ola https://www.91mobiles.com/tamil Tue, 02 May 2023 10:53:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 181கிமி ரேஞ்ச் தரும் புதிய பேட்டரியை அறிமுகப்படுத்திய ஓலா! https://www.91mobiles.com/tamil/ola-launches-new-battery-packs-of-s1-and-s1-air-electric-scooter/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-launches-new-battery-packs-of-s1-and-s1-air-electric-scooter Fri, 10 Feb 2023 10:34:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5733 ஓலா நிறுவனம் தனது எஸ்1ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்த நிலையில் மக்கள் மத்தியில் அதற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதனால் அதன் விற்பனை படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது.   புதிய பேட்டரி ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஸ்கூட்டரில் எஸ்1 ப்ரோ, எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய வேரியன்ட்களை […]

The post 181கிமி ரேஞ்ச் தரும் புதிய பேட்டரியை அறிமுகப்படுத்திய ஓலா! first appeared on .

]]>

Highlights

  • ஓலா நிறுவனம் தனது ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ஏர் ஆகிய பைக்குகளில் புதிய பேட்டரி பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது 181 கி.மீ ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது.

ஓலா நிறுவனம் தனது எஸ்1ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்த நிலையில் மக்கள் மத்தியில் அதற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதனால் அதன் விற்பனை படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது.

 

புதிய பேட்டரி

ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஸ்கூட்டரில் எஸ்1 ப்ரோ, எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய வேரியன்ட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய வேரியன்ட்களில் புதிய பேட்டரி ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி 8.5 கிலோ வாட் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 181 கி.மீ ரேஞ்சை வழங்கும்.

ரேஞ்ச்

எஸ்1 ஸ்கூட்டரில் அதே மெக்கானிக்கல் மாற்றத்துடன் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஓலா நிறுவனம் தனது எஸ் 1 ஸ்கூட்டரில் 2 கிலோ வாட் பேட்டரியுடன் புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மோட்டாரை பொருத்தவரை அதே 8.5 கிலோ வாட் மோட்டார் தான் இருக்கிறது. ஆனால் இது ஐடிசி ரேஞ்சாக 91 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் இருக்கும்.

 

மைலேஜ்

ஓலா நிறுவனம் எஸ்1 ஏர் ஸ்கூட்டரிலும் 3 விதமான போக்குகளை ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தனையிலும் பொதுவாக மோட்டாரை பொருத்தவரை 4.5 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அனைத்தும் அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த மூன்றுக்கும் பேட்டரி பேக் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். 2 கிலோ வாட் ஹவர், 3 கிலோ வாட் ஹவர் மற்றும் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இருக்கிறது. இதில் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் அதிகபட்சமாக 165 கி.மீ வரை ரேஞ்ச் தரும். அதுவே 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. 125 கி.மீ வரை ரேஞ்ச் தரும். இறுதியாக 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. 85 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை

தற்போது ஓலா நிறுவனத்திடம் எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 3 பேக்குகள். எஸ்1 ஸ்கூட்டரில் 2 பேக்குகள், எஸ்1 ப்ரோவில் 1 ஸ்கூட்டர் என மொத்தம் 6 விதமான ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் தற்போது மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமல்ல ஓலா நிறுவனம் இந்த ஸ்கூட்டர்களுக்கான விலை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. எஸ்1 ஏர் 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடனான ஸ்கூட்டர் ரூ84,999 என்ற விலையிலும், 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ99,999 என்ற விலையிலும், 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ1,09,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இதுவே எஸ்1 ஸ்கூட்டரை பொருத்தவரை 2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ99,999 என்ற விலையிலும், 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ1,09,999 என்ற விலையிலும், எஸ்1 ப்ரோ என்ற 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ1,29,999 என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலையெல்லாம் பெங்களூரு எக்ஸ் ஷோரூம் விலையாகும். மொத்தத்தில் புதிதாக 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஓலா ஸ்கூட்டரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

அப்கிரேடு

எஸ்1 ஏர் ஸ்கூட்டர்களுக்கான அனைத்து பேட்டரி பேக் வேரியன்ட்களுக்கான புக்கிங்கும் துவங்கிவிட்டது. ஆனால் இந்த ஸ்கூட்டர்கள் எல்லாம் ஜூலை மாதம் தான் விற்பனைக்கு வரவுள்ளன. இதற்கு முன்னர் 2.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் எஸ்1 ஏர் ஸ்கூட்டரை ரிசர்வ் செய்தவர்களுக்கு இலவசமாக 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் அப்கிரேடு செய்யப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post 181கிமி ரேஞ்ச் தரும் புதிய பேட்டரியை அறிமுகப்படுத்திய ஓலா! first appeared on .

]]>
குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடுகிறதா ஓலா? https://www.91mobiles.com/tamil/ola-electric-new-product-launch-february-9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-electric-new-product-launch-february-9 Fri, 03 Feb 2023 08:34:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5538 இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.   விலை இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air), ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஓலா எஸ்1 […]

The post குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடுகிறதா ஓலா? first appeared on .

]]>

Highlights

  • ஓலா நிறுவனம் வரும் வரும் பிப்ரவரி 9ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  • அது ஓலாவின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

 

விலை

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air), ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) என 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 84,999 ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,09,999 ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,39,999 ரூபாய் ஆகவும் உள்ளது

அறிவிப்பு

இந்த சூழலில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து முக்கியமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவரது அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 9ம் தேதி மதியம் 2 மணிக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது.

