nothing phone 1 https://www.91mobiles.com/tamil Wed, 22 Feb 2023 10:02:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஆண்ட்ராய்டு அப்டேட் பெற்றது நத்திங் போன் https://www.91mobiles.com/tamil/nothing-phone-1-receives-android-13-based-nothing-os-15-stable/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-phone-1-receives-android-13-based-nothing-os-15-stable Wed, 22 Feb 2023 10:02:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6008 கார்ல் பெய் துவங்கிய நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன் (1) அறிமுகம் செய்தது. நத்திங் ஒஎஸ் 1.5 அப்டேட் விவரங்கள் ரெடிட் தளத்தில் வெளியாகி இருந்தது. நத்திங் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் நத்திங் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 1.5 அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய அப்டேட் ஸ்மார்ட்போனில் ஆப் இண்டர்ஃபேஸ் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் புதிய […]

The post ஆண்ட்ராய்டு அப்டேட் பெற்றது நத்திங் போன் first appeared on .

]]>
Highlights

கார்ல் பெய் துவங்கிய நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன் (1) அறிமுகம் செய்தது. நத்திங் ஒஎஸ் 1.5 அப்டேட் விவரங்கள் ரெடிட் தளத்தில் வெளியாகி இருந்தது. நத்திங் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் நத்திங் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 1.5 அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய அப்டேட் ஸ்மார்ட்போனில் ஆப் இண்டர்ஃபேஸ் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் புதிய வெதர் ஆப், கேமரா இண்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு இருக்கிறது.

கஸ்டமைசேஷன்களை பொருத்தவரை புதிய க்ளிஃப் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ரிங்டோன்கள், புதிய லாக்ஸ்கிரீன் ஷாட்க்ட் மற்றும் மெட்டீரியல் யு கஸ்டம் கலர் தீம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. யுஐ மாற்றங்களில் டூயல் சிம் மோடில் டேட்டா ஸ்விட்ச் செய்வது எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய கியூஆர் ஸ்கேனர் ஷாட்கட் குயிக் செட்டிங்ஸ் மெனுவில் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர புதிய மீடியா கண்ட்ரோல் இண்டர்ஃபேஸ், வால்யூம் கண்ட்ரோல்கள் மற்றும் லைவ் கேப்ஷன்கள், பிரைவில் மற்றும் இதர அப்கிரேடுகள் வழங்கப்பட்டுள்ளன. நத்திங் போன் (1) ஆண்ட்ராய்டு 13 அப்டேட் செய்வது எப்படி? நத்திங் போன் (1) மாடலில் ஆண்ட்ராய்டு 13 செய்ய போனின் செட்டிங்ஸ் — சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இனி திரையில் தோன்றும் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

The post ஆண்ட்ராய்டு அப்டேட் பெற்றது நத்திங் போன் first appeared on .

]]>
விரைவில் வருகிறது நத்திங் போன் 2! https://www.91mobiles.com/tamil/nothing-co-founder-carl-pei-confirms-about-nothing-phone-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-co-founder-carl-pei-confirms-about-nothing-phone-2 Thu, 02 Feb 2023 05:25:39 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5480 எங்கு அறிமுகமாகும்? இந்த தகவலின் படி, நத்திங் நிறுவனம் அதன் முதன்மையை இந்த முறை அமெரிக்க சந்தை பக்கம் குறிவைத்துள்ளதாக தெரிகிறது. புது நத்திங் போன் 2 மொபைலை நிறுவனம் அமெரிக்காவில் முதலில் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. இந்த நத்திங் போன்(2) விற்பனைக்கு வரும்போது, அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் கார்ல் பெய் தெரிவித்துள்ளார். பிரபலமான பத்திரிக்கை ஒன்றிற்கு பெய் கொடுத்த பேட்டியில், “அமெரிக்காவை எங்களது விற்பனைக்கான முதன்மை சந்தையாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். நத்திங் நிறுவனம் ஆரம்பித்து […]

The post விரைவில் வருகிறது நத்திங் போன் 2! first appeared on .

]]>

Highlights

  • நத்திங் (Nothing)நிறுவனம், அதன் நத்திங் போன்(1) இன் (Nothing Phone 1) அறிமுகத்தைத் தொடர்ந்து, மிக விரைவில் நத்திங் போன் (2) என்ற மொபைலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த நத்திங் போன் (2) அறிமுகத்தைப் பற்றி அதன் துணை நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei) மிக சுவாரசியமான குறிப்பு ஒன்றை இப்போது வெளியிட்டிருக்கிறார்.
  • இந்த குறிப்பில், அவர் நத்திங் போன் (2) ஒரு குறிப்பிட்ட சந்தையில் மட்டும் முதலில் விற்பனைக்கு அறிமுகம் ஆகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எங்கு அறிமுகமாகும்?

