moto x30 pro https://www.91mobiles.com/tamil Wed, 17 Aug 2022 09:06:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மோட்டரோலாவின் 200MP கேமராபோன்! https://www.91mobiles.com/tamil/motorola-x30-pro-with-200-megapixel-rear-camera-launched-price-specification/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-x30-pro-with-200-megapixel-rear-camera-launched-price-specification Fri, 12 Aug 2022 11:39:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1587 Motorola X30 Pro ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் முக்கியமான சிறப்பே இது 200 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் கேமராவுடன் வளைந்த கர்வுடு பின்புற பேனல் வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக திறன் கொண்ட ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது. விலை மோட்டோரோலா எக்ஸ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்புத்திறனுடன் வருகிறது. இதன் சீன […]

The post மோட்டரோலாவின் 200MP கேமராபோன்! first appeared on .

]]>

Motorola X30 Pro ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் முக்கியமான சிறப்பே இது 200 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் கேமராவுடன் வளைந்த கர்வுடு பின்புற பேனல் வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக திறன் கொண்ட ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது.

விலை

மோட்டோரோலா எக்ஸ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்புத்திறனுடன் வருகிறது. இதன் சீன விலை CNY 3,699 ஆகும். இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 43,600ல் இருந்து தொடங்குகிறது. அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மொபைலின் சீன விலை CNY 4,199. இந்திய மதிப்பின் படி பார்த்தால் இது தோராயமாக ரூ. 49,500 விலையில் வருகிறது. இதன் 12ஜிபி + 512ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட டாப்-எண்ட் மாடலின் சீன விலை CNY 4,499 ஆகும். இது தோராயமாக ரூ. 53,000 விலையை நெருங்குகிறது.

சிறப்பம்சம்

இந்தியா உட்பட மற்ற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது கிடைக்கும் என்பதை மோட்டோரோலா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்தியாவில் இது விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா X30 ப்ரோ டிவைஸ் 6.73 அங்குல முழு HD+ pOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 144Hz ரெப்பிரஷ் ரேட் உடன் வருகிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் (in-display finger print scanner) வருகிறது.

வடிவமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் பேனல் அனைத்து பக்கங்களிலும் ஸ்லிம் பெசல்களால் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் இருபுறமும் வளைந்த விளிம்புகளைக் கொண்டுள்ளது மற்றும் முன்பக்கத்தின் மேல் பகுதியின் நடுவே பஞ்ச் ஹோல் கேமரா உள்ளது. இது ஹூட்டின் கீழ், Moto X30 Pro மேம்பட்ட 4nm செயல்முறையின் அடிப்படையில் Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் வருகிறது.

சேமிப்புத்திறன் & கேமரா

இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512GB வரை UFS 3.1 சேமிப்ப்புத்திறனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 200 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. மற்ற இரண்டு சென்சார்கள் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராக்களாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்பக்கத்தில், Motorola X30 Pro ஸ்மார்ட்போன் 60 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

சார்ஜர் & பேட்டரி

இந்த புதிய Motorola X30 Pro சாதனம் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4,500mAh பேட்டரியோடு வருகிறது. இது வெறும் 7 நிமிடங்களில் பேட்டரியை 50 சதவிகிதம் சார்ஜ் செய்கிறது. 19 நிமிடங்களில் போனை 100 சதவிகிதம் சார்ஜ் செய்துவிடலாம் என்று மோட்டோரோலா கூறுகிறது. இதுமட்டுமின்றி Moto X30 Pro மொபைல் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
சிறந்த கேமரா செயல்பாட்டை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த Motorola X30 Pro சரியான தேர்வாக இருக்கும்.

The post மோட்டரோலாவின் 200MP கேமராபோன்! first appeared on .

