realme 9i https://www.91mobiles.com/tamil Tue, 16 Aug 2022 05:25:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமாகிறது ரியல்மி நிறுவனத்தின் புதிய 5G போன்! https://www.91mobiles.com/tamil/new-5g-smartphone-realme-9i-india-launch-on-august-18/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-5g-smartphone-realme-9i-india-launch-on-august-18 Tue, 16 Aug 2022 05:25:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1618 வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரியல்மி நிறுவனத்தின் Realme 9i 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இது முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Realme 9i 5G ஸ்மார்ட்போனின் லேண்டிங் பேஜ் ஆனது ரியல்மி இந்தியா இணையதளத்தில் வெளியாகிவிட்டது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பையும், அதன் ப்ராசஸரை பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. Realme 9i 5G ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் விலை எப்படி இருக்கும்? இதில் வேறு என்னென்ன அம்சங்கள் இருக்கும்? விரிவாக பார்க்கலாம்! […]

The post அறிமுகமாகிறது ரியல்மி நிறுவனத்தின் புதிய 5G போன்! first appeared on .

]]>

வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரியல்மி நிறுவனத்தின் Realme 9i 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இது முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் லேண்டிங் பேஜ் ஆனது ரியல்மி இந்தியா இணையதளத்தில் வெளியாகிவிட்டது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பையும், அதன் ப்ராசஸரை பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. Realme 9i 5G ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் விலை எப்படி இருக்கும்? இதில் வேறு என்னென்ன அம்சங்கள் இருக்கும்? விரிவாக பார்க்கலாம்!

Appuals வழியாக லீக் ஆன Realme 9i 5G-யின் ரெண்டர்கள் வழியாக, இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க டிஸ்ப்ளேவில் டியர் டிராப் நாட்ச் (Tear drop notch) வடிவமைப்பு இருப்பதை அறிய முடிகிறது. பின்பக்கத்தை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பார்க்க முடிகிறது. அதில் இரண்டு பெரிய கேமராக்களும், 1 சிறிய கேமராவும், கூடவே ஒரு ஃப்ளாஷையும் பார்க்க முடிகிறது. ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் கூடிய பவர் பட்டன் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு ஆகிய நிறத் தேர்வுகளில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Realme 9i 5G ஆனது 6.6-அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளே பேனலை கொண்டிருக்கலாம், இது Full HD+ ரெசல்யூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சம்ப்ளிங் ரேட் போன்ற ஆதரவுகளோடு வரலாம். இந்த லேட்டஸ்ட் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 OS அடிப்படையிலான Realme UI 3.0 மூலம் இயங்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி, இது Dimensity 810 சிப்செட் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர இது 6 GB வரையிலான ரேம் மற்றும் 128 GB வரையிலான சேமிப்புத்திறனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 5GB வரையிலான விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் எதிர்பார்க்கலாம். சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் இருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெறலாம். பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் + 4செமீ ஃபோக்கல் லெங்த்-ஐ வழங்கும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா இடம்பெறலாம். இதன் கேமரா செட்டப்பை பார்க்கும் போது, இது லேட்டஸ்ட் ஆப்பிள் ஐபோன்களில் உள்ள கேமராக்களை போலவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதன் கேமரா திறன் எப்படி இருக்கிறது என்பது அறிமுகத்திற்கு பிறகே தெரிய வரும்!

இந்தியாவில் Realme 9i 5G ஸ்மார்ட்போன் ஆனது 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் ரூ.15,000-க்கு அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

The post அறிமுகமாகிறது ரியல்மி நிறுவனத்தின் புதிய 5G போன்! first appeared on .

]]>
விரைவில் அறிமுகமாகிறது Realme C33 https://www.91mobiles.com/tamil/realme-c33-may-launching-soon-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-c33-may-launching-soon-in-india Mon, 08 Aug 2022 12:06:24 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1445 ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி சி33 (Realme C33) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த மாதம் இறுதிக்குள் ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறங்கள் ரியல்மி சி33 (Realme C33) ஸ்மார்ட்போன் சாண்டி கோல்ட், அக்வா ப்ளூ மற்றும் நைட் சீ போன்ற நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம். டிஸ்பிளே ரியல்மி சி33 ஸமார்ட்போன் […]

The post விரைவில் அறிமுகமாகிறது Realme C33 first appeared on .

]]>

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி சி33 (Realme C33) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த மாதம் இறுதிக்குள் ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறங்கள்

ரியல்மி சி33 (Realme C33) ஸ்மார்ட்போன் சாண்டி கோல்ட், அக்வா ப்ளூ மற்றும் நைட் சீ போன்ற நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

டிஸ்பிளே

ரியல்மி சி33 ஸமார்ட்போன் 6.6 அங்குல IPS LCD டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. கூடவே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை இந்த போன் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

கேமரா

புதிய ரியல்மி சி33 ஸமார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மை கேமராவாக 13MP கேமரா இருக்கிறது. இதுதவிர LED பிளாஷ் மற்றம் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். செல்ஃபிகளுக்கும், வீடியோ அழைப்புகளுக்கும் என்றே 8MP கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

சேமிப்புத்திறன்

ரியல்மி சி33 ஸமார்ட்போன் 3GB / 4GB ரேம் மற்றும் 32GB / 64GB / 128GB சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.மேலும் கூடுதல் சேமிப்புத்திறனுக்கு micro SD கார்டைப் பயன்படுத்த முடியும்.

பேட்டரி

5000mAh பேட்டரி மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ரியல்மி சி33 ஸமார்ட்போன் வெளிவருகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி33 ஸமார்ட்போன்.

பிராசஸர்

புதிய ரியல்மி சி33 போனில் Unisoc பிராசஸர் வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதி இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறைந்த விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடும் பயனர்கள் இந்த மாதம் இறுதிவரை காத்திருக்கவும். அதேபோல வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி ரியல்மி 9ஐ 5ஜி (Realme 9i 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 9i 5G

ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 810 5G சிப்செட் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போனில் 6.7 அங்குல Full HD plus IPS LCD டிஸ்பிளே வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே இந்த ஸ்மார்ட்போனில் 50MP ரியர் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
கூடவே இந்த போனில், 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6GB ரேம், 128GB சேமிப்புத்திறன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post விரைவில் அறிமுகமாகிறது Realme C33 first appeared on .

]]>