இந்த தகவலின் படி, நத்திங் நிறுவனம் அதன் முதன்மையை இந்த முறை அமெரிக்க சந்தை பக்கம் குறிவைத்துள்ளதாக தெரிகிறது. புது நத்திங் போன் 2 மொபைலை நிறுவனம் அமெரிக்காவில் முதலில் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. இந்த நத்திங் போன்(2) விற்பனைக்கு வரும்போது, அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் கார்ல் பெய் தெரிவித்துள்ளார். பிரபலமான பத்திரிக்கை ஒன்றிற்கு பெய் கொடுத்த பேட்டியில், “அமெரிக்காவை எங்களது விற்பனைக்கான முதன்மை சந்தையாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். நத்திங் நிறுவனம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை இதனை செயல்படுத்த முயலவில்லை. இந்த இரண்டு ஆண்டுகள் எங்களது குழுவை கட்டமைக்கவும், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் சரியாக இருந்தது. இனிவரும் ஆண்டுகளில் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எங்களது செயல்பாடுகள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு முன்னுரிமை

இதற்கு அர்த்தம், அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளில் நத்திங் போன் (2) கிடைக்காது என்பது அர்த்தமில்லை. நத்திங் போன்(2) விற்பனைக்கு தயாரான பிறகு, முதலில் அமெரிக்கச் சந்தையில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன் பிறகு, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் சந்தைகளில் தனது விற்பனையை நிறுவனம் தொடங்கும் என்பதே இதற்கான பொருளாகும். இதில் மற்றொரு காரணமும் மறைந்துள்ளது. நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 1 மாடலை அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நிறுவனம், அதனுடைய அடுத்த மாடலை அமெரிக்காவில் முதலில் அறிமுகம் செய்த பிறகு, மற்ற உலக நாடுகளின் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சிறப்பம்சம்

  • நத்திங் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, தற்போது விற்பனையில் இருக்கும் நத்திங் போன்(1) அம்சங்களை பற்றி சற்று பார்க்கலாம்.
  • 6.55 அங்குல ஃப்ளக்ஸிபில் (Flexible) OLED டிஸ்ப்ளே
  • 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate),
  • ஹாப்டிக் டச், HDR10+
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) 5 பாதுகாப்பு
  • குவல்காம் ஸ்னாப்ட்ராகன் 778+ SoC (Qualcomm Snapdragon 778+ SoC)
  • 8GB RAM + 128GB; 8GB RAM + 256GB; 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • 50MP + 50MP கேமரா / 16MP முன்பக்க கேமரா
  • இன்டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் (Indisplay fingerprint sensor)
  • டூவல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் (Dual stereo speakers)
  • ஃபேஸ் அன்லாக் (Face Unlock)
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
  • 33W பாஸ்ட் சார்ஜிங்
  • 4500mAh பேட்டரி

இந்த ஸ்மார்ட் போனிற்கு 3 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு சப்போர்ட் (Android support), நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச் (Security patch) வழங்கப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் புது அம்சத்துடன் நத்திங் போன் 2 மொபைல் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

The post விரைவில் வருகிறது நத்திங் போன் 2! first appeared on .

]]>
அதிகபட்ச தள்ளுபடியில் நத்திங் போன் 1 https://www.91mobiles.com/tamil/nothing-phone-1-available-at-a-never-before-seen-discount-price-flipkart-big-saving-day-sale-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-phone-1-available-at-a-never-before-seen-discount-price-flipkart-big-saving-day-sale-2023 Wed, 18 Jan 2023 06:23:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5100 பிக் சேவிங் டேஸ் விற்பனை பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20 வரை நடக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. சிறந்த மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டால் அதில் நத்தங் போன் 1க்கு முக்கியமான இடம் இருக்கும். விலைக்கேற்ற அம்சங்கள் மிகச் சிறந்த வகையில் இதில் இருக்கிறது   தள்ளுபடி & வங்கிச் சலுகை […]

The post அதிகபட்ச தள்ளுபடியில் நத்திங் போன் 1 first appeared on .

]]>

Highlights

  • பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் குடியரசு தின சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
  • இதன் தொடர்ச்சியாக பிளிப்கார்ட்டில் Nothing Phone (1) மொபைலுக்கு அதிகபட்ச தள்ளுபடி கிடைக்கிறது.

பிக் சேவிங் டேஸ் விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20 வரை நடக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. சிறந்த மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டால் அதில் நத்தங் போன் 1க்கு முக்கியமான இடம் இருக்கும். விலைக்கேற்ற அம்சங்கள் மிகச் சிறந்த வகையில் இதில் இருக்கிறது

 

தள்ளுபடி & வங்கிச் சலுகை

நத்திங் போன் 1 அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை இல்லாத குறைந்த விலையில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் தற்போது கிடைக்கிறது. தனித்துவ வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை ரூ. 37,999. ஆனால், தற்போது ரூ.25,999 என்ற விலைக்கே கிடைக்கிறது. Flipkart குடியரசு தின விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி கார்ட்களை பயன்படுத்தி நத்திங் போன் 1 வாங்கினால் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் இரண்டுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் நத்திங் போன் 1 வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இதுவே சரியான நேரமாகும்.

