pixel 7A https://www.91mobiles.com/tamil Tue, 18 Apr 2023 07:34:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Google pixel 7A, Pixel fold மொபைல் வெளியாவதற்கு முன்பே வெளியீட்டு தேதி மற்றும் விலை கசிந்தது. https://www.91mobiles.com/tamil/google-pixel-7a-fold-launch-date-price-tipped/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-7a-fold-launch-date-price-tipped Tue, 18 Apr 2023 07:34:55 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7605   மே 10 ஆம் தேதி I/O 2023 டெவலப்பர் மாநாட்டை Google திட்டமிட்டுள்ளது. அதில் வழக்கம்போல் Android 14 OS ஐ வெளியிடும். கூகுள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரே கட்டத்தில் மலிவு விலையில் Pixel 7a மற்றும் மிகவும் பிரபலமான Pixel Fold ஆகியவற்றை அப்போது அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இதுபற்றி பல வதந்தி தகவல்கள ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. FrontPageTech இன் Jon Prosser, Pixel 7a மற்றும் Pixel Fold எப்போது முன்கூட்டிய […]

The post Google pixel 7A, Pixel fold மொபைல் வெளியாவதற்கு முன்பே வெளியீட்டு தேதி மற்றும் விலை கசிந்தது. first appeared on .

]]>

Highlights

  • கசிவின்படி, Google pixel fold-ஐ மே 10 முதல் ப்ரீ ஆர்டர் செய்து  ஜூன் 27 முதல் பெறலாம்
  • Pixel 7a மே 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Pixel 7a விலை $499 (தோராயமாக ரூ. 41,000 ) இருக்கும்.

 

மே 10 ஆம் தேதி I/O 2023 டெவலப்பர் மாநாட்டை Google திட்டமிட்டுள்ளது. அதில் வழக்கம்போல் Android 14 OS ஐ வெளியிடும். கூகுள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரே கட்டத்தில் மலிவு விலையில் Pixel 7a மற்றும் மிகவும் பிரபலமான Pixel Fold ஆகியவற்றை அப்போது அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இதுபற்றி பல வதந்தி தகவல்கள ஆன்லைனில் வெளியாகி வருகின்றன.

FrontPageTech இன் Jon Prosser, Pixel 7a மற்றும் Pixel Fold எப்போது முன்கூட்டிய ஆர்டர்கள் மற்றும் வாங்குவதற்கு கிடைக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் . தனித்தனியாக, தெரிந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை Pixel 7a இன் விலை விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

Google Pixel 7a மற்றும் Pixel Fold – எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி

Prosser இன் கூற்றுப்படி, Google Pixel Fold மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் Google Store இலிருந்து ப்ரீ ஆடரும் செய்ய முடியும். மே 10 ஆம் தேதி மற்றும் மே 30 ஆம் தேதி விற்பனை பார்ட்னர்கள் மற்றும் கடைகள் மூலம் தொடங்கும். போல்டபிள் போன் ஜூன் 27 முதல் விற்பனைக்கு வரும்.

 

மே 10 ஆம் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே Pixel 7a கிடைக்கும் என்றும், Charcoal, Snow, Sea, and Coral ஆகிய நிறங்களில் (Google Store மட்டும்)வெளிவரும் என்றும் ஜான் கூறுகிறார். Pixel 7a வெளியீட்டிற்குப் பிறகு Google Pixel 6a ஐ நிறுத்தாது என்றும் அறிக்கை கூறுகிறது.

Google Pixel 7a (எதிர்பார்க்கப்படும்) விலை

Pixel 7a விலையைப் பொறுத்தவரை, 9to5Google அறிக்கையானது ஃபோனின் விலை $499 (தோராயமாக ரூ. 41,000) என்று கூறுகிறது. இது Pixel 6a இல் இருந்து $50 அதிகமாகும். ஹார்டுவேர்களில் செய்துள்ல அப்டேட்டை கருத்தில் கொள்ளும் போது இந்த விலை நியாயமானதாகவேத் தெரிகிறது.

