POCO X5 5G https://www.91mobiles.com/tamil Tue, 14 Mar 2023 08:21:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவில் அறிமுகமானது ஜியோ மற்றும் ஏர்டெல் 5G நெட்வொர்க்குகளில் இயங்கும் POCO X5 5G போன். https://www.91mobiles.com/tamil/7-5g-band-supported-phone-poco-x5-5g-launched-in-india-check-price-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=7-5g-band-supported-phone-poco-x5-5g-launched-in-india-check-price-specifications Tue, 14 Mar 2023 08:21:02 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6847 சில காலத்திற்கு முன்பு இந்தியாவில் POCO X5 Pro 5G தொலைபேசியை அறிமுகப்படுத்திய பிறகு , இப்போது நிறுவனம் அதே தொடரின் புதிய மாடலான POCO X5 5G ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Poco X5 5G ஃபோன் இன்று இந்தியாவில் 7 5G பேண்ட்கள் (band) ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் வழங்கும் 5G சேவையையும் பயன்படுத்த முடியும். இந்த மொபைல் போன் […]

The post இந்தியாவில் அறிமுகமானது ஜியோ மற்றும் ஏர்டெல் 5G நெட்வொர்க்குகளில் இயங்கும் POCO X5 5G போன். first appeared on .

]]>

Highlights

  • POCO X5 5G போன் இந்தியாவில் 7 5G பேண்ட் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த மொபைல் Qualcomm Snapdragon 695 சிப்செட்டில் வேலை செய்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போனில் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

சில காலத்திற்கு முன்பு இந்தியாவில் POCO X5 Pro 5G தொலைபேசியை அறிமுகப்படுத்திய பிறகு , இப்போது நிறுவனம் அதே தொடரின் புதிய மாடலான POCO X5 5G ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Poco X5 5G ஃபோன் இன்று இந்தியாவில் 7 5G பேண்ட்கள் (band) ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் வழங்கும் 5G சேவையையும் பயன்படுத்த முடியும். இந்த மொபைல் போன் வேகமாக 5G இணையத்தை இயக்கும் திறன் கொண்டது. சிறந்த அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது. இனி POCO X5 5G மொபைலின் விலை, விற்பனை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை விரிவாகப் பார்க்கலாம்.

 

மெமரி

இந்தியாவில் POCO X5 5G போன் இரண்டு மெமரி வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. மற்றொன்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. இந்த ஃபோனில் 5 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் வசதியைப் பெற முடியும். இது போனுக்கு 13 ஜிபி டர்போ ரேம் செயல்திறனை வழங்குகிறது. அதே போல், Poco X5 5G இல் microSD கார்டைப் பயன்படுத்தி சேமிப்புத்திறனை 1 TB வரை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

விலை

6GB + 128ஜிபி POCO X5 5G மொபைல் ரூ.18,999 என்ற விலைக்கும், 8GB + 256ஜிபி  POCO X5 5G மொபைல் ரூ.20,999 என்ற விலைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி பயனர்கள் வங்கி அட்டை மூலம் இந்த போனை வாங்கினால் 2,000 தள்ளுபடியும் கிடைக்கும். Poco X5 5G ஷாப்பிங் தளமான Flipkart இல் மார்ச் 21 முதல் விற்பனைக்கு கிடைக்கும், இந்த மொபைலை ஜாகுவார் பிளாக், வைல்டுகேட் ப்ளூ, மற்றும் சூப்பர்நோவா கிரீன் ஆகிய வண்ணங்களில் வாங்கலாம்.

 

Poco X5 5G போனின் விவரக்குறிப்புகள்

  • 6.67 அங்குல 120Hz AMOLED டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 695
  • 5ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 48MP மூன்று பின்புற கேமராக்கள்
  • 33W 5,000mAh பேட்டரி

 

டிஸ்ப்ளே

POCO X5 5G போன் 6.67 அங்குல FullHD+ டிஸ்பிளேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்ச்-ஹோல் பாணியிலான திரை சூப்பர் AMOLED பேனலில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தில் வேலை செய்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் திரை பாதுகாக்கப்படுகிறது. 240Hz தொடு மாதிரி வீதம், 1200நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 45,00,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ போன்ற அம்சங்களும் இந்த ஃபோன் டிஸ்ப்ளேவில் கிடைக்கின்றன.

சிப்செட்

MIUI உடன் இணைந்து செயல்படும் ஆண்ட்ராய்டு 13 இல் Poco X5 5G போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன்களில் தயாரிக்கப்பட் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 ஆக்டா கோர் ப்ராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த Poco போன் ஏழு 5G பேண்டுகளை கொண்டுள்ளது. இதன் மூலம் 5G சேவையை தடையின்றி பயன்படுத்தலாம்.