தள்ளுபடி விவரங்கள்

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், நத்திங் போன் 1 இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.25,999 என கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் ரூ.24,999 என்ற விலையில் வாங்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆனது தள்ளுபடி விலையில் ரூ.27,999 என கிடைக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.35,499 என கிடைக்கிறது. இந்த அனைத்து வேரியண்டும் ரூ.1000 என்ற கூடுதல் தள்ளுபடியை பெறுகிறது.

 

அப்டேட்கள்

ஆரம்பத்தில், சில சிக்கல்களை சந்திப்பதாக  வாடிக்கையாளர்களிடம்  இருந்து நத்திங் போன் (1) மீது புகார்கள் எழுந்தன. இதை சரி செய்யும் வகையில் நத்திங் போன் (1) தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகளில் எந்த குறைபாடும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இயங்குதளம்

இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 778G+ SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்களை பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அம்சங்கள்

டூயல் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் என பல மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. 6.5 அங்குல முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

The post அதிகபட்ச தள்ளுபடியில் நத்திங் போன் 1 first appeared on .

]]>
நத்திங்போன் 1 மொபைலுக்கு ரூ. 6500 தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/nothing-phone-1-available-at-huge-discount-price-in-flipkart/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-phone-1-available-at-huge-discount-price-in-flipkart Mon, 21 Nov 2022 06:17:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3760 நத்திங் போன் 1க்கு பிளிப்கார்ட் தளத்தில் அவ்வப்போது சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது நத்திங் போன் 1 மொபைலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6500 வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது. தள்ளுபடி நத்திங் போன் (1) ஆனது ரூ.32,999 என அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான குறுகிய நாட்களில் இந்த போனுக்கான டிமாண்ட் அதிகரித்தது. தொடர்ந்து இந்த போனின் விலையும் ரூ.1000 உயர்த்தப்பட்டது. நத்திங் போன் 1ஐ வாங்கலாம் என்று யோசித்து இந்த விலை உயர்வு அறிவிப்பு ஒரு தடையாக […]

The post நத்திங்போன் 1 மொபைலுக்கு ரூ. 6500 தள்ளுபடி! first appeared on .

]]>

நத்திங் போன் 1க்கு பிளிப்கார்ட் தளத்தில் அவ்வப்போது சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது நத்திங் போன் 1 மொபைலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6500 வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது.

தள்ளுபடி

நத்திங் போன் (1) ஆனது ரூ.32,999 என அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான குறுகிய நாட்களில் இந்த போனுக்கான டிமாண்ட் அதிகரித்தது. தொடர்ந்து இந்த போனின் விலையும் ரூ.1000 உயர்த்தப்பட்டது. நத்திங் போன் 1ஐ வாங்கலாம் என்று யோசித்து இந்த விலை உயர்வு அறிவிப்பு ஒரு தடையாக இருந்திருந்தால் இனி இந்த தடை உங்களுக்கு இல்லை. காரணம் பிளிப்கார்ட்டில் நத்திங் போன் (1)க்கு ரூ.6500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரூ.32,999 என்ற விலையில் அறிமுகமான நத்திங் போன் (1) பிளிப்கார்ட்டில் வழங்கப்பட்ட ரூ.6500 தள்ளுபடியின் மூலம் ரூ.27,499 என கிடைக்கிறது. கூடுதல் தள்ளுபடியும் உண்டு, PNB கிரெடிட் கார்டு அல்லது ஃபெடரல் வங்கி கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். ஸ்மார்ட்போனின் நிலையை பொறுத்து எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது.

விமர்சனங்களில் ஒருசில குறைபாடுகள் குறிப்பிடப் பட்டாலும் விலைக்கேற்ற அம்சங்கள் இதில் இருக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது. டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி கட்டுப்பாடு தன்மையில் சில சிக்கல்களை சந்தித்து வருவதாக நத்திங் போன் (1) மீது புகார்கள் எழுந்தது. தொடர்ந்து இதை சரி செய்யும் வகையில் நத்திங் போன் (1) மூன்றுக்கும் மேற்பட்ட புதுப்பிப்புகளை வெளியிட்டது. ஸ்மார்ட்போனில் கோளாறு என்றதும் நத்திங் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்தது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகளில் எந்த குறைபாடும் இல்லை.

விலை

Nothing Phone (1) ஆனது மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த அனைத்தின் விலையும் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. Nothing Phone (1) விலை ஆனது ரூ.1000 என்ற வீதம் ஒவ்வொரு வேரியண்ட்-க்கும் உயர்த்தப்பட்டது. அதன்படி 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.32,999 என இருந்த நிலையில் தற்போது ரூ.33,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.33,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.39,999 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிப்செட்

6.5 அங்குல முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 778G+ SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

கேமரா

இரண்டு கேமராக்கள் மட்டும்தான் இருக்கிறது என்றாலும், இதில் தரமான கேமரா சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. Nothing Phone (1) இல் சோனி IMX766 சென்சார் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி சோனி IMX766 கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என டூயல் கேமரா வசதி இருக்கிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி எடுப்பதற்க்கு என 16 எம்பி சோனி IMX471 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி & சார்ஜிங்

Nothing Phone (1) இல் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 33W USB PD ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளது. அதேபோல் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.