 

Pixel 7a (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்

கூகுள் பிக்சல் 7a ஆனது 6.1 அங்குல FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், சமச்சீர் பெசல்கள் மற்றும் மேல் மையத்தில் அமைந்துள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS 3.1 சேமிப்பகத்துடன் டென்சர் ஜி2 சிப்செட்டைக் கொண்டுஇருக்கும்.

Pixel 7a ஆனது 64MP Sony IMX787 சென்சார் மற்றும் 13MP செகண்டரி சென்சார் உடன் வரும். செல்ஃபிக்களுக்காக இந்த போனின் முன்பக்கத்தில் 10.8MP ஸ்னாப்பரை வழங்கலாம். மொபைலின் மீதமுள்ள விவரங்கள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், விரைவில் மேலும் பல விவரங்கள் தெரியவரும்.

பிக்சல் ஃபோல்ட் விவரக்குறிப்புகள், அம்சங்கள் (வதந்தி)

கூகுள் பிக்சல் ஃபோல்ட் 7.57 அங்குல மடிக்கக்கூடிய மெயின் டிஸ்ப்ளேவுடன் வரும். வெளிப்புறத் டிஸ்ப்ளே  5.78 அங்குல பேனலாக இருக்கும். இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் வெளியாகலாம். டென்சர் ஜி2 சிப்செட்டைக் கொண்டு இருக்கும். ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இந்த மொபைல் வெளியாகும்.

கூகுள் பிக்சல் ஃபோல்ட் 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

 

Google Pixel 7A முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Google Tensor G2
  • ரேம் – 8 ஜிபி
  • டிஸ்ப்ளே – 6.1 அங்குலம் (15.49 செமீ)
  • பின் கேமரா – 64 எம்.பி + 12 எம்.பி
  • செல்ஃபி கேமரா – 8 எம்.பி
  • பேட்டரி – 4410 mAh

The post Google pixel 7A, Pixel fold மொபைல் வெளியாவதற்கு முன்பே வெளியீட்டு தேதி மற்றும் விலை கசிந்தது. first appeared on .

]]>
கூகுள் பிக்சல் 7 சீரிஸின் தோற்றதிலேயே இருக்கிறது பிக்சல் 7ஏ. இணையத்தில் வெளியானது புகைப்படங்கள்! https://www.91mobiles.com/tamil/google-pixel-7a-design-ram-storage-details-leaked-live-images/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-7a-design-ram-storage-details-leaked-live-images Mon, 13 Mar 2023 13:54:55 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6824 கூகுள் பிக்சல் 6ஏ மொபைலின் தொடர்ச்சியாக வெளியாக வெளிவர இருக்கும் பிக்சல் 7ஏ மொபைலானது மே 10ஆம் தேதி நடக்க இருக்கும் கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில் முக்கிய டிப்ஸ்டர்கள் தொடர்ந்து இந்த மொபைல் பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டபடி உள்ளனர். அதன்படி தற்போது புதிதாக இந்த மொபைலின் உண்மையான போட்டோக்களை வெளியிட்டு உள்ளனர். இது ஸிங் நியூஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த […]

The post கூகுள் பிக்சல் 7 சீரிஸின் தோற்றதிலேயே இருக்கிறது பிக்சல் 7ஏ. இணையத்தில் வெளியானது புகைப்படங்கள்! first appeared on .

]]>

Highlights

  • அறிமுகத்திற்கு முன்னதாகவே கூகுள் பிக்சல் 7ஏ மொபைலின் லைவ் படங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன
  • இந்த படங்கள் முந்தைய மாடலான பிக்சல் 6ஏ மொபைலைப் போலவே பிக்சல் 7ஏ மாடலும் இருப்பதை காட்டுகிறது.
  • கூகுள் பிக்சல் 7ஏ போன் மே 10ஆம் தேதி நிகழும் கூகுளின் ஐ/ஓ நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கூகுள் பிக்சல் 6ஏ மொபைலின் தொடர்ச்சியாக வெளியாக வெளிவர இருக்கும் பிக்சல் 7ஏ மொபைலானது மே 10ஆம் தேதி நடக்க இருக்கும் கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில் முக்கிய டிப்ஸ்டர்கள் தொடர்ந்து இந்த மொபைல் பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டபடி உள்ளனர். அதன்படி தற்போது புதிதாக இந்த மொபைலின் உண்மையான போட்டோக்களை வெளியிட்டு உள்ளனர். இது ஸிங் நியூஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த போட்டோக்களை பார்க்கும் போதே இது அப்படியே இதன் முந்தைய மாடலை ஒத்து இருப்பதைக் காண முடிகிறது.

