமாகும் போது சிறப்பான ஒன்றாக இருப்பதோடு, அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையிலஅ இருக்கும்,” என சித்தார்தா லால் தெரிவித்து இருக்கிறார்.

The post 800 கி.மீ. ரேன்ஜ் கொண்ட எம்ஜி கன்வெர்டிபில் கார்! first appeared on .

]]>