 

குறைந்த விலை ஸ்கூட்டர்

அது என்ன அறிவிப்பு என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த ட்வீட் உடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படம் ஒன்றை பாவிஷ் அகர்வால் பதிவிட்டுள்ளதை வைத்து பார்க்கையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வரும் பிப்ரவரி 9ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், அது மிகவும் விலை குறைவானதாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டி

தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் மிகவும் விலை குறைவானதாக உள்ளது. இதைக்காட்டிலும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் மூலம் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சி செய்யலாம்.

எதிர்பார்ப்பு

தற்போதைய நிலையில் ஒரு பிரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், பெட்ரோல் ஸ்கூட்டரையும் ஒப்பீட்டிற்கு எடுத்து கொண்டால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைதான் அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 9ம் தேதி மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் களமிறக்கலாம். எனவே வரும் பிப்ரவரி 9ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் என்ன அறிவிப்பை வெளியிட போகிறது? என்ன தயாரிப்பை களத்தில் இறக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

The post குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடுகிறதா ஓலா? first appeared on .

]]>
15 நிமிடத்தில் 50 கிமீ! புதிய சாப்ட்வேர் அப்டேட்டை வழங்கிய ஓலா! https://www.91mobiles.com/tamil/move-os-update-3-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=move-os-update-3-features Tue, 27 Dec 2022 07:12:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4575 அப்டேட் பெற்ற ஓலா எஸ் 1 இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா உருவெடுத்துள்ளது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பல முயற்சிகளை அது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மூவ்-ஓஎஸ் 3 அப்டேட் செய்யப்பட்ட எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஃபேக்டரியில் இருந்து உற்பத்தி செய்து வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது விற்பனையில் இருக்கும் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலைக் காட்டிலும் இந்த அப்டேட்டைக் கொண்டிருக்கும் எஸ்1 எலெக்ட்ரிக் அதிக […]

The post 15 நிமிடத்தில் 50 கிமீ! புதிய சாப்ட்வேர் அப்டேட்டை வழங்கிய ஓலா! first appeared on .

]]>

Highlights

  • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் மூவ் ஓஎஸ் 3 அப்டேட் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • இந்த அப்டேட் மூலம் 15 நிமிடத்தில் 50 கிலோமீட்டர் செல்வதற்கான சார்ஜை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட் பெற்ற ஓலா எஸ் 1

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா உருவெடுத்துள்ளது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பல முயற்சிகளை அது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மூவ்-ஓஎஸ் 3 அப்டேட் செய்யப்பட்ட எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஃபேக்டரியில் இருந்து உற்பத்தி செய்து வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது விற்பனையில் இருக்கும் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலைக் காட்டிலும் இந்த அப்டேட்டைக் கொண்டிருக்கும் எஸ்1 எலெக்ட்ரிக் அதிக திறன்மிக்கதாக இருக்கும்

டெலிவரி துவங்கியது

மூவ்-ஓஸ் 3 அப்டேட்டை பெற்று இருக்கும் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், அதிக ரேஞ்ஜ், சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் அதிக ஃபீச்சர்களைக் கொண்டதாக இருக்கும். இந்த அப்டேட்டட் வெர்ஷனை ஓலா நிறுவனம் தீபாவளிக்கு முன்னரே விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வரை அது விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. இப்போதே உற்பத்தி ஆலையில் மூவ்-ஓஸ் 3 சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்ட எஸ்1-இன் உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளன. இதன் டெலிவரி பணிகளும் இந்த வாரம் முதலே தொடங்கப்பட்டு இருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஒரு வருட காலத்திற்குள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மேற்கொள்ளும் மூன்றாவது சாப்ட்வேர் அப்டேட் இதுவாகும். இதன் வாயிலாக ஓலா தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவும், தங்களது தயாரிப்புகளை மேம்படுத்துவதிலும் துரிதமான வேகத்தில் செயல்பட்டு வருவது தெளிவாக தெரிகின்றது.

50 புதிய வசதிகள்

இந்த அப்டேட்டை ஏற்கனவே நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருபவர்களாலும் பெற்றுக் கொள்ள முடியும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக 50 க்கும் மேற்பட்ட புதிய வசதிகளை ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

15 நிமிடங்களில்.. 50கிமீ!

குறிப்பாக, ஹைப்பர் சார்ஜிங் வசதியை வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இந்த வசதி வாயிலாக 50 கிமீ பயணத்தை வெறும் 15 நிமிட சார்ஜிலேயே பெற்றுக் கொள்ள முடியும். ஆஃபிஸ் சென்று வர மட்டுமே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி வர பிரசாதமாக இருக்கும். முன்னாடியே சார்ஜ் போட மறந்துவிடுபவர்கள் குளிக்க செல்லும் முன் சார்ஜ் போட்டால் போதும். கிளம்பி தயாராகுவதற்குள் 50 கிமீ பயணத்திற்கான சார்ஜை இது ஏற்றிக் கொள்ளும்.

200 நாட்கள் வரை சார்ஜ் இருக்கும்

இதுதவிர, ஆக்டீவ் ரீஜென் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த அப்டேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இது இழக்கப்படும் மின்சாரத்தை லேசாக மீட்டெடுக்க உதவும். இவற்றுடன், வேகேஷன் மோட் சிறப்பு மோட் ஒன்று இந்த அப்டேட் வாயிலாக வழங்கப்பட்டிருக்கின்றது. இது 200 நாட்கள் வரை சார்ஜே இல்லாமல் நிறுத்தி வைக்க உதவும். வெளி ஊர்களுக்கு நீண்ட நாட்கள் சுற்றுலா செல்ல நேர்ந்தால் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்து செல்லலாம். இதன் வாயிலாக பேட்டரி பழுதாகுதலை தவிர்க்க முடியும்.

ஓனர் வந்தா அன்லாக் ஆகும்!