மெமரி

இப்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் இந்த பிக்சல் 7ஏ போன் கருப்பு நிறத்தில் இருந்தாலும், இது வெளியாகும் போது பிற நிறத் தேர்வுகளிலும் வெளியாகும். இந்த புகைப்படங்களின் வழியே இந்த போனானது 8 ஜிபி LPDDR5 சாம்சங் ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறனையும் கொண்டிருப்பது தெரிகிறது. இந்த மொபைலுக்கு 6ஜிபி வேரியண்டும் வரலாம்.

வடிவமைப்பு

லீக் ஆன புகைப்படங்களைப் பார்க்கையில் இந்த பிக்சல் 7ஏ போனானது பிக்சல் 7 சீரிஸ் போன்களைப்போல கூர்மையான ஓரங்களையும், சதுர வடிவையும் கொண்டிருப்பது தெரிகிறது. இந்த மொபைலின் மேல் பகுதியின் மத்தியில் பஞ்ச்-ஹோல் கட் அவுட்டில் செல்ஃபி கேமரா இருப்பது தெரிகிறது. பவர் பட்டனும், வால்யூம் பட்டனும் மொபைலின் வலது புறத்தில் உள்ளன. இதன் மேல் புறத்தில் நாய்ஸ் கேன்சலேசேஷனுக்காக ஒரு இரண்டாம் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலின் கீழ் புறத்தில் இரு பக்கமும் ஸ்பீக்கரும், நடுவில் டைப் சி ஸ்லாட்டும் வழங்கப்பட்டுள்ளது.

பின்பக்கம்

போனின் பின்பக்கத்தில் உள்ள கிடைமட்ட பட்டையில் இரண்டு கேமராக்கள் மற்றும் ப்ளாஷ் ஆகிய்வை பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேனல் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.

பிக்சல் 7ஏ போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சமீபத்தில் வெளியான கசிவுச் செய்திகளின் படி கூகுள் பிக்சல் 7ஏ மொபைல் 90Hz ரிப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.1 அங்குல FHD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கும். பிக்சல் 7 சீரிஸைப் போன்று இந்த போனானது டென்சார் ஜி2 சிப்செட்டுடன் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் இந்த போன் 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS 3.1 சேமிப்புத்திறனை கொண்டிருக்கலாம். பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வரும்.

கேமராவைப் பொருத்தவரை இந்த பிக்சல் 7ஏ போனில் 64மெகாபிக்சல் சோனி IMX787 சென்சார் முதன்மை கேமராவாகவும், 12 மெகாபிக்சல் கேமரா இரண்டாவது கேமராவாகவும் இருக்கும். வெளியான வதந்திகளின் படி பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மொபைல்களைப் போல இந்த போனிலும் 10.8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பிக்சல் 7ஏ போன் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

  • Google டென்சார் G2 Processor
  • 6 GB / 8GB ரேம்
  • 128ஜிபி சேமிப்புத்திறன்
  • 6.1 அங்குல (15.49 cm) திரை
  • 12.2 MP + 12 MP முன்பக்க கேமரா
  • 8 MP செல்ஃபி கேமரா
  • 4410 mAh பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்

 

 

The post கூகுள் பிக்சல் 7 சீரிஸின் தோற்றதிலேயே இருக்கிறது பிக்சல் 7ஏ. இணையத்தில் வெளியானது புகைப்படங்கள்! first appeared on .