The post நத்திங்போன் 1 மொபைலுக்கு ரூ. 6500 தள்ளுபடி! first appeared on .

]]>
அடுத்த அப்டேட்டை வெளியிட்டது நத்திங் போன்(1) https://www.91mobiles.com/tamil/nothing-phone-1-users-gets-new-os-update-with-multiple-improvements/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-phone-1-users-gets-new-os-update-with-multiple-improvements Fri, 30 Sep 2022 07:13:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2683 வித்தியாசமான தோற்றம், ஐபோனுக்கு போட்டி என பலத்த அறிவிப்புகள் உடன் Nothing Phone (1) அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தயாரிப்பு அடிப்படையிலும், சாஃப்ட்வேர் (ஓஎஸ்) அடிப்படையிலும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதை சரிசெய்யும் வகையில் நிறுவனம் தொடர்ச்சியாக அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. நிறுவனம் முதல் போனிலேயே பெரும் பிழைகள் இருந்துவிடக் கூடாது என கவனமாக வேலை செய்து தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி வருகிறது. நத்திங் ஓஎஸ் பதிப்பு அதன்படி நிறுவனம் கேமரா மேம்பாடுகள் உள்ளிட்ட சில மேம்படுத்தல்களை […]

The post அடுத்த அப்டேட்டை வெளியிட்டது நத்திங் போன்(1) first appeared on .

]]>

வித்தியாசமான தோற்றம், ஐபோனுக்கு போட்டி என பலத்த அறிவிப்புகள் உடன் Nothing Phone (1) அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தயாரிப்பு அடிப்படையிலும், சாஃப்ட்வேர் (ஓஎஸ்) அடிப்படையிலும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதை சரிசெய்யும் வகையில் நிறுவனம் தொடர்ச்சியாக அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. நிறுவனம் முதல் போனிலேயே பெரும் பிழைகள் இருந்துவிடக் கூடாது என கவனமாக வேலை செய்து தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி வருகிறது.

நத்திங் ஓஎஸ் பதிப்பு

அதன்படி நிறுவனம் கேமரா மேம்பாடுகள் உள்ளிட்ட சில மேம்படுத்தல்களை வழங்கி நத்திங் OS பதிப்பு 1.1.4 புதுப்பிப்பை வழங்கி உள்ளது. நத்திங் ஓஎஸ் பதிப்பு 1.1.4 புதுப்பிப்பு தற்போதே பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்த இந்த போன் பெறும் நான்காவது அப்டேட் இதுவாகும். செப்டம்பர் பாதுகாப்பு பேட்ச், கேமரா மேம்பாடுகள் என பல மேம்படுத்தல்களை வழங்குகிறது.

நத்திங் தீம் வாட்டர்மார்க்

நத்திங் ஓஎஸ் பதிப்பு 1.1.4 ஆனது கேமரா பயன்பாட்டில் நத்திங் தீம் வாட்டர்மார்க் சேர்க்கும் புதிய விருப்பத்தை கொண்டு வந்துள்ளது. அதேபோல் இந்த புதுப்பிப்பு அல்ட்ரா வைட் கேமரா வண்ண அளவுத்திருத்தத்தை மேம்படுத்தி வழங்குகிறது. பிரதான லென்ஸ் மற்றும் அல்ட்ரா வைட் சென்சார்களுக்குள் இருக்கும் வண்ண நிலைத் தன்மையை இந்த அப்டேட் சமப்படுத்துகிறது.

கேமரா மேம்பாடு

Moving objects அதாவது நகரும் பொருட்களை படமெடுக்கும் போது அதன் நிலைத்தன்மையை சரிசெய்ய New motion detection அல்காரிதம் வழங்கப்பட்டுள்ளது. அல்ட்ரா-வைட் பயன்முறையில் HDR ஐப் பயன்படுத்தும் போது காட்சியை பதிவும் செய்யும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நைட் மோட் ஷாட்கள் வண்ணத் துல்லியமும் மேம்படுத்தி வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கக் கேமராவில் இருக்கும் ஷார்ப்பர் அம்சமானது இயற்கையாகவே பிரகாசமான காட்சிகளை பதிவு செய்ய அனுமதிக்கிறது. நத்திங் ஓஎஸ் பதிப்பு 1.1.4 ஆனது ஃபேஸ் அன்லாக் அல்காரிதத்தை மேம்படுத்தி இருக்கிறது. செப்டம்பர் செக்யூரிட்டி பேட்ச், புது யுஐ சிஸ்டம் அப்டேட்ஸ், தெர்மல் செயல்திறன் மேம்படுத்தல் உள்ளிட்ட மேம்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்

அதேபோல் இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் பேட்டரி ஆயுளை நீடிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர நத்திங் மற்றொரு விஷயத்தையும் உறுதி செய்துள்ளது. அது ஆண்ட்ராய்டு 13 அப்டேட் குறித்த தகவல் ஆகும். 2023 இன் ஆரம்பத்தில் இந்த அப்டேட்டை பயனர்கள் பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பீட்டா பதிப்பில் இந்த அப்டேட் வழங்கி சோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறது.