மேலும், ஹில் ஹோல்டு சிஸ்டம் இந்த அப்டேட் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இது சாய்வான பாதையில் பயணிக்கும்போது வாகனம் பின்னோக்கி செல்லாமல் இருக்க உதவியாக இருக்கும். இவற்றும், மல்டிபிள் புரஃபைல் கிரியேட்டிங் வசதி, ப்ராக்ஸிமிட்டி லாக் மற்றும் அன்லாக் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. உரிமையாளர் அருகில் வாந்தாலே தானாகவே அன்லாக் செய்யும் வசதி இதுவாகும். இதற்கு உரிமையாளரின் செல்போன் அவசியம். இது இருசக்கர வாகனத்துடன் இணைத்திருக்க வேண்டும். இத்துடன், ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் Wi-Fi இணைப்பு வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற எக்கசக்கமான இணைப்பு வசதிகள் மூவ் ஓஎஸ் 3 அப்டேட் வாயிலாக ஓலா அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் வழங்கியிருக்கின்றது.

அதுக்கும் மேல..

மேலே பார்த்த அம்சங்களோடு அப்டேட்டின் லிஸ்ட் முடியவில்லைங்க. டிஜிட்டல் கன்சோல், மியூசிக் மோட், ப்ளூடூத் இணைப்பு, செல்போனுக்கு வரும் அழைப்பை காண்பிக்கும் வசதி, ஆதார் போன்ற முக்கிய ஆவணங்களை சேமித்து வைக்கும் வசதி போன்றவையும் இந்த அப்டேட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.

The post 15 நிமிடத்தில் 50 கிமீ! புதிய சாப்ட்வேர் அப்டேட்டை வழங்கிய ஓலா! first appeared on .

]]>
ஓலா ஸ்கூட்டரை பரிந்துரைத்தால் ரூ4500 உங்களுக்கு கிடைக்கும்! https://www.91mobiles.com/tamil/ola-announced-a-referral-program-where-anyone-can-get-rupees-4500-cash-back/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-announced-a-referral-program-where-anyone-can-get-rupees-4500-cash-back Thu, 08 Dec 2022 07:34:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4170 இப்போ ஓலா ஸ்கூட்டரை உங்க ப்ரெண்ட்ஸ்க்கோ, சொந்தங்களுக்கோ சிபாரிசு பண்ணுனா உங்களுக்கு ரூ4500 வரை கிடைக்கும். ஓலா நிறுவனம் தனது விற்பனையை அதிகப்படுத்த மக்களுக்குப் பரிந்துரை செய்யும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் ஒருவர் ரூ4500 வரை சம்பாதிக்க முடியும். எப்படி? பார்க்கலாம். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா, இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக மாதம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றனர்.தொடர்ந்து பலர் […]

The post ஓலா ஸ்கூட்டரை பரிந்துரைத்தால் ரூ4500 உங்களுக்கு கிடைக்கும்! first appeared on .

]]>

இப்போ ஓலா ஸ்கூட்டரை உங்க ப்ரெண்ட்ஸ்க்கோ, சொந்தங்களுக்கோ சிபாரிசு பண்ணுனா உங்களுக்கு ரூ4500 வரை கிடைக்கும்.
ஓலா நிறுவனம் தனது விற்பனையை அதிகப்படுத்த மக்களுக்குப் பரிந்துரை செய்யும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் ஒருவர் ரூ4500 வரை சம்பாதிக்க முடியும். எப்படி? பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா, இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக மாதம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றனர்.தொடர்ந்து பலர் ஓலா நிறுவனத்தின் எலெக்டரிக் ஸ்கூட்டரை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். இந்த ஸ்கூட்டரின் லுக் உள்ளிட்ட விஷயங்கள் மக்களுக்குப் பிடித்துப்போக இந்த ஸ்கூட்டரின் அறிமுகத்திற்கு முன்பே இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ரூ 4500 எப்படி கிடைக்கும்?

தற்போது ஓலா நிறுவனம் மார்கெட்டில் ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான புக்கிங்கை மட்டும் செய்து வருகிறது விரைவில் அந்த ஸ்கூட்டரும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்1 ஏர் ஸ்கூட்டர் விலை குறைந்த ஸ்கூட்டர் என்பதால் இந்த ஸ்கூட்டர் விற்பனை துவங்கியதும், ஓலா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தனது விற்பனையை மேலும் அதிகரிக்க ஓலா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கான பரிந்துரை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி ஓலா ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் தனது நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு ஓலா ஸ்கூட்டரை பரிந்துரை செய்யலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

பரிந்துரை

இதற்காக ஓலா நிறுவனத்தின் இணையதளத்தில் பிரத்தியேக பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பரிந்துரையைச் செய்யலாம். அதன்படி ஒருவர் அதிகபட்சமாகத் தனது நண்பர்கள் உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் பரிந்துரையைச் செய்யலாம் ஆனால் அதிகபட்சமாக 3 பேரை மட்டுமே பரிந்துரை பட்டியலில் வைக்க முடியும். அவர்கள் ஓலா எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கினால் அந்த பரிந்துரைக்குச் சன்மானமாக ரூ1500 வழங்கப்படும். இப்படியாகப் பரிந்துரையின் மூலம் மட்டுமே ஒருவர் அதிகபட்சம் ரூ4500 பணத்தைப் பெற முடியும்.