]]>
ஃப்ளாக்‌ஷிப் கேமரா சென்சாருடன் வருகிறதா கூகுள் பிக்சல் 7ஏ? வெளியானது புதிய தகவல் https://www.91mobiles.com/tamil/google-pixel-7a-might-have-flagship-camera-sensors/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-7a-might-have-flagship-camera-sensors Wed, 02 Nov 2022 06:06:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3356 கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். முந்தைய பிக்சல் A சீரிஸ் மாடலை விட இதன் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும். முன்னதாக பிக்சல் 3a ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் A சீரிஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு பிக்சல் A சீரிஸ் வெளியீட்டின் போதும் பிளாக்‌ஷிப் அம்சங்கள், தரம் மற்றும் அனுபவத்திற்கான […]

The post ஃப்ளாக்‌ஷிப் கேமரா சென்சாருடன் வருகிறதா கூகுள் பிக்சல் 7ஏ? வெளியானது புதிய தகவல் first appeared on .

]]>

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும்.

முந்தைய பிக்சல் A சீரிஸ் மாடலை விட இதன் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும். முன்னதாக பிக்சல் 3a ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் A சீரிஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு பிக்சல் A சீரிஸ் வெளியீட்டின் போதும் பிளாக்‌ஷிப் அம்சங்கள், தரம் மற்றும் அனுபவத்திற்கான இடைவெளியை குறைக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. இதே வழக்கம் பிக்சல் 4a 5ஜி மாடலிலும் தொடர்ந்தது.

பிக்சல் 4a 5ஜி மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பிரீமியம் மெட்டல் பாடி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 5a மாடலிலும் தலைசிறந்த அம்சங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

கேமரா சென்சார்

பிக்சல் 6a மாடலில் மட்டும் கேமரா சென்சார்கள் முந்தைய பிக்சல் 5a மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டது. ஆண்ட்ராய்டு ஒபன் சோர்ஸ் கோட் விவரங்களில் கூகுள் நிறுவனம் பிக்சல் 7a ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் “Lynx” எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

செராமிக் பாடி

முன்னதாக டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்ட தகவல்களில் பிக்சல் ஸ்மார்ட்போன் சீனாவில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் செராமிக் பாடி கொண்டிருக்கும் என தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் செராமிக் பாடி கொண்ட முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பிக்சல் 7a பெறும்.

ஸ்மார்ட்போன்கள் பென்ச்மார்க், டிஎக்ஸ்ஒ மார்க் உள்ளிட்ட சோதனைகளில் எவ்வளவு புள்ளிகளை பெறுகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஸ்மார்ட்போன் வல்லுனர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் அதிக ஆர்வம் செலுத்துவது வாடிக்கையான விஷயமாகி விட்டது. பல முறை இதுபோன்ற சோதனை முடிவுகள் ஸ்மார்ட்போன் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய உதவும் அளவுக்கு பேசு பொருளாகி விடுன்றன.

டென்சார் சிப்செட்

அந்த வகையில் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ள டென்சார் சிப்செட்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல பிராசஸர் இல்லை என்ற கருத்து பரவலாக பரவி வருகிறது. பென்ச்மார்க் சோதனைகளின் படி புதிய டென்சார் சிப்களை விட ஸ்னாப்டிராகன் அல்லது ஏ சீரிஸ் பிராசஸர்கள் பின்னுக்குத் தள்ளி அதிக புள்ளிகளை பெற்றதே இதற்கு காரணம் ஆகும். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் “மேட் பை கூகுள்” போட்காஸ்ட் அமைந்துள்ளது.

“பாரம்பரியம் மிக்க் பென்ச்மார்க்குகள் ஒருகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சந்தை பல வழிகளில் அதிக முன்னேற்றம் அடைந்து விட்டது. கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஸ்மார்ட்போனிற்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இதுவே மக்களுக்கு பயனுள்ள அம்சங்களை கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.”

“பென்ச்மார்க்குகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் போன்கள் பழக்கத்தில் இல்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. பென்ச்மார்க் டெஸ்டில் அதிக புள்ளிகளை பெறுவதை விட செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளை வெற்றிகரமாக பிக்சல் போனகளில் வழங்குவதே முக்கியத்துவம் வாய்ந்தது,” என கூகுள் சிலிகான் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு மூத்த இயக்குனர் மோனிகா குப்தா தெரிவித்து இருக்கிறார்.

The post ஃப்ளாக்‌ஷிப் கேமரா சென்சாருடன் வருகிறதா கூகுள் பிக்சல் 7ஏ? வெளியானது புதிய தகவல் first appeared on .

]]>