தள்ளுபடியுடன் நத்திங் போன் (1)

சமீபத்தில் Nothing Phone (1) விலை ஆனது ஒவ்வொரு வேரியண்ட்-க்கும் ரூ.1000 என்ற வீதம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து நத்திங் போன் (1) ரூ.33,999 என பிளிப்கார்ட்டில் விற்கப்பட்டு வந்த நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.28,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் இருக்கிறது. இதன் மூலம் இன்னும் குறைவான விலைக்கு நத்திங் போனை வாங்க முடியும்.

The post அடுத்த அப்டேட்டை வெளியிட்டது நத்திங் போன்(1) first appeared on .

]]>
Nothing Phone 1-ஐ வாங்கியவர்களுக்கு ஒரு பேட் நியூஸ்! https://www.91mobiles.com/tamil/nothing-phone-1-users-here-is-when-your-smartphone-get-android-13-os-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-phone-1-users-here-is-when-your-smartphone-get-android-13-os-update Wed, 24 Aug 2022 12:45:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1809 மிட்-ரேன்ஜ் விலையில் வெளியான நத்திங் போன் 1-ஐ, ‘ஆப்பிள் ஐபோனிற்கு எதிராக களமிறங்கும் ஒரு ஸ்மார்ட்போன்’ என்றெல்லாம் பில்ட்-அப் செய்ததன் விளைவாக மக்கள் மத்தியில் Nothing Phone 1 மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால், டெலிவரியில் தாமதம், டிஸ்பிளேவில் டெட் பிக்ஸல் மற்றும் க்ரீன் டின்ட் தெரிகிறது, பேக் பேனலில் தூசி இருக்கிறது, ஆடியோ குவாலிட்டி மிகவும் மோசமாக இருக்கிறது, இதன் ஃபேஸ் அன்லாக் அம்சமானது மிகவும் நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறது என Nothing Phone 1 […]

The post Nothing Phone 1-ஐ வாங்கியவர்களுக்கு ஒரு பேட் நியூஸ்! first appeared on .

]]>

மிட்-ரேன்ஜ் விலையில் வெளியான நத்திங் போன் 1-ஐ, ‘ஆப்பிள் ஐபோனிற்கு எதிராக களமிறங்கும் ஒரு ஸ்மார்ட்போன்’ என்றெல்லாம் பில்ட்-அப் செய்ததன் விளைவாக மக்கள் மத்தியில் Nothing Phone 1 மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆனால், டெலிவரியில் தாமதம், டிஸ்பிளேவில் டெட் பிக்ஸல் மற்றும் க்ரீன் டின்ட் தெரிகிறது, பேக் பேனலில் தூசி இருக்கிறது, ஆடியோ குவாலிட்டி மிகவும் மோசமாக இருக்கிறது, இதன் ஃபேஸ் அன்லாக் அம்சமானது மிகவும் நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறது என Nothing Phone 1 ஆனது – பலவகையான விமர்சனங்களுக்கு ஆளானது!

ஸ்டாண்டர்ட் எடிஷன் வெளியான வேகத்தில் ‘லைட்’ எடிஷன் அறிமுகமாகும் என்கிற ஒரு தகவலும் வந்தது. அதாவது ‘நத்திங் போன் 1 லைட்’ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்கிற தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் “முழுக்க முழுக்க ஒரு வதந்தி’ என்று கூறினார் – நத்திங் நிறுவனத்தின் சிஇஓ ஆன கார்ல் பெய்!

Phone 1-ஐ வாங்கியவர்களுக்கு ஒரு பேட் நியூஸ்!

அது என்னவென்றால், நத்திங் போன் 1 ஆனது அவ்வளவு சீக்கிரத்தில் Android 13 ஓஎஸ் அப்டேட்டை பெறாது என்பதே ஆகும். இந்த தகவல் நத்திங் நிறுவனர் ஆன கார்ல் பெய்யிடமிருந்து நேரடியாக வந்துள்ளது. ட்விட்டரில் ஒருவர், நத்திங் போன் 1-க்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் எப்போது வரும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, ‘இப்போதைக்கு வராது’ என்கிற பதிலே ‘பெய்’ இடம் இருந்து கிடைத்துள்ளது!

Android 13 OS அப்டேட் எப்போது வரும்?

நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் ஆனது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரலாம் என்று நம்பப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல!

ஏன் இந்த தாமதம்?

நத்திங் நிறுவனத்திற்கு அதன் போன் 1-இன் வன்பொருளை மேம்படுத்தவே இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. அதன் பின்னரே மென்பொருள் மேம்படுத்தல்கள் நன்றாக வேலை செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக, போன் 1 ஆனது நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்பதால், எல்லாமே கொஞ்சம் தாமதமாகவே நடக்கும்.

மூன்று வருட ஓஎஸ் அப்டேட்.. நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்!

நத்திங் போன் (1) ஆனது நத்திங் ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட ஒரு கஸ்டம் ஓஎஸ் ஆகும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று வருடங்களுக்கான “பெரிய” OS அப்டேட்ஸ் மற்றும் நான்கு ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும். அறிமுகமானது முதல் இந்த ஸ்மார்ட்போன் 3 OTA அப்டேட்களை பெற்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் 1-இன் நிறைகளும், குறைகளும்!