 

கேமரா

புகைப்படம் எடுப்பதற்காக POCO X5 5Gயில் டிரிபிள் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனின் பின்பக்க பேனலில் LED ஃபிளாஷ் பொருத்தப்பட்ட 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த ஸ்மார்ட்போன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 13 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

இந்த POCO X5 5G ஃபோன் இரட்டை சிம் வசதியோடு வருகிறது. அதில் 5G மற்றும் 4G இரண்டையும் இயக்க முடியும். பவர் பேக்கப்பிற்காக, இந்த ஃபோனில் 5,000 mAh பேட்டரி உள்ளது, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த Poco போன் IP53 சான்றிதழ் பெற்றுள்ளது, இது தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்கிறது. NFC, IR பிளாஸ்டர், 3.5mm ஜாக் போன்ற அம்சங்களும் இந்த போனில் கிடைக்கின்றன.

 

The post இந்தியாவில் அறிமுகமானது ஜியோ மற்றும் ஏர்டெல் 5G நெட்வொர்க்குகளில் இயங்கும் POCO X5 5G போன். first appeared on .

]]>
67W பாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியுடன் வெளியாகிறது Poco X5 5G https://www.91mobiles.com/tamil/poco-x5-5g-smartphone-to-be-launched-soon-with-67w-charging-facility-specs-features-and-more/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-x5-5g-smartphone-to-be-launched-soon-with-67w-charging-facility-specs-features-and-more Mon, 28 Nov 2022 08:01:24 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3938 போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இந்த போன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் தற்போது பிஐஎஸ் இந்தியா மற்றும் எஃப்சிசி போன்ற வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. பாஸ்ட் சார்ஜிங் இந்த புதிய போக்கோ போன் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது […]

The post 67W பாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியுடன் வெளியாகிறது Poco X5 5G first appeared on .

]]>

போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இந்த போன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் தற்போது பிஐஎஸ் இந்தியா மற்றும் எஃப்சிசி போன்ற வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

பாஸ்ட் சார்ஜிங்

இந்த புதிய போக்கோ போன் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

சிப்செட்

Poco X5 5G ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் சிறந்த செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

பேட்டரி

போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவரும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் ஏற்கனவே கூறியபடி இந்த போனில் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

கேமரா

64எம்பி டர்பிள் ரியர் கேமராவுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

மெமரி

6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்தி இண்டர்னல் மெமரியை அதிகரித்துக் கொள்ள ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

டிஸ்ப்ளே

போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

5ஜி ஆதரவு, டூயல்-பேண்ட் வைஃபை,ஜிபிஎஸ், என்எப்சி, ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன். இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 67W பாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியுடன் வெளியாகிறது Poco X5 5G first appeared on .

]]>
இந்தியாவில் வெளியாகுமா போகோ எக்ஸ் 5 5ஜி போன்? https://www.91mobiles.com/tamil/poco-x5-5g-smartphone-india-launch-is-very-near-check-expected-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-x5-5g-smartphone-india-launch-is-very-near-check-expected-specifications Mon, 14 Nov 2022 06:24:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3593 மற்ற நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்தாலும் போக்கோ நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையிலேயே அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் புதிய Poco X5 5G எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 33101320I என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப்செட் இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் […]

The post இந்தியாவில் வெளியாகுமா போகோ எக்ஸ் 5 5ஜி போன்? first appeared on .

]]>

மற்ற நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்தாலும் போக்கோ நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையிலேயே அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் புதிய Poco X5 5G எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 33101320I என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்

இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது Poco X5 5G ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட் வசதியைக் கொண்டு இருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங்

இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அப்படி இருந்தால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என்று தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, ட்ரிபிள் ரியர் கேமராக்கள் ஆதரவைக் கொண்டு இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ போன் வெளிவரும்.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. கூடவே கேமிங் விளையாடுவதற்கு ஏற்றபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எப்4 ஜிடி

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-அங்குல ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் 64எம்பி Sony IMX686 பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோ அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 12

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வசதி உள்ளது. பின்பு Xiaomi MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

பேட்டரி

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் LiquidCool தொழில்நுட்பம் 3.0 ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது.

The post இந்தியாவில் வெளியாகுமா போகோ எக்ஸ் 5 5ஜி போன்? first appeared on .

]]>