]]>
200 MP கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்! https://www.91mobiles.com/tamil/world-s-first-smartphone-to-debut-with-200mp-camera-moto-x30-pro-launching-date/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=world-s-first-smartphone-to-debut-with-200mp-camera-moto-x30-pro-launching-date Fri, 29 Jul 2022 08:26:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1174 Moto X30 Pro ஸ்மார்ட்போன் தான் 200 எம்பி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 6.67 அங்குல OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. சந்தையில் தங்கள் ஸ்மார்ட்போன் தான் சிறந்ததாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என ஒவ்வொரு நிறுவனங்களும் எடுக்கும் முயற்சி […]

The post 200 MP கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்! first appeared on .

]]>

Moto X30 Pro ஸ்மார்ட்போன் தான் 200 எம்பி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 6.67 அங்குல OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. சந்தையில் தங்கள் ஸ்மார்ட்போன் தான் சிறந்ததாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என ஒவ்வொரு நிறுவனங்களும் எடுக்கும் முயற்சி வியப்படைய வைக்கிறது. அதன்படியான ஒரு ஸ்மார்ட்போன் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

Moto X30 Pro ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான அறிக்கையில் Moto X30 Pro மொபைலில் 200 MP முதன்மைக் கேமரா வழங்கப்பட்டிருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. மோட்டோ நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக இருக்கிறது. இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் இந்த கேமரா மட்டும் சிறப்பு அல்ல, ஒவ்வொன்றும் சிறப்பு தான்.

125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

மோட்டோ நிறுவனத்தின் Moto X30 Pro ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது சமீபத்திய ப்ரீமியம் சிப்செட் ஆகும். Moto X30 Pro ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் 125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி. Moto X30 Pro ஆனது சமீபத்தில் Geekbench இல் XT2241-1 என்ற எண்ணுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு அம்சங்களும் மேம்பட்ட வகையிலேயே இருக்கிறது.

கேமரா

Weibo பதிவின் மூலம் Moto X30 Pro ஸ்மார்ட்போனானது 200 எம்பி பிரதான கேமராவைக் கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 200 எம்பி கேமரா உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் 64 எம்பி, 108 எம்பி, 200 எம்பி என கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் இது எதுவும் ஐபோன் கேமராவுக்கு இணையாக இருப்பதில்லை. ஆனால் இதேபோல் இந்த ஸ்மார்ட்போனையும் சுட்டிக் காட்டிவிட முடியாது. காரணம் இந்த ஸ்மார்ட்போனில் கேமரா லென்ஸ், சென்சார் என ஒவ்வொன்றும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.
மோட்டோ எக்ஸ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா ஆனது 35 மிமீ, 50 மிமீ மற்றும் 85 மிமீ குவிய நீள சென்சார்களை கொண்டிருக்கிறது. இதன் 85 மிமீ லென்ஸ் ஆனது நெருக்கமான உருவப்பட காட்சிகளை பதிவு செய்கிறது. 50 மிமீ லென்ஸ் ஆனது நிலையான பார்வை கோணத்துடன் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் 35 மிமீ லென்ஸ் ஆனது மிக நெருக்கமான கோணத்தை வழங்குகிறது.

கேமராவில் உள்ள ஒரு மெகாபிக்சல் என்பது 10 லட்சம் பிக்சல்களை உள்ளடக்கியது. புகைப்படத்தை ஆழமாக ஜூம் செய்யும் போது காட்சி மங்கலாகி கட்டம் கட்டமாக தோன்றும். அந்த ஒவ்வொரு கட்டமும் ஒரு பிக்சல் ஆகும். அதன்படி நீங்கள் 10 மெகாபிக்சல் கேமராவில் புகைப்படம் எடுத்தால் அதில் 1 கோடி பிக்சல்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது 200 எம்பி கேமராவில் புகைப்படம் எடுத்தால் காட்சி துல்லியம் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 144Hz ரெஃப்ரெஷிங் ரேட் (refreshing rate) மற்றும் HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.67-அங்குல OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். மோட்டோரோலாவின் வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனானது இரட்டை வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது.

RAM

Moto X30 Pro ஸ்மார்ட்போனானது இரட்டை வேரியண்ட்களில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறன், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்புத் திறனுடன் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச அளவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

The post 200 MP கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்! first appeared on .

]]>