இணையதளம்

இந்த பரிந்துரையைச் செய்ய https://olaelectric.com/referrals என்ற தளத்தில் பதிவு செய்யலாம். அங்கு உங்கள் செல்போன் எண்ணைப் பதிவிட்டால் ஓடிபி வரும். அதன் மூலம் உங்கள் நம்பரை வெரிஃபை செய்துவிடுங்கள். அதன்பின் நீங்கள் பரிந்துரை செய்ய நினைக்கும் மூன்று நபர்களின் விபரங்களை அதில் பதிவிட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் பரிந்துரை செய்தவர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் அதன் மூலம் ஒரு நபருக்கு ரூ1500 விதம் மொத்தம் ரூ4500 பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடல்கள்

ஓலா நிறுவனம் தற்போது மார்கெட்டில் ஓலா எஸ்1 ப்ரோ, எஸ்1 மற்றும் எஸ் 1 ஏர் ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கடந்த 2021ம் ஆண்டு எஸ்1 ப்ரோ என்ற முதல் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்கூட்டரை அறிமுகமான 1 ஆண்டிற்குப் பின்னர் எஸ்1 என்ற அடுத்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த தீபாவளியின் போது எஸ்1 ஏர் என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இதில் எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 ஆகிய ஸ்கூட்டர்கள் மட்டும் விற்பனையாகி வருகிறது. எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான புக்கிங் மட்டுமே நடந்து வருகிறது. இந்த ஸ்கூட்டருக்கான விற்பனை ஜனவரி மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் ரூ1.39 லட்சம் என்ற விலையிலும், ஓலா எஸ்1 ஸ்கூட்டர் ரூ99.999 என்ற விலையிலும், ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர் ரூ84,999 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. நீங்க ஓலா ஸ்கூட்டரை புக் பண்ணபோறீங்களா? பரிந்துரைக்கப் போறீங்களா?

The post ஓலா ஸ்கூட்டரை பரிந்துரைத்தால் ரூ4500 உங்களுக்கு கிடைக்கும்! first appeared on .

]]>
ஓலாவுல எலக்ட்ரிக் பைக்கும் வரப்போகுது! https://www.91mobiles.com/tamil/ola-plans-to-launch-electric-motorcycle-next-year/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-plans-to-launch-electric-motorcycle-next-year Mon, 14 Nov 2022 07:37:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3597 ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து எலெக்ட்ரிக் பைக்கையும் தயாரிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் எஸ்1 ப்ரோ, எஸ்1, எஸ்1 ஏர் ஆகிய 3 ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் எலெக்ட்ரிக் பைக்கையும் உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஓலா திட்டம்! தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்துவரும் நிறுவனம் […]

The post ஓலாவுல எலக்ட்ரிக் பைக்கும் வரப்போகுது! first appeared on .

]]>

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து எலெக்ட்ரிக் பைக்கையும் தயாரிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் எஸ்1 ப்ரோ, எஸ்1, எஸ்1 ஏர் ஆகிய 3 ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் எலெக்ட்ரிக் பைக்கையும் உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஓலா திட்டம்!

தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்துவரும் நிறுவனம் ஓலா. இந்நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் சமீபத்தில் தனது ட்விட்டரில் ஓலா பைக்கை தயாரித்தால் ஸ்போர்ட்ஸ் பைக், க்ரூஸர் பைக், அட்வெஞ்சர் பைக் அல்லது கஃபே ரேசர் ஆகிய செக்மெண்டில் எதில் பைக்கை தயாரிக்க வேண்டும் என ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டிருந்தார். அப்பொழுது முதலே ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்கும் எண்ணத்தில் இருப்பது தெரிய வந்தது.

ஒண்ணு இல்ல.. மூணு!

இந்நிலையில் தற்போது ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் மாஸ் மார்கெட் பைக், மிட்-செக்மெண்ட் பைக், மற்றும் பிரிமியம் பைக் ஆகிய 3 செக்மெண்டிலும் தனித்தனியாக பைக்ககளை தயாரிப்பது முடிவாகியுள்ளது. கூடவே ஓலா நிறுவனம் தனது இந்த பைக்குகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்திவிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிறுவனம் கடந்த தீபாவளியை முன்னிட்டு ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அப்பொழுது அந்நிறுவனத்தின் சிஇஓ அகர்வால் “அடுத்த 12 மாதத்திற்குள் ஓலா நிறுவனம் டூவீலர் செக்மெண்டில் ஸ்கூட்டர் மட்டுமல்லாமல் பைக் மற்றம் ஸ்போர்ட்ஸ் பைக்கை உருவாக்கும், மக்கள் கம்பஷன் இன்ஜினிலிருந்து மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிவிடுவர்”என கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தற்போது எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

காருக்கு முன்னமே..

ஏற்கனவே எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வரும் நிலையில் எலெக்ட்ரிக் கார் வரும் 2025ம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் தற்போது மக்களின் எதிர்பார்ப்பு ஓலா எலெக்டரிக் காரை காட்டிலும் ஓலா எலெக்ட்ரிக் பைக்கில் அதிகமாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஓலா நிறுவனம் கடந்த ஆக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 20 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து புதிய சாதனை ஒன்றை படைத்தது. இது மட்டுமல்ல ஒலா நிறுவனம் சமீபத்தில் தனது 1 லட்சமாவது ஸ்கூட்டரையும் தயார் செய்து சாதனையை படைத்தது. இந்நிலையில் ஒலா நிறுவனம் அடுத்தாண்டு அதாவது 2023ம் ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஓலாவுல எலக்ட்ரிக் பைக்கும் வரப்போகுது! first appeared on .