நிறைகள்

  • பிரீமியம் பில்ட் குவாலிட்டி
  • வித்தியாசமான டிசைன்
  • தெளிவான 120Hz OLED டிஸ்ப்ளே
  • நல்ல வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் IP53 மதிப்பீடு
  • போதுமான பேட்டரி ஆயுள்
  • நல்ல முதன்மை கேமரா

குறைகள்

  • மற்ற கேமராக்கள் சுமார் தான்; குறிப்பாக குறைந்த வெளிச்சத்தில் நல்ல புகைப்படங்களை எடுக்க போராடுகின்றன
  • ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வரவில்லை; தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டும்!

The post Nothing Phone 1-ஐ வாங்கியவர்களுக்கு ஒரு பேட் நியூஸ்! first appeared on .

]]>
நத்திங் போனுக்கு மாற்று என்ன? https://www.91mobiles.com/tamil/nothing-second-smartphone-skip-led-lights-price-under-rs-25000-called-nothing-phone-1-lite/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-second-smartphone-skip-led-lights-price-under-rs-25000-called-nothing-phone-1-lite Wed, 03 Aug 2022 08:55:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1325 டெலிவரியில் தாமதம், டிஸ்பிளேவில் டெட் பிக்ஸல் மற்றும் க்ரீன் டின்ட், பேக் பேனலில் தூசி, மோசமான ஆடியோ குவாலிட்டி, நம்பகத்தன்மையற்ற ஃபேஸ் அன்லாக் அம்சம் என நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மீது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில், அடுத்ததாக அறிமுகமாகும் Nothing Phone குறித்த தகவல் வெளியாகி பலரையும் கடுப்பாக்கி உள்ளது. Light இல்லாமல் வரும் ‘lite’ எடிஷன்! நத்திங் போன் (1) மாடலில் உள்ள சிக்கல்கள் சரி செய்யப்படுமா என்கிற கேள்விக்கு எந்த […]

The post நத்திங் போனுக்கு மாற்று என்ன? first appeared on .

]]>

டெலிவரியில் தாமதம், டிஸ்பிளேவில் டெட் பிக்ஸல் மற்றும் க்ரீன் டின்ட், பேக் பேனலில் தூசி, மோசமான ஆடியோ குவாலிட்டி, நம்பகத்தன்மையற்ற ஃபேஸ் அன்லாக் அம்சம் என நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மீது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில், அடுத்ததாக அறிமுகமாகும் Nothing Phone குறித்த தகவல் வெளியாகி பலரையும் கடுப்பாக்கி உள்ளது.

Light இல்லாமல் வரும் ‘lite’ எடிஷன்!

நத்திங் போன் (1) மாடலில் உள்ள சிக்கல்கள் சரி செய்யப்படுமா என்கிற கேள்விக்கு எந்த பதிலும் கிடைக்காத நேரத்தில் நத்திங் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் ஆன Nothing Phone (1) Lite மாடலை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனும் மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலையின் கீழ் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் லைட் எடிஷனில், எல்இடி-களுடன் “ஒளிரும்” பேக் பேனல் இடம்பெறாமல் போகலாம்.

வெளியான ‘leak’ தகவல்களின் அடிப்படையில், நத்திங் போன் (1) லைட் ஆனது 6.55-அங்குல அளவிலான Full HD plus OLED டிஸ்ப்ளேவுடன் வரும். இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை (refresh rate) கொண்டிருக்கும். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட், டூயல் 50-மெகாபிக்சல் ரியர் கேமராக்கள் மற்றும் 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் (1) லைட் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் போன் இந்தியாவில் ரூ.32,999 க்கு கிடைக்கிறது. நத்திங் போன் (1) லைட் ஆனது, இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேரத்தில் அறிமுகம் செய்யப்படலாம். எப்படி பார்த்தாலும் இது இந்த 2022 ஆம் ஆண்டிற்குள்ளேயே அறிமுகம் செய்யப்பட்டு விடும்.

நத்திங் ஃபோன் 1-க்கு நிறைய ‘ஆல்டர்நேட்டிவ்’ ஸ்மார்ட்போன்கள் உள்ளன. OnePlus Nord 2T ஸ்மார்ட்போன், நத்திங் போன் 1-இன் மிகவும் முக்கியமான “மாற்று” ஸ்மார்ட்போன் ஆகும். இன்னும் சொல்வதென்றால், ஒப்பீட்டளவில் இதன் விலை கொஞ்சம் குறைவு. இதன் 8GB + 128GB ஆப்ஷன் ரூ.28,999 க்கு கிடைக்கிறது. அடுத்ததாக Samsung Galaxy A53 5G உள்ளது. இது ரூ.35,000 என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த போன்களில் ஒன்று.

இவை தவிர, நத்திங் போன் (1) க்கு பதிலாக நீங்கள் மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30), போக்கோ எஃப்4 5ஜி (Poco F4 5G) மற்றும் ஐக்யூ நியோ 6 (iQOO Neo 6) போன்ற ஸ்மார்ட்போன்களையும் கருத்தில் கொள்ளலாம்.

ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் (பேஸிக் 8GB + 128GB) ரூ.29,999 க்கு கிடைக்கிறது. அதே போல போக்கோ F4 5G ஸ்மார்ட்போனின் 6GB + 128GB ஆப்ஷன் ரூ.27,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக மோட்டோரோலா எட்ஜ் 30-இன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.27,999 க்கு கிடைக்கிறது.

The post நத்திங் போனுக்கு மாற்று என்ன? first appeared on .

]]>
Nothing நிறுவனத்திடம் இருந்து பட்ஜெட் போன் வருகிறதா? https://www.91mobiles.com/tamil/nothing-could-soon-launch-a-lite-version-model-of-its-new-phone-named-nothing-lite-phone-1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-could-soon-launch-a-lite-version-model-of-its-new-phone-named-nothing-lite-phone-1 Mon, 01 Aug 2022 05:28:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1228 Nothing நிறுவனம் இப்போது, புதிதாக அதனுடைய 2வது ஸ்மார்ட்போன் மாடலை சைலெண்டாக உருவாக்கி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நத்திங் போன் 1 டிவைஸ் உலகளவில் பெரியளவு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, நிறுவனம் இப்போது பட்ஜெட் செக்மென்ட்டிலும் கால் பதிக்க இருப்பதாகத் தெரிகிறது. Apple, OnePlus, Oppo, Vivo போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அவர்களுக்கான லைட் வெர்ஷன் மாடல்களை கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், இப்போது Nothing நிறுவனமும் கூட்டு […]

The post Nothing நிறுவனத்திடம் இருந்து பட்ஜெட் போன் வருகிறதா? first appeared on .

]]>

Nothing நிறுவனம் இப்போது, புதிதாக அதனுடைய 2வது ஸ்மார்ட்போன் மாடலை சைலெண்டாக உருவாக்கி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நத்திங் போன் 1 டிவைஸ் உலகளவில் பெரியளவு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, நிறுவனம் இப்போது பட்ஜெட் செக்மென்ட்டிலும் கால் பதிக்க இருப்பதாகத் தெரிகிறது.
Apple, OnePlus, Oppo, Vivo போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அவர்களுக்கான லைட் வெர்ஷன் மாடல்களை கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், இப்போது Nothing நிறுவனமும் கூட்டு சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய லைட் வெர்ஷன் மாடலை நிறுவனம் நத்திங் லைட் போன் 1 (Nothing Lite Phone 1) என்ற பெயரில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nothing Lite Phone 1 டிவைஸில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள Nothing Lite Phone 1, நத்திங் போன் 1ல் வழங்கப்பட அதே டிஸ்பிளே, ப்ராசஸர் மற்றும் கேமராக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லைட் வெர்ஷன் நத்திங் போனில் இரண்டு முக்கிய வேறுபாடுகள் இருக்கும் என்று சமீபத்திய தகவல் குறிப்பிடுகிறது.

Nothing Lite Phone 1 டிவைஸ் ஒரு சாதாரண ட்ரான்ஸ்பரென்ட் கண்ணாடி உடன், பின்புற LED லைட் இல்லாமலும், க்ளைஃப் (Glyph) இன்டர்பேஸ் அம்சமும் இல்லாமல் வெளிவரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இந்த லைட் வெர்ஷன் மாடலில் இடம் பெறாது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், லைட் வெர்ஷன் டிவைஸ் 42W சார்ஜரைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நத்திங் லைட் போன் 1 சாதனம், 33W சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கும் என்று சமீபத்திய லீக் தகவல் தெரிவிக்கிறது.

இந்த Nothing Lite Phone 1 ரூ. 24,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த லைட் வெர்ஷன் மாடல்கள் என்ன ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வெளிவரும் என்பது குறித்த ஆதாரங்கள் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.

இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் பட்ஜெட் விலையில் ஒரு 6 ஜிபி/128 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் மாடலுடன் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த லைட் வெர்ஷன் நத்திங் போன் டிவைஸ் ரூ.24,999 என்ற விலையில் தொடங்கும் என்பதற்கான சில அறிகுறிகள் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமாக, வரவிருக்கும் இந்த புதிய போன் சற்று பெரிய 5000mAh பேட்டரியுடன் வரும் என்று சில ஆதாரங்கள் கூறியுள்ளன. இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் (1) இல் இருப்பது போன்று 6.55′ அங்குல முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட் உடன் வெளிவரக்கூடும். இதிலும் 50 மெகாபிக்சல் கொண்ட டூயல் கேமராக்கள் இடம்பெறும். போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

நிச்சயமாக, நத்திங் லைட் வெர்ஷன் போனும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ‘நத்திங் ஓஎஸ்’ இடைமுகத்தில் இயங்கும் என்பதில் சந்தேகமில்லை. நத்திங் நிறுவனம் குறைந்த விலையில் அதன் லைட் வெர்ஷன் போன்களை விற்பனை செய்யுமென்றால், கட்டாயமாக அதன் விற்பனை இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தை ஒட்டி தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இருப்பினும், Nothing Lite Phone 1 பற்றி நிறுவனத்திடம் கேட்டபோது, அத்தகைய ஒரு திட்டம் இல்லை என்று கூறியதாக டெக் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

The post Nothing நிறுவனத்திடம் இருந்து பட்ஜெட் போன் வருகிறதா? first appeared on .