]]>
ஆண்டுக்கு ஒரு கோடி ஸ்கூட்டர்: ஓலாவின் மெகா திட்டம்! https://www.91mobiles.com/tamil/ola-electric-to-ramp-up-production-capacity/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-electric-to-ramp-up-production-capacity Thu, 27 Oct 2022 05:51:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3254 ஆண்டுக்கு ஒரு கோடி ஸ்கூட்டரை தயாரிக்கும் மெகா திட்டம் இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் போட்டியாளர்களின் அடி வயிறை கலங்க வைத்துள்ளார். இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருப்பது இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இதுதவிர சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அதிகரித்து வரும் விழிப்புணர்வும், மக்களை எலெக்ட்ரிக் […]

The post ஆண்டுக்கு ஒரு கோடி ஸ்கூட்டர்: ஓலாவின் மெகா திட்டம்! first appeared on .

]]>

ஆண்டுக்கு ஒரு கோடி ஸ்கூட்டரை தயாரிக்கும் மெகா திட்டம் இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் போட்டியாளர்களின் அடி வயிறை கலங்க வைத்துள்ளார். இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருப்பது இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இதுதவிர சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அதிகரித்து வரும் விழிப்புணர்வும், மக்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நோக்கி நகர வைத்துள்ளது.

ஓலா ஸ்கூட்டர் வேரியண்ட்கள்

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. எஸ்1 (S1), எஸ்1 ப்ரோ (S1 Pro) மற்றும் எஸ்1 ஏர் (S1 Air) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அமோக ஆதரவை வாடிக்கையாளர்கள் வழங்கி வருகின்றனர்.

உற்பத்தியை அதிகரிக்க முடிவு

எனவே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் தனது தொழிற்சாலையின் திறனை அதிகரிப்பதற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதை மேலும் அதிகரிப்பதற்கு ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தற்போது இருப்பதை காட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலை

எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, தனது தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி கொடுக்க முடியும். தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 20 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை தயாரிக்க முடியும். கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, இந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 1 கோடி எலெக்ட்ரிக் டூவீலர்களாக இருக்கும்.

குறைந்த விலையில் ஓலா ஸ்கூட்டர்

உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், தனது தயாரிப்புகளின் எண்ணிக்கையையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எஸ்1 ஏர் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய மாடலின் விலை 79,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.5kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் பைக்குகளையும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதவிர ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரிக் கார்களும் கூட வரவிருக்கின்றன. எனவே வரும் காலங்களில் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

போட்டி நிறுவனங்கள்

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஏத்தர் எனர்ஜி, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக இருக்கின்றன. இதுதவிர இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் கால்தடம் பதிக்க தயாராகி வருகின்றன.

The post ஆண்டுக்கு ஒரு கோடி ஸ்கூட்டர்: ஓலாவின் மெகா திட்டம்! first appeared on .

]]>
பட்ஜெட்விலையில் அறிமுகமாகிறதா ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? https://www.91mobiles.com/tamil/ola-launches-new-s1-air-electric-scooter-and-move-os-3-full-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-launches-new-s1-air-electric-scooter-and-move-os-3-full-details Tue, 25 Oct 2022 05:46:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3178 ஓலா நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு தனது மூவ் ஓஎஸ் 3 மற்றும் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய 2 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓலா நிறுவனம் எப்பொழுது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்குள் இறங்கியதோ அப்பொழுது முதல் இந்தியாவில் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகமாகவிட்டது. ஓலா எஸ்1 ஏர் இன்று எலெக்டரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அந்நிறுவனம் […]

The post பட்ஜெட்விலையில் அறிமுகமாகிறதா ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? first appeared on .

]]>

ஓலா நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு தனது மூவ் ஓஎஸ் 3 மற்றும் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய 2 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனம் எப்பொழுது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்குள் இறங்கியதோ அப்பொழுது முதல் இந்தியாவில் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகமாகவிட்டது.

ஓலா எஸ்1 ஏர்

இன்று எலெக்டரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. எஸ்1 ப்ரோவை விட சில மாறுதல்களுடன் குறைந்த விலையில் எஸ்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இந்த ஸ்கூட்டரையும் விற்பனைக்குக் கொண்டு வந்தது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு தனது புதிய தயாரிப்பு ஒன்றை 22ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. இதற்கான நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கோரமங்கலாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓலா நிறுவனம் மூவ் ஓஎஸ்3 -யை அறிமுகப்படுத்தலாம், குறைந்த விலையில் மற்றொரு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தலாம் எனப் பலர் பல எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சி ஆன் லைன் மூலம் நடத்தப்பட்டது. இதில் பேசிய ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் ஆலா நிறுவனத்தின் ஓலா மூவ் ஓஎஸ் 3 குறித்து விவரித்தார். இதில் முக்கிய அப்டேட்டாக. ப்ராக்ஸிமிட்டி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் ஸ்கூட்டர் அருகே வந்தால் அது தானாக அன் லாக் ஆகிவிடும். தள்ளிச் சென்றால் மீண்டும் லாக் ஆகிவிடும்.

வசதிகள்

இது போக இந்த ஸ்கூட்டரின் லைட்கள் ஸ்கூட்டரில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஏற்ப மாறி மாறி எரியும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது போக இந்த ஓஎஸ்களில் விட்ஜெட் உள்ளிட்டபல முக்கிய அம்சங்கள் இருக்கிறது. இது போக இந்த ஸ்கூட்டரில் ஹைப்பர் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது. இந்த சார்ஜரில் 15 நிமிடம் சார்ஜ் போட்டாலே 50 கி.மீ வரை பயணிக்கலாம். அதாவது கிட்டத்தட்ட ஒரு நிமிடம் சார்ஜ் போட்டால் 3 கி.மீ வரை பயணிக்கலாம்.

இந்த மூவ் ஓஎஸ் 3 இபீட்டா வெர்ஷன் ன்று (அக்டோபர் 25ம் தேதி) வெளியிடப்படுகிறது. இது வரும் டிசம்பர் மாத துவங்கத்தில் மற்ற அனைத்து எஸ்1 ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது போக எஸ்1 ஸ்கூட்டர்களில் இனி சென்டர் ஸ்டாண்ட் மற்றும் லேடீஸ் ஃபுட் ரெஸ்ட் ஸ்டாண்ட் ஆகியவற்றைப் பொருத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டரைவாங்கியவர்கள் இதைத் தனியாக வாங்கி பொருத்திக்கொள்ளலாம். இதை ஓலா ஆப் அல்லது வெப்சைட்டில் வாங்கலாம்.

புதிய வாடிக்கையாளர்களைக் கவர ஓலா நிறுவனம் இலவச ட்ரையலை அறிவித்துள்ளது. அதன்படி இந்த வாகனம் வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்தை வாங்கி 24 மணிநேரம் அவர்கள் டெஸ்ட் செய்து கொள்ளலாம். இது முதற்கட்டமாக 20 நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. நவம்பர் 7ம் தேதிக்குள் 40 நகரங்களுக்கு இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும்.

நிறம் & எடை

அடுத்த முக்கிய அப்டேட்டாக ஓலா நிறுவனம் தற்போது ஓலா எஸ்1 ஏர் என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனேவ எஸ்1 ப்ரோ, எஸ்1 ஆகிய 2 ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில் ஓலா நிறுவனம் தற்போது அதை விடக் குறைந்த விலையில் எஸ்1 ஏர் என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டர் எஸ்1 ஸ்கூட்டரின் அதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்கூட்டர் 2 டோல் பாடி கலரில் கிடைக்கிறது. நியோ மிண்ட், ஜெட்பிளாக், கொரல் கிளாம், ப்ரோகிளியன் ஒயிட், லிக்யூட் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் எஸ்1 ப்ரோவை விட 25 கிலோ எடை குறைவானது. இந்த ஸ்கூட்டர் மொத்தமே 99 கிலோ எடை கொண்டது தான். இதனால் இந்த ஸ்கூட்டரை வேகமாகவும், சுலபமாகவும் கையாள முடியும் என அந்நிறுவனம் கூறுகிறது.

திறன்

இந்த எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 4.5 கி.லோ வாட் ஹப் மோட்டார், 2.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 85 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 4.3 நொடியில் 0-40 கி.மீ வேகத்தை எட்டி பிடிக்கும் திறன் கொண்டது. இந்த பைக் முழு சார்ஜில் முழுவதுமாக எக்கோ மோடில் பயணித்தால் 100 கி.மீ வரை ரேஞ்ச் தரும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் சீட்டிற்கு அடியில் 34 லிட்டர் இட வசதி இருக்கிறது.

விலை

இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் துவங்கிவிட்டது. வெறும் 999 ரூபாய் கொடுத்து இந்த ஸ்கூட்டரை புக் செய்து கொள்ளமுடியும். இந்த ஸ்கூட்டருக்கான பர்ச்சேஸ் விண்டோ 2023 ஜனவரி மாதம் துவங்குகிறது. இதற்கான டெலிவரி 2023 ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ84,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.

The post பட்ஜெட்விலையில் அறிமுகமாகிறதா ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? first appeared on .

]]>
ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது குறைந்த விலை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர். https://www.91mobiles.com/tamil/affordable-ola-electric-scooter-launch-date/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=affordable-ola-electric-scooter-launch-date Mon, 10 Oct 2022 10:34:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2888 குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா அறிமுகம் செய்ய இருக்கிறது. அதற்கான தேதியும் வெளியாகி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சமீப காலமாக எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மற்றும் […]

The post ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது குறைந்த விலை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர். first appeared on .

]]>

குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா அறிமுகம் செய்ய இருக்கிறது. அதற்கான தேதியும் வெளியாகி இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சமீப காலமாக எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மற்றும் எஸ்1 (Ola S1) என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், ஓலா எஸ்1 ப்ரோ மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதன் விலை 1.40 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இதில், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்றுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இவை இரண்டுமே மிகவும் விலை உயர்ந்த தயாரிப்புகளாக கருதப்படுகின்றன. இதனியடுத்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாதத்தின் இறுதியில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டது. இந்த சூழலில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் அக்டோபர் 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் இதனை உறுதி செய்துள்ளார்.

பாவிஷ் அகர்வால் தற்போது தனது அதிகாரப்பூர்வமான சமூக வலை தள பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘அதில், ‘எங்களது தீபாவளி நிகழ்ச்சி வரும் அக்டோபர் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இது ஓலா நிறுவனத்தின் மிகப்பெரிய அறிவிப்புகளில் ஒன்று. உங்களை விரைவில் சந்திக்கிறோம்” என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் ஓலா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் அக்டோபர் 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 80 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மிகவும் விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை இந்த புதிய ஸ்கூட்டர் பெறவுள்ளது.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ள காரணத்தால், வாடிக்கையாளர்கள் பலரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் பிரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த குறையை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இது இந்தியாவின் மிகவும் விலை குறைவான பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் மிகப்பெரிய அளவில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகளும் கூட இருக்கின்றன.

The post ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது குறைந்த விலை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர். first appeared on .