]]>
வெளியாகி 10 நாட்களுக்குள் அப்டேட் வெளியிட்டது Nothing Phone 1 https://www.91mobiles.com/tamil/nothing-phone-1-receiving-first-update-with-battery-life-optimisation/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-phone-1-receiving-first-update-with-battery-life-optimisation Thu, 21 Jul 2022 09:53:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1008 நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஜூலை 12-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல்வேறு நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வந்தாலும், இந்தியாவில் இன்று இரவு 7 மணிக்கு தான் விற்பனை தொடங்க இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த போன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நத்திங் நிறுவனம் அதன் முதல் போனான நத்திங் போன் (1) மாடலுக்கு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட்டில் யூசர் இண்டர்பேஸ், பேட்டரி, கேமரா ஆகியவற்றில் சில […]

The post வெளியாகி 10 நாட்களுக்குள் அப்டேட் வெளியிட்டது Nothing Phone 1 first appeared on .

]]>

நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஜூலை 12-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல்வேறு நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வந்தாலும், இந்தியாவில் இன்று இரவு 7 மணிக்கு தான் விற்பனை தொடங்க இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த போன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நத்திங் நிறுவனம் அதன் முதல் போனான நத்திங் போன் (1) மாடலுக்கு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அப்டேட்டில் யூசர் இண்டர்பேஸ், பேட்டரி, கேமரா ஆகியவற்றில் சில மேம்படுத்தல்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட் 93.81MB அளவைக் கொண்டிருக்கிறது.
இந்த அப்டேட்டில் நத்திங் இயங்குதளத்தின் சிஸ்டம் ஒலிகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கேமராவில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. குறிப்பாக அதில் HDR10 ப்ளஸுக்கான ஆதரவை பெற்றுள்ளன. இதன்மூலம் HDR, Portrait, இரவுக் காட்சி மற்றும் பிற மோட்களுக்கான கேமரா எபெக்ட்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நத்திங் போன் 1-ன் பேட்டரி ஆயுளும் இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நத்திங் போனை பயன்படுத்தியவர்கள் அதன் டிஸ்ப்ளேவில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தனர். இதனை சரிபடுத்தும் வகையில் விரைவில் ஒரு அப்டேட்டை வெளியிட நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

The post வெளியாகி 10 நாட்களுக்குள் அப்டேட் வெளியிட்டது Nothing Phone 1 first appeared on .

]]>
நத்திங் போனின் மேல் குவியும் பிரச்சனைகள் https://www.91mobiles.com/tamil/nothing-phone-1-facing-hardware-level-issues/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-phone-1-facing-hardware-level-issues Wed, 20 Jul 2022 08:22:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=981 மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தனது முதல் ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது நத்திங் நிறுவனம். டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின்பக்க பேனலில் LED ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொபைலுக்கு நோட்டிபிகேஷன்கள் வரும் போது இது ஒளிரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் 120Hz Refresh rate கூடிய 6.55 அங்குல OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை […]

The post நத்திங் போனின் மேல் குவியும் பிரச்சனைகள் first appeared on .

]]>

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தனது முதல் ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது நத்திங் நிறுவனம். டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் பின்பக்க பேனலில் LED ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொபைலுக்கு நோட்டிபிகேஷன்கள் வரும் போது இது ஒளிரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் 120Hz Refresh rate கூடிய 6.55 அங்குல OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் (Qualcomm snaprdragon) 778G+ புராசஸரை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் டூயல் கேமரா இடம்பெற்றுள்ளது. இதுதவிர முன்புறம் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது. 4,500mAh பேட்டரி திறன் கொண்ட இதில் 33W fast charging வசதியும் இருக்கிறது. இதில் 5G மற்றும் 4G LED போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், வெளியானது முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இதில் உள்ள ஹார்ட்வேர் குறைபாடு காரணமாக டிஸ்ப்ளேவில் கருப்பு நிறத்திற்கு பதிலாக பச்சை நிறத்தில் காட்சி அளிக்கின்றன. ஒருசிலர் இந்த பிரச்சனை காரணமாக போனை திருப்பு அனுப்பிய போதும் அதற்கு பதிலாக வரும் போனிலும் இதே பிரச்சனை வருவதாக கூறி புலம்புகின்றனர்.

ஒருசிலருக்கோ செல்ஃபி கேமராவில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பன்ச் ஹோல் (punch hole) செல்பி கேமரா என கூறிவிட்டு அதன் வடிவமே வித்தியாசமாக இருப்பதாக கூறி சிலர் புலம்பி வருகின்றனர். இதற்கெல்லாம் நத்திங் நிறுவனம் விளக்கம் அளிக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

The post நத்திங் போனின் மேல் குவியும் பிரச்சனைகள் first appeared on .

]]>