]]>
நிமிடத்திற்கு ஒரு ஸ்கூட்டர் விற்ற ஓலா https://www.91mobiles.com/tamil/ola-electric-registers-4-time-sales-growth-in-navratri/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-electric-registers-4-time-sales-growth-in-navratri Fri, 07 Oct 2022 07:55:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2850 முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா, நவராத்திரி கொண்டாட்டத்தின் போது சிறப்பான விற்பனையைப் பெற்று இருக்கிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ஸ்கூட்டரை விற்பனை செய்துள்ளனர். இது குறித்த முழு விபரங்களைப் பார்க்கலாம். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் கடந்தாண்டு விற்பனைக்குக் கொண்டு வந்த ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டருக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை விரும்பி வாங்குகின்றனர். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் துவங்கப்பட்டபோது வழக்கமான டீலர் […]

The post நிமிடத்திற்கு ஒரு ஸ்கூட்டர் விற்ற ஓலா first appeared on .

]]>

முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா, நவராத்திரி கொண்டாட்டத்தின் போது சிறப்பான விற்பனையைப் பெற்று இருக்கிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ஸ்கூட்டரை விற்பனை செய்துள்ளனர். இது குறித்த முழு விபரங்களைப் பார்க்கலாம்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் கடந்தாண்டு விற்பனைக்குக் கொண்டு வந்த ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டருக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை விரும்பி வாங்குகின்றனர்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் துவங்கப்பட்டபோது வழக்கமான டீலர் ஷிப் முறையில் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் ஆன்லைன் முறையில் விற்பனை செய்தது. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான மக்கள் ஆன்லைனிலேயே இந்த ஸ்கூட்டர்களை புக் செய்யத் துவங்கினர். இந்த ஸ்கூட்டர்களை வாங்கியவர்களின் வீடுகளுக்கே சென்று ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்பட்டது.

இந்நிலையில் சில வாடிக்கையாளர்கள் நேரடியாக ஸ்கூட்டரை பார்த்து வாங்கும் அனுபவம் இல்லாததைக் குறையாகக் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து ஓலா நிறுவனம் நாட்டின் பல இடங்களில் எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை திறந்தது. இங்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாகனத்தை ஓட்டிப்பார்த்து இந்த ஸ்கூட்டரை புக் செய்யலாம் என அறிவித்தனர்.
இதனையடுத்து தற்போது ஓலா எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களுக்கு மக்கள் வந்து வானகத்தை ஓட்டி பார்த்து புக் செய்கின்றனர். இந்நிலையில் ஓலா நிறுவனம் நவராத்திரியை முன்னிட்டு தனது வாகனங்களுக்கு ரூ10 ஆயிரம் தள்ளுபடியை அறிவித்தது. இது பண்டிகை காலம் என்பதால் பலர் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாக ஆட்டோமொபைல் துறைக்குத் தீபாவளியை ஒட்டித்தான் விற்பனையில் அதிகரிக்கும்.

இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு தள்ளுபடி அறிவித்தவுடன் விற்பனை குவியத் துவங்கியது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அதிகாரி அனுஷல் கான்தல்வால் கூறும் போது, “இந்த நவராத்திரி காலத்தில் விற்பனை 4 மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு 3 விஷயங்கள் தான் முக்கியமான காரணம். முதல் விஷயம் இந்த கேட்டகிரியிலேயே சிறந்த ஸ்கூட்டரை ஓலா விற்பனை செய்கிறது, இரண்டாவது, கஸ்டமருக்காக திறக்கப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் செண்டர், மூன்றாவது ஃபைனான்ஸ் சலுகைகளை அறிவித்தது. இது முதன் முறையாக ஸ்கூட்டர் வாங்குபவர்கள் அல்லது பெட்ரோல் ஸ்கூட்டரிலிருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற நினைப்பவர்களுக்கு உதவும். இந்த அக்டோபர் மாத விற்பனை வெகு சிறப்பாக இருக்கும்” எனக் கூறினார்.

இந்த நவராத்திரி காலத்தில் ஓலா ஸ்கூட்டர்களை பலர் வாங்கியுள்ளனர். இந்த விற்பனை, ஆன்லைன் மற்றும் அந்நிறுவனம் இந்தியா முழுவதும் 20 இடங்களில் வைத்துள்ள, எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்கள் மூலம் நடந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு ஒரு ஸ்கூட்டர் என்ற ரீதியில் விற்பனையாகியுள்ளது. ஓலா நிறுவனம் 2023ம் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் மொத்தம் 200 எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை திறக்க முடிவு செய்துள்ளது.

ஓலா நிறுவனம் கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் தேதி தனது முதல் ஸ்கூட்டரான ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி அதைக் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. பலருக்கு இந்த ஸ்கூட்டரை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது. பலர் இந்த ஸ்கூட்டரை வாங்கும் மன நிலைக்கு வந்து இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்ததும் புக் செய்யத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகி 1 ஆண்டு ஆன நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

இந்த இரண்டு ஸ்கூட்டர்களையும் ஓலா நிறுவனம் தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்த இருண்டு ஸ்கூட்டர்களுக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போது ரூ10,000 தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் குறைந்த வட்டியில் கடன் வசதி, புக் செய்த 7 நாளில் டெலிவரி உள்ளிட்ட பல வசதிகளை இந்நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

The post நிமிடத்திற்கு ஒரு ஸ்கூட்டர் விற்ற ஓலா first appeared on .

]]>
200 ஷோரூம்களை திறக்கிறது ஓலா https://www.91mobiles.com/tamil/ola-plans-to-open-200-experience-centers-by-2023-march/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-plans-to-open-200-experience-centers-by-2023-march Fri, 23 Sep 2022 09:43:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2563 இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா, இந்நிறுவனம் தற்போது ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்தாண்டு இறுதியில் தனது ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்த நிலையில் கடந்த மாதம் தனது ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த இரண்டு ஸ்கூட்டர்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்துவந்த நிலையில் […]

The post 200 ஷோரூம்களை திறக்கிறது ஓலா first appeared on .

]]>

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா, இந்நிறுவனம் தற்போது ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்தாண்டு இறுதியில் தனது ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்த நிலையில் கடந்த மாதம் தனது ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த இரண்டு ஸ்கூட்டர்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்துவந்த நிலையில் இந்த நிதியாண்டிற்குள் நாடு முழுவதும் 200 ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

நேரடி விற்பனை

பொதுவாக இந்தியாவில் வாகன விற்பனையாளர்கள் தங்கள் வாகனங்களை ஒவ்வொரு நகரங்களிலும் ஷோரூம்கள் அமைத்து அந்த ஷோரூம் மூலமே விற்பனையைச் செய்வார்கள். ஆனால் ஓலா நிறுவனம் இந்த முறையை மாற்றி நேரடியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கே தங்கள் வாகனங்களை நேரடியாக விற்பனை செய்தது. இதற்காக அந்நிறுவனம் தனது வெப்சைட் மூலமும் ஆப் மூலமும் தனது விற்பனையை நடத்தி வருகிறது.

ஓலா எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்

முற்றிலும் மாறுபட்ட சப்ளை செயின் மாடலில் தனது விற்பனையை அதிகப்படுத்தி இந்த மாடலையும் வெற்றிகரமான மாடலாக மாற்றியது. இந்நிலையில் ஓலா நிறுவனம் சென்னை, சத்தீஷ்கர், பெலகாம், டில்லி, கோலாப்பூர், மங்களூரு, புனே மற்றும் திருச்சூர் ஆகிய நகரங்களில் மொத்தம் 20 ஷோரூம்களையும் இந்நிறுவனம் ஏற்கனவே திறந்து தனது ஷோரூம் மாடல் விற்பனையையும் சமீப காலமாக நடத்தி வருகிறது. இந்த ஷோரூம்களுக்கு “ஓலா எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்” எனப் பெயரிட்டுள்ளது.

இந்த சென்டர் வாரத்தின் 7 நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இங்கு ஓலா எஸ்1 ப்ரோ, மற்றும் ஓலா எஸ்1 ஆகிய ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டர்களை ஓட்டி பார்த்து அதன் செயல்பாடுகளை பணியாளர்கள் மூலம் கேட்டறியலாம்.

3 விதமான புக்கிங்

இந்த ஷோரூமிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது குறித்த தகவல்கள், இதற்கான ஃபைனான்ஸிங் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இங்கு ஸ்கூட்டர்களையும் புக் செய்து கொள்ளலாம். தற்போது ஓலா நிறுவனம் 3 விதமாக வாடிக்கையாளர்களிடம் புக்கிங்கை பெறுகிறது. நேரடியாக ஆன்லைன் மூலம் புக் செய்யலாம், இந்நிறுவனம் அமைத்துள்ள 20 சென்டர்களுக்கு சென்று புக் செய்யலாம். அல்லது இந்த சென்டர்களுக்கு சென்று ஸ்கூட்டர்களை ஓட்டிப்பார்த்து அனுபவத்தைப் பெற்று மீண்டும் ஆன்லைனில் வாங்கலாம்.

200 சென்டர்கள்

தற்போது நாடு முழுவதும் இப்படியான எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை ஓலா நிறுவனம் 20 சென்டர்கள் மட்டுமே வைத்துள்ள நிலையில் இதை வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 200 சென்டர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதாவது முக்கிய மெட்ரோ நகரங்கள் தவிர்த்து டயர் 2 நகரங்களிலும் ஷோரூம்களை அமைக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை அந்நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆன்லைனில் மட்டுமான விற்பனை நல்ல விற்பனையைப் பெற்றாலும் பல வாடிக்கையாளர்கள் ஷோரூம் ரீதியிலான விற்பனையை விரும்புகின்றனர். அவர்கள் தாங்கள் செலவு செய்யும் வாங்கும் தயாரிப்பைக் கண்ணில் பார்த்து ஓட்டிப்பார்த்து வாங்க வேண்டும் என விரும்புகின்றனர் என இதற்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ட்விட்டரில் நடத்திய கருத்துக்கணிப்பில் பலர் ஷோரூம் விற்பனையை விரும்புவது தெரிந்தது.

பலன்கள்

இப்படியாக ஷோரூம்களை திறப்பது வாடிக்கையாளர்களை நேரடியாக ஷோரூமிற்கு சென்று ஸ்கூட்டர் வாங்கிய அனுபவத்தை தர முடியும். குறிப்பாக அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். இது மட்டுமல்ல ஓலா ஸ்கூட்டரை வாங்கிய பலர் வாகனப்பதிவிற்குச் சிரமப்பட்டுள்ளனர். அதனால் இப்படியாக ஷோரூம்களை செட்டப் செய்வது மூலம் பதிவு செய்வதையும் எளிமையாக்க முடியும்.

ஹைப்பர் சார்ஜர் ஸ்டேஷன்

இது மட்டுமல்ல ஓலா நிறுவனம் இந்தியாவில் உள்ள 50 நகரங்களில் 100 ஹைப்பர் சார்ஜர் ஸ்டேஷன்களை வரும் தீபாவளிக்குள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. தனது ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு 5 ஆண்டு வாரண்டியை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவும் யோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓலா ஸ்கூட்டர் தீ பிடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் விற்பனையை வேகமாக அதிகப்படுத்த முடியாமல் அந்நிறுவனம் திணறி வருகிறது. அதைச் சமாளிக்கவே புதிய ஆன்லைன் விற்பனை மட்டும் என்ற திட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஷோரூம்களை அதிகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது என விமர்சனமும் எழுந்துள்ளது.

The post 200 ஷோரூம்களை திறக்கிறது ஓலா first appeared